நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அமைச்சர் தா.மோ.அன்பரசன், “நடிகர்களை திரைப்படங்களில் பார்க்கலாம். அத்துடன் வந்துவிட வேண்டும். நடிகர்களுக்கு அறிவுஇருக்குமா என்றால் இருக்காது. கட்சி நடத்துவது என்றால் சாதாரணமா?” என்று பேசியுள்ளார்.அவர் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியை கூட அவ்வாறு சுட்டிக் காட்டியிருக்கலாம். அதை ஏன் தவெக தலைவர் விஜயை கூறியதாக எடுத்துக்கொள்ள வேண்டும். நடிகர்களுக்கு அறிவில்லை என்றால் சரத்குமார், ராதிகா, குஷ்பு, சந்திரசேகர், நெப்போலியன் போன்றோரை ஏன்கட்சியில் சேர்த்தனர்.புதிதாக படித்து முடித்து வெளியே வரும் இளம் வாக்காளர்களை குறிவைத்து தான் புதுமைபெண், தமிழ்ப் புதல்வன் போன்றதிட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. படித்து முடித்து வெளியே வரும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை கொடுப்பது தான் சரியான திட்டம். அதைவிடுத்து குடும்பத்தில் அம்மா, மகன், மகள் என அனைவருக்கும் தனித்தனியாக ரூ.1000 வழங்குது என்பது திமுக அரசின் கடந்த 3 ஆண்டுகால சாதனைகளில் ஒன்றாக மட்டுமே இருக்குமென்றால், திமுகவை ஆயிரம் ரூபாய் அரசு என்று தான் கூறவேண்டும் என்றார்.