ரூ.9 லட்சம் வரை வருவாய் உள்ளவர்கள் வீட்டுக் கடனில் வட்டி மானியம் பெறலாம்

0
51

நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள தகுதியான பயனாளிகளுக்கு வீடுகள் வழங்குவதற்காக கடந்த 2015-ம் ஆண்டு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (பிஎம்ஏஒய்) என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன்படி ஒருவரின் வருமான உச்ச வரம்பைப் பொறுத்து, அவர்களுக்கு வீட்டுக் கடனுக்கான வட்டியில் மானியம் வழங்கப்படும். அதற்கான உச்ச வரம்பு ஆண்டுக்கு ரூ.18 லட்சமாக இருந்தது. அவர்கள் பிஎம்ஏஒய் திட்டத்தின் கீழ் வட்டி மானிய பலன்களைப் பெற முடியாது.

இந்நிலையில், பிஎம்ஏஓய் 2.0 திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.9 லட்சம் வரை சம்பாதிக்கும் நகர்ப்புற குடும்பங்கள் இத்திட்டத்தின் கீழ் கடனுக்கான வட்டி மானியத்தை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த சலுகை 120 சதுர மீட்டருக்குள் கட்டப்படும் வீடுகளுக்கு மட்டுமே பொருந்தும். இதற்கான ஒப்புதலை மத்திய அரசு சமீபத்தில் வழங்கி உள்ளது. இத்திட்டம் ஏழைகள், குறைந்த வருவாய் உள்ளவர்கள், நடுத்தர மக்களுக்கு நிதிச்சுமையை குறைக்க உதவும் என்று அதிகாரி கள் கூறியுள்ளனர்.இதற்கு முன்னர் வட்டி மானிய திட்டம் 200 சதுர மீட்டர் கொண்ட சொத்து மற்றும் ரூ.18 லட்சம் வருவாய் உச்ச வரம்பாக இருந்தது. அதேபோல் அதிகபட்ச வட்டி மானியம் முன்பு சராசரியாக ரூ.2.3 லட்சமாக இருந்தது, தற்போது ரூ.1.8 லட்சமாக வரையறுக்கப்பட்டுள்ளது.மேலும், பெருநகரங்கள் மற்றும் நகரங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் குறைந்த வாடகையில் தங்குவதற்கு வீடுகள் (ஏஆர்எச்) கட்டுவதற்கான ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி30 சதுர மீட்டருக்குள் கட்டப்படும்ஒரு படுக்கை அறை வீட்டுக்குரூ.1.5 லட்சம் வரை மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து ஊக்கத்தொகை கிடைக்கும். இதுதொடர்பான முழு விவரங்களுடன் அரசு இணையதளம் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாடகையை உள்ளூர் அரசு அதிகாரிகள் நிர்ணயம் செய்வார்கள். இதன்மூலம் மாத தவணையும், வட்டியும் கணிசமாகக் குறையும்.

தவிர ஆண்டுக்கு ரூ.3 லட்சத்துக்குள் வருவாய் உள்ள பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் (இடபிள்யூஎஸ்), வீடு கட்டிக் கொள்ள ரூ.2.5 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும் என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here