இலங்கை கேப்டனாக சரித் அசலங்கா நியமனம்

0
180

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையே 3 டி 20ஆட்டங்கள், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொண்ட தொடர் நடைபெற உள்ளது. இதில் டி20 கிரிக்கெட் தொடர்வரும்27-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் டி 20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக சரித் அசலங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

டி 20 உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணிலீக் சுற்றுடன் வெளியேறி இருந்ததால் கேப்டன் பதவியில் இருந்து ஆல்ரவுண்டரான வனிந்து ஹசரங்கா விலகியிருந்தார். இதைத் தொடர்ந்து இந்தியஅணிக்கு எதிரான தொடரில் சரித் அசலங்கா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்ஜெயா டி சல்வா, சதீரா சமரவிக்ரமா, தில்ஷன் மதுஷங்கா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.34 வயதான தினேஷ் சந்திமால் அணிக்கு திரும்பி உள்ளார். இடதுகை வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான சமிந்து விக்ரமசிங்கே அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். இவர், சென்னைஎம்ஆர்எஃப் வேகப்பந்து வீச்சு அகாடமியில் பயிற்சி பெற்றவர்.அணி விவரம்: சரித் அசலங்கா(கேப்டன்), பதும் நிசங்கா, குஷால்ஜனித் பெரேரா, அவிஷ்கா பெர்னாண்டோ, குஷால் மெண்டிஸ், தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ், தசன் ஷனகா, வனிந்து ஹசரங்கா, துனித் வெல்லலகே, மஹீஷ் தீக் ஷனா, சமிந்து விக்ரமசிங்கே, பதிரனா, நுவான்துஷாரா, துஷ்மந்தா சமீரா, பினுரா பெர்னாண்டோ.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here