Google search engine
Home 2024

Yearly Archives: 2024

அரசு உதவி வழக்கறிஞர் பணி தேர்வு முறையில் மாற்றம்: கட்டாய தமிழ் மொழி தாள் தேர்வு இடம்பெறுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

அரசு உதவி குற்றவியல் வழக்கறிஞர் (கிரேடு-2) தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. புதிய முறையில் முதல்நிலைத் தேர்வில் கூடுதலாக பொது அறிவுத் தாள் தேர்வும், மெயின் தேர்வில் கூடுதலாக கட்டாய தமிழ் மொழி தாள் தேர்வும் இடம்பெறுகின்றன. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் ச.கோபாலசுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு பொதுப்பணியில் உள்ள அரசு உதவி வழக்கறிஞர் (கிரேடு-2) பதவிக்கான புதிய தேர்வு திட்டம் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.இந்நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய தேர்வுத் திட்டத்தின்படி, முதல்நிலைத் தேர்வில் சட்டம் தொடர்பான...

தொடக்க கல்வித் துறையில் பணியாளர் நிர்ணயம்: சரண் செய்த பணியிடங்களை பதிவு செய்யக்கூடாது என உத்தரவு

அரசுப் பள்ளிகளில் பணியாளர் நிர்ணயத்தின்போது சரண் செய்யப்பட்ட பணியிடங்களை மீண்டும் பதிவு செய்யக்கூடாது என்று தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: நடப்பு கல்வியாண்டில் (2024-25) கடந்த ஆகஸ்ட்1-ம் தேதி நிலவரப்படி பள்ளிகளில்உள்ள மாணவர் எண்ணிக்கைக்கேற்ப இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயம் செய்ய வேண்டும். அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.அதன்படி, தமிழ்வழி மற்றும்ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களை தனித்தனியாக கணக்கிட்டு வகுப்புவாரியாக பணி நிர்ணயம்...

25 ஆயிரம் தாழ்வழுத்த தொழில் நிறுவனங்களில் ஸ்மார்ட் மீட்டர்: மின்வாரியம் நடவடிக்கை

தமிழகத்தில் உள்ள 25 ஆயிரம் தாழ்வழுத்த தொழில் நிறுவனங்களில் ஸ்மார்ட் மீட்டரை பொருத்தும் திட்டத்தை செயல்படுத்த, மென்பொருள் உருவாக்கும் பணியில் மின்வாரியம் ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் உயர் அழுத்தப் பிரிவில் இடம்பெறும் 11 ஆயிரம் தொழிற்சாலைகளில் மட்டும் ஆளில்லாமல் கணக்கெடுக்கும் தானியங்கி மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மீட்டரில் மாதந்தோறும் கணக்கெடுக்கும் தேதி, மென்பொருள் வடிவில் பதிவேற்றம் செய்யப்பட்டு தொலைத் தொடர்பு வசதியுடன் அலுவலக சர்வரில் இணைக்கப்பட்டுள்ளது. மின்கணக்கெடுப்பு தேதி வந்ததும் தானாகவே கணக்கெடுத்து நுகர்வோருக்கு கட்டண விவரம் அனுப்பப்படுகிறது.இதேபோல், தாழ்வழுத்தப் பிரிவில் இடம்பெறும் வீடு உள்ளிட்ட...

தமிழகம் வரும் முதலீடுகளால் அதிக வேலைவாய்ப்பு: தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நம்பிக்கை

தமிழகத்துக்கு வரவுள்ள புதிய முதலீடுகளால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) சார்பில் தமிழகத்தில் தொழில்துறையின் கீழ் குறுந்தொழில் முனைவோரை வலுப்படுத்துவது தொடர்பாக கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது. கூட்டமைப்பின் மாநில தலைவர் வத்ஸ் ராம் தலைமை தாங்கினார். தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிஐஐயின் ‘புதிய பயணம் வளர்ச்சியை நோக்கி’ எனும் திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது: ரூ.45 ஆயிரம் கோடிக்கு புதிய முதலீடுகள்...

கருணாநிதி உருவம் பொறித்த நாணயம் வெளியீட்டு விழா: பழனிசாமி, அண்ணாமலைக்கு அழைப்பு

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி உருவம் பொறித்த நாணய வெளியீட்டு விழா ஆக. 17-ல் நடக்கிறது. இதில் பங்கேற்க திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சித் தலைவர்பழனிசாமி, பாஜக மாநில தலைவர்அண்ணாமலை உள்ளிட்டோருக்கும் அழைப்பிதழ் தரப்பட்டுள்ளது. மறைந்த தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழா அரசு சார்பிலும், திமுக சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, அவரது உருவம் பொறிக்கப்பட்ட ரூ.100 மதிப்புள்ள நாணயம் கடந்த ஜூன் 4-ம் தேதி மத்திய அரசால் வெளியிடப்பட்டது.இதையடுத்து, இந்த...

என்ஐஆர்எஃப் தரவரிசை பட்டியலில் 6-வது முறையாக சென்னை ஐஐடி முதலிடம்: சிறந்த மாநில பல்கலைக்கழகமாக அண்ணா பல்கலை. தேர்வு

தேசிய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில், சென்னை ஐஐடி, அண்ணாபல்கலைக்கழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தேசிய அளவில் சிறந்த பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை ஒட்டுமொத்த கல்வி நிறுவனங்கள் என்ற அளவிலும், பல்கலைக்கழகம், பொறியியல், நிர்வாகம், சட்டம், மருத்துவம், மருந்தியல் உள்ளிட்ட 16 பாடப்பிரிவுகள் அளவிலும் மத்திய கல்விஅமைச்சகம் வெளியிட்டு வருகிறது.கற்றல், கற்பித்தல், உள்கட்டமைப்பு வசதி, ஆராய்ச்சி, உருவாக்கப்படும் பட்டதாரிகளின் நிலை போன்ற அம்சங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.அந்த வகையில், 2024-ம் ஆண்டு தரவரிசைப் பட்டியலை டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய...

நகராட்சி தூய்மை பணியாளர் மகள் நகராட்சி ஆணையரானார்: பணி நியமன ஆணை வழங்கி முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத்துறை தொடர்பான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும், டிஎன்பிஎஸ்சி மூலம் நகராட்சி நிர்வாகத்துறைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். இதில், நகராட்சி ஆணையர்களுக்கும் பணி நியமனஆணைகளை வழங்கினார். அதன்படி நகராட்சி ஆணையருக்கான பணி நியமன ஆணை பெற்ற துர்கா என்பவர் கூறும்போது, ‘‘தமிழக அரசின் அனைத்து சலுகைகளையும் பயன்படுத்தி படித்தாலே நாம் நல்ல நிலைக்கு உயரலாம். நான் அரசுப்பள்ளி, அரசுக் கல்லூரியில்தான் படித்தேன். டிஎன்பிஎஸ்சி பயிற்சியின்போதும், அரசு பயிற்சி மையத்தையும் பயன்படுத்திக்...

வங்கதேசத்தில் 500 ஆண்டு பழமையான கோயிலை பாதுகாக்கும் முஸ்லிம் மாணவர்கள்

வங்கதேசத்தில் வெடித்துள்ள மாணவர்கள் போராட் டம் அங்குள்ள சிறுபான்மையினருக்கு பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது. பல மத வழிபாட்டு தலங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் தாக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. டாக்காவின் முக்கியமான மற்றும் பரபரப்பான மவுச்சக் பஜார் அருகே அமைந்துள்ள 583 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ ஸ்ரீ சித்தேஸ்வரி காளி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. தற்போது அந்த கோயிலுக்கு வன்முறையாளர்களால் எந்த ஆபத்தும் நேராத வகையில் முஸ்லிம் மாணவர் குழு இரவும் பகலுமாக சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு...

அமெரிக்காவின் சதியால் ஆட்சியை இழந்தேன்: ஷேக் ஹசீனா குற்றச்சாட்டு

அமெரிக்காவின் சதியால் ஆட்சியை இழந்ததாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் இடஒதுக்கீடு நடைமுறையை எதிர்த்து கடந்த ஜூன், ஜூலையில் மாணவர் சங்கங்கள் போராட்டம் நடத்தின. இது கலவரமாக மாறியதால், கடந்த 5-ம் தேதி பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இந்நிலையில், இதுதொடர்பாக அவர் அளித்த நேர்காணலில் கூறியதாவது:வங்கதேசத்துக்கு சொந்தமான செயின்ட் மார்ட்டின் தீவைதங்களிடம் ஒப்படைக்க அமெரிக்கா வலியுறுத்தியது. அந்த தீவை அமெரிக்காவுக்கு வழங்கியிருந்தால், ஆட்சியில் நீடித்திருப்பேன். ஆனால், வங்கதேசத்தின் நலனுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்தேன்....

பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடம்: கோலாகலமாக நிறைவுற்ற பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி

பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து இன்று அதிகாலை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நிறைவுற்றது. 33-வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த மாதம் 26-ம் தேதி கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் 206 நாடுகளை சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று இருந்தனர். ஒலிம்பிக் போட்டி தொடக்க விழா அணிவகுப்பு பாரிஸ் நகரில் உள்ள சீன் நதியில் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது . படகுகளில்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரி மாவட்டத்தில் முட்டை விலை அதிரடி உயர்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் முட்டை விலை உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களில் 6 ரூபாய் வரை உயர்ந்த முட்டை, தற்போது மேலும் 50 காசுகள் உயர்ந்து 6 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது....

பத்மநாபபுரம்: பெண் கொலை ; முன்னாள் ராணுவ வீரருக்கு ஆயுள்

முளகுமூடு பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மெர்லின் ராஜ் (50), பணியில் ஒழுங்கீனம் காரணமாக 2014-ல் ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டவர். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 7.2.2021 அன்று...

குமரி: குரியன்விளை பத்ரகாளி கோவிலில் தீ மிதி விழா

களியக்காவிளையில் உள்ள குரியன்விளை பத்திரகாளி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் நேற்று நள்ளிரவு அக்கினி காவடி பூஜை நடைபெற்றது. இந்த விழாவில் சண்டிகா ஹோமம், நவக்கிரக ஹோமம், அக்கினி காவடி, கலை நிகழ்ச்சிகள்,...