Google search engine
Home 2024

Yearly Archives: 2024

மணிப்பூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்து முன்னாள் எம்எல்ஏ.வின் மனைவி உயிரிழப்பு

0
மணிப்பூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் முன்னாள் எம்எல்ஏ ஒருவரின் மனைவி உயிரிழந்தார். மணிப்பூர் மாநிலத்தின் சாய்க்குல் சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ.,வாக இருந்தவர் யம்தோங் ஹாவோகிப் (64). பின்னர் பாஜக கட்சிக்கு தாவினார். இவர் காங்போக்பி மாவட்டத்தில் குகி மற்றும் ஜோமி இனத்தவர் அதிகம் வசிக்கும் எகோ முலாம் என்ற பகுதியில் வசித்து வந்தார். இவரது மனைவி சாருபாலா (59) மைத்தேயி இனத்தைச் சேர்ந்தவர்.இவர்களது வீட்டில் கடந்த சனிக்கிழமை 3 மணியளவில் குண்டு வெடிப்பு சத்தம் கேட்டது. வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரித்தபோது...

ரூ.9 லட்சம் வரை வருவாய் உள்ளவர்கள் வீட்டுக் கடனில் வட்டி மானியம் பெறலாம்

நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள தகுதியான பயனாளிகளுக்கு வீடுகள் வழங்குவதற்காக கடந்த 2015-ம் ஆண்டு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (பிஎம்ஏஒய்) என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன்படி ஒருவரின் வருமான உச்ச வரம்பைப் பொறுத்து, அவர்களுக்கு வீட்டுக் கடனுக்கான வட்டியில் மானியம் வழங்கப்படும். அதற்கான உச்ச வரம்பு ஆண்டுக்கு ரூ.18 லட்சமாக இருந்தது. அவர்கள் பிஎம்ஏஒய் திட்டத்தின் கீழ் வட்டி மானிய பலன்களைப் பெற முடியாது. இந்நிலையில், பிஎம்ஏஓய் 2.0 திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.9 லட்சம் வரை சம்பாதிக்கும் நகர்ப்புற...

பிஹாரில் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பக்தர்கள் பலி: 30-க்கும் அதிகமானோர் காயம்

0
பிஹார் மாநிலம் பாட்னாவில் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். 30க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். பிஹார் மாநிலம் ஜெஹனாபாத் மாவட்டத்தில் பராவர் மலைப்பகுதியில் உள்ள பாபா சித்தேஸ்வரா நாத் கோயிலில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெற்றது. குப்தர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த சிவன் கோயில் அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஒவ்வோர் ஆண்டும் ஆடி மாதம் நிகழும் இந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம், இந்நிலையில், நேற்றும் இந்த விழாவில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு...

“இந்திய பங்குச் சந்தைகள் குறித்து சந்தேகங்களைப் பரப்புவதா?” – ராகுலுக்கு பாஜக கண்டனம்

0
“அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் இந்திய பங்குச் சந்தைகளின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குவதா?” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. அதானி குழுமத்துக்கும், பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியமான ‘செபி’யின் தலைவருக்கும் இடையிலான தொடர்பு குறித்து அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை மிகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரம் அற்றவை. உண்மைக்கு புறம்பான தகவல்கள் அதில் முன்வைக்கப்பட்டுள்ளன’ என்று அதானி குழுமம் மறுப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவரான அமித் மாள்வியா...

இளம் வாக்காளர்களை குறிவைத்தே தமிழ்ப்புதல்வன் திட்டம் தொடக்கம்: சீமான் விமர்சனம்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அமைச்சர் தா.மோ.அன்பரசன், “நடிகர்களை திரைப்படங்களில் பார்க்கலாம். அத்துடன் வந்துவிட வேண்டும். நடிகர்களுக்கு அறிவுஇருக்குமா என்றால் இருக்காது. கட்சி நடத்துவது என்றால் சாதாரணமா?” என்று பேசியுள்ளார்.அவர் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியை கூட அவ்வாறு சுட்டிக் காட்டியிருக்கலாம். அதை ஏன் தவெக தலைவர் விஜயை கூறியதாக எடுத்துக்கொள்ள வேண்டும். நடிகர்களுக்கு அறிவில்லை என்றால் சரத்குமார், ராதிகா, குஷ்பு, சந்திரசேகர், நெப்போலியன் போன்றோரை ஏன்கட்சியில் சேர்த்தனர்.புதிதாக படித்து முடித்து வெளியே வரும் இளம்...

வங்கிகளை தனியார்மயமாக்க முயன்றால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்: தொழிற்சங்கம் எச்சரிக்கை

வங்கிகளை தனியார்மயமாக்க முயன்றால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் எச்சரித்துள்ளார். அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில், 3-வது தேசிய இளம் ஊழியர்கள் மாநாடு சென்னையில் நேற்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டுக்கு வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் ராஜன் நாகர் தலைமை வகித்தார். சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பின் துணைப் பொதுச் செயலாளரும், அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான சி.ஸ்ரீகுமார் மாநாட்டைத் தொடங்கி வைத்து பேசினார்.அப்போது...

ஆக.15-ம் தேதி நாட்டின் 78-வது சுதந்திர தின கொண்டாட்டம்: தேசியக்கொடி ஏற்றி விருது வழங்குகிறார் முதல்வர்

நாட்டின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆக.15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின், புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, தகைசால் தமிழர் விருது உள்ளிட்ட விருதுகளை வழங்குகிறார். சுதந்திர தினத்தை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாட்டின் 78- வது சுதந்திர தினம் வரும் ஆக.15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, தலைநகர் சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். முன்னதாக, அவர் காவல் துறையின்...

அரசு உதவிபெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் மத அடிப்படையில் நியமனங்கள் கூடாது: நீதிமன்றம்

அரசு உதவிபெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் மத அடிப்படையில் நியமனங்கள் நடைபெறக் கூடாது, என உயர் நீதிமன்றம் தெரிவித்தது. நெல்லை சிஎஸ்ஐ திருமண்டலப் பொருளாளர் மனோகர் தங்கராஜ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: நெல்லை, தென்காசி மாவட்டங்களில் சிஎஸ்ஐ திருமண்டல நிர்வாகத்தின்கீழ் ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. இந்த கல்வி நிறுவனங்களின் நிர்வாகக் குழுவின் பதவிக்காலம் முடிந்த நிலையில், திருமண்டலப் பேராயர் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, ஆசிரியர் பணியிடங்களை நிரப்பி வருகிறார். ஆசிரியர் நியமனத்தில் பேராயர் தன்னிச்சையாக செயல்படக்கூடாது,...

அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் பாதிப்பு குறித்த பரிசோதனை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

இந்த ஆண்டு அனைத்து மாவட்டங்களிலும், புற்றுநோய் பாதிப்பு குறித்த பரிசோதனைகள் நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். ஈரோடு அரசு மருத்துவமனையில் கட்டணப் படுக்கை அறை சிகிச்சை வசதியைத் தொடங்கி வைத்து, மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கட்டணப் படுக்கை அறைகள் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 16 மாவட்டங்களில் கட்டணப் படுக்கை அறை வசதிஏற்படுத்த முடிவு செய்து, கோவை,மதுரை, சேலம் ஆகிய மூன்றுமாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, ஈரோடு அரசு மருத்துவமனையில்...

குமரி பகவதி அம்மன் கோயிலில் புத்தரிசி பூஜை

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் ஆடி மாத நிறை புத்தரிசி பூஜை வரும் 12 ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலையில் வயல்களிலிருந்து நெற்கதிர்கள் அறுவடை செய்து, கட்டுகளாக குமரி சாஸ்தா கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். பின்னர் நெற்பயிர் கட்டுகளை கோவில் மேல்சாந்தி தலையில் சுமந்து அம்மனுன் முன் படைத்து பூஜை செய்வர். அடுத்து நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரி மாவட்டத்தில் முட்டை விலை அதிரடி உயர்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் முட்டை விலை உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களில் 6 ரூபாய் வரை உயர்ந்த முட்டை, தற்போது மேலும் 50 காசுகள் உயர்ந்து 6 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது....

பத்மநாபபுரம்: பெண் கொலை ; முன்னாள் ராணுவ வீரருக்கு ஆயுள்

முளகுமூடு பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மெர்லின் ராஜ் (50), பணியில் ஒழுங்கீனம் காரணமாக 2014-ல் ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டவர். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 7.2.2021 அன்று...

குமரி: குரியன்விளை பத்ரகாளி கோவிலில் தீ மிதி விழா

களியக்காவிளையில் உள்ள குரியன்விளை பத்திரகாளி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் நேற்று நள்ளிரவு அக்கினி காவடி பூஜை நடைபெற்றது. இந்த விழாவில் சண்டிகா ஹோமம், நவக்கிரக ஹோமம், அக்கினி காவடி, கலை நிகழ்ச்சிகள்,...