உத்தர பிரதேசத்தில் கான்பூரில் உள்ள பள்ளியில் ஹிஜாபுடன் வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு

0
51

உத்தர பிரதேசம் கான்பூரில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் பர்தா, ஹிஜாபுடன் வந்தமாணவிகளுக்கு அனுமதிமறுக்கப்பட்டுள்ளது. சீருடைகளில் வராதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளிநிர்வாகம் முடிவு செய்துள்ளது.

உபியின் கான்பூரிலுள்ள பில்ஹர் பகுதியில், பில்ஹர்இண்டர் காலேஜ் எனும் பெயரில் ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. 1960-ல்துவங்கிய இப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம்வகுப்பு வரை இந்தி மொழிவாரி வகுப்புகள் நடைபெறுகின்றன. நேற்று காலை இப்பள்ளிக்கு வந்த 4 முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் மற்றும் பர்தாவை அணிந்திருந்தனர். இவர்கள் நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டு, சீருடை அணிந்து வரும்படி அறிவுறுத்தப்பட்டனர். இதற்குமறுத்த நால்வரும் முதல்வர் அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.மாவட்ட நிர்வாகம் விசாரணை: அங்கிருந்த பொறுப்பு முதல்வரான சூரஜ்சிங் யாதவ், அரசு உத்தரவின்படி பள்ளிக்கு பயில வருபவர்கள் அதற்கான சீருடைகளை அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தினார். நுழைவு வாயிலின் அருகிலுள்ள அறையில் சீருடைகள் மாற்றிய பின் பள்ளியினுள் வர வேண்டும் எனவும், இதற்கு மறுப்பவர்களை பள்ளியில் அனுமதிக்க முடியாது என்றும் கண்டிப்புடன் கூறியுள்ளார்.இதற்கு மறுப்பு தெரிவித்த மாணவிகள் பள்ளியிலிருந்து வெளியேறி விட்டனர். இவர்கள் தங்கள் பெற்றோர் அல்லது காப்பாளரை அழைத்து வரும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை கான்பூர் மாவட்டநிர்வாகத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனால், இப்பிரச்சனையில் கான்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து பில்ஹர் பகுதி வட்டாட்சியரான ராஷ்மி லாம்பா கூறும்போது, ‘‘ஹிஜாப் அல்லது பர்தா அணிந்து வருவதால் பள்ளியின் விதிமுறைகள் மீறப்படுவதாக அதன் நிர்வாகம் கூறியுள்ளது. இதன் பிறகும் அந்த மாணவிகள் சீருடை மட்டும் அணிந்துவர மறுத்துள்ளனர். வேண்டுமானால் தமது பெயர்களை பள்ளியிலிருந்து நீக்கிக் கொள்ளும்படியும் கூறிச் சென்று விட்டனர். எனினும், அவர்கள் பெற்றோர் அல்லது காப்பாளருடன் வந்துமுதல்வரை சந்திக்கும் வரைநடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தை: இதற்குமுன், உபியின் ராம்பூரிலும் இதுபோன்ற பிரச்சனை எழுந்திருந்தது. பிறகு அப்பள்ளியின் முஸ்லிம்மாணவிகளின் பெற்றோருகளுடன் பேசி பிரச்சினை தீர்க்கப்பட்டது. அதேபோல், பில்ஹர் பள்ளியின் முஸ்லிம் மாணவிகளின் பெற்றோர்களிடமும் பேச பள்ளி நிர்வாகம் முயற்சிப்பதாகத் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here