அதிமுக ஆட்சியின் திட்டங்களை திமுக அரசு சிறப்பாக செயல்படுத்துகிறது: பேதம் பார்க்கும் பண்பு இல்லை என விளக்கம்

0
230

அதிமுக ஆட்சியின் திட்டங்களை திமுக மேலும் சிறப்பாகசெயல்படுத்துகிறது. பேதம்பார்க்கும் பண்பு எங்களிடம் இல்லை என்று திமுக விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக திமுக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக நிறைவேற்றிய திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டதாகவும், திட்டத்தை மூடிவிட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குறை கூறியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தால் அம்மா உணவகங்களை மூடிவிடுவார்கள் என்று அவர் தெரிவித்திருந்தார். ஆனால்,அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படுகின்றன. கடந்த 3 ஆண்டு திமுக ஆட்சியில் அம்மா உணவகங்களுக்கு ரூ.250 கோடி நிதிஒதுக்கி, சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.கடந்த ஜூலை 19-ல் அம்மாஉணவகத்தை நேரில் பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், உடனடியாக ரூ.21 கோடி ஒதுக்கி உத்தரவிட்டார்.

அதிமுக கொண்டு வந்த திட்டம் என்பதற்காக, எந்த திட்டத்தையும் முதல்வர் புறக்கணிக்கவில்லை. கூடுதல் நிதி ஒதுக்கி, சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். எந்த திட்டத்தையும் யார் கொண்டுவந்தது என்று திமுக பார்ப்பது கிடையாது. மக்களுக்கு நன்மை பயக்கும் என்றால், அதை மேலும் சிறப்பாக நிறைவேற்றுவதே திமுகவின் வழக்கமாகும்.திமுக திட்டங்கள் முடக்கம்: ஆனால், திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அதிமுக ஆட்சியில் முடக்கப்பட் டன. அண்ணா நினைவாக ரூ.172 கோடியில் திமுக ஆட்சியில் கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகத்தை சிதைத்தனர். நீதிமன்றத்தின் கெடுபிடியால் அண்ணா நூற்றாண்டு நூலகம் செயல்பட்டது.

தலைமைச் செயலக இடநெருக்கடிக்குத் தீர்வுகாண, ஓமந்தூரார் அரசினர் தோட்டவளாகத்தில் ரூ.1,000 கோடியில் நிர்மாணித்து, பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கால்திறக்கப்பட்ட புதிய சட்டப்பேரவை-தலைமைச் செயலக கட்டிடத்தை, மருத்துவமனை யாக மாற்றினார்கள்.

திமுக கொண்டுவந்த நமக்கு நாமே, அண்ணா மறுமலர்ச்சி, சமத்துவபுரம், உழவர் சந்தை, மனுநீதி, காப்பீட்டுத் திட்டம், சமச்சீர் கல்வி, மினி பஸ் திட்டங்களையும் சீர் குலைத்தது அதிமுக ஆட்சிதான். இதனால்தான், இடைத்தேர்தலில் போட்டியிடமுடியாத நிலைக்கு அதிமுக உள்ளானது.

பெரியார், அண்ணா, கருணாநிதி சுட்டிக்காட்டிய முன்னேற்றப் பாதையில் பயணித்து, தமிழகத்தை நாட்டின் முன்னணி மாநிலமாக உயர்த்தி வருகிறார் முதல்வர்ஸ்டாலின். இதைப் பொறுக்கமுடியாமல், தமிழக மக்களைஏமாற்றுகிறார் எதிர்க்கட்சித் தலைவர்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here