ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை: 70 பேருக்கு வழங்கியது இபிஎஃப்ஓ

0
21

‘பிர​யாஸ்’ திட்​டத்​தின் கீழ், ஓய்வுபெறும் நாளி​லேயே ஊழியர்​களுக்​கான ஓய்வூதியம் பெறு​வதற்​கான ஆணைகளை 70 பேருக்கு, தொழிலா​ளர் வருங்​கால வைப்பு நிதி நிறு​வனம் வழங்கியது.

மத்​திய அரசு ‘பிர​யாஸ்’ என்ற திட்​டத்தை அறி​முகப்​படுத்​தி​யுள்​ளது. இத்​திட்​டத்​தின் கீழ், ஓய்வு பெறும் ஊழியர்​கள், ஓய்​வு​பெறும் நாளி​லேயே அவர்​களுக்கு ஓய்வூதியம் வழங்​கப்​படும். அதன்​படி, ஏப்ரல் மாதத்​தில் பணி மூப்பு காரண​மாக, ஓய்வு பெற்ற 70 ஊழியர்களுக்கு ஓய்​வூ​திய வழங்​கல் ஆணை​களை தொழிலா​ளர் வருங்​கால வைப்பு நிதி நிறு​வனத்​தின் (இபிஎஃப்ஓ) சென்னை மண்​டலம் வழங்கி சிறப்​பித்​தது.

சென்னை, ராயப்​பேட்டை மண்டல அலு​வலக வளாகத்​தில், நேற்​று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில், ஓய்​வு​ பெற்ற ஊழியர்​களுக்கு ஓய்வூதிய வழங்கல் ஆணை​களை மண்டல வருங்​கால வைப்பு நிதி ஆணை​யர் தேபி பிர​சாத் பட்​டாச்​சார்யா வழங்​கி​னார்.

நிகழ்ச்​சி​யில், மண்டல வருங்​கால வைப்பு நிதி ஆணை​யர் (ஓய்வூதியம்) நீரஜ் சிங், உதவிஆணை​யர்கள் பிபின்​கு​மார், சந்திரசேகரன், கணக்கு அலு​வலர் (ஓய்வூதியம்) ஏ.பிர​காஷ், மேற்​பார்​வை​யாளர் கே.ஆனந்​தி, முதன்மை அதி​காரி சு.செந்​தில்​வேல் ஆகியோர் முன்​னிலை வகித்​தனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here