சென்னை மாநகராட்சியில் சட்ட விதிப்படி சொத்து கணக்கை மேயர் பிரியா உள்ளிட்ட 157 கவுன்சிலர்கள் அளிக்கவில்லை

0
17

மாநக​ராட்​சி​யில் மேயர் பிரியா உள்​ளிட்ட 157 கவுன்​சிலர்​கள் சட்ட விதி​களின்​படி சொத்துக் கணக்கை அளிக்​க​வில்லை என தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

தமிழக அரசு, தமிழ்​நாடு நகர்ப்​புற உள்​ளாட்​சிகள் சட்​டத்தை கடந்த 1998-ம் ஆண்டு கொண்டு வந்​தது. இதில் கடந்த 2022-ம் ஆண்டு திருத்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டது. அதில் 34ஏ என்ற புதிய விதி சேர்க்​கப்​பட்​டது.

அதில், “நகர்ப்​புற உள்​ளாட்​சிகளில் தலை​மைப் பொறுப்​பில் இருப்​பவர்​கள், துணை தலை​மைப் பொறுப்​பில் இருப்​பவர்​கள் மற்​றும் கவுன்​சிலர்​கள் தங்​கள் சொத்​துக் கணக்​கு, தங்​கள் மனை​வி, குழந்​தைகளின் சொத்​துக் கணக்​கு​களை பதவி​யேற்ற 90 நாட்​களுக்​குள் மாநக​ராட்​சி​யில் சமர்ப்​பிக்க வேண்​டும்” என கூறப்​பட்​டுள்​ளது.

அதனைத் தொடர்ந்து 2023-ம் ஆண்டு தமிழ்​நாடு நகரப்​புற உள்​ளாட்சி அமைப்​பு​கள் விதி​கள் கொண்​டு​வரப்​பட்​டன. அதில் 183-வது விதி​யில், “அந்த சொத்​துக் கணக்கு விவரங்​களை மாநக​ராட்சி ஆணை​யரிடம் வழங்க வேண்​டும். அதை ஆணை​யர் பாது​காப்​பாக வைத்​திருக்க வேண்​டும்” என கூறப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில் ஆம் ஆத்மி கட்​சி​யைச் சேர்ந்த வழக்​கறிஞர் சங்​கர் என்​பவர் சென்னை மாநக​ராட்சி கவுன்​சிலர்​கள் தாக்​கல் செய்த சொத்​துக் கணக்கு விவரங்​கள் குறித்​து, தகவல் அறி​யும் உரிமை சட்​டத்​தின் கீழ் கேட்​டிருந்​தார்.

இதற்கு பதிலளித்த மாநக​ராட்சி நிர்​வாகம், “சென்னை மாநக​ராட்​சி​யில் உள்ள 200 வார்டு கவுன்​சிலர்​களில் 157 பேர் சொத்​துக் கணக்கை தாக்​கல் செய்​ய​வில்​லை. இதில் 4 பேர் ஏற்​கெனவே உயி​ரிழந்​து​விட்​டனர்.

2 பேர் தகுதி நீக்​கம் செய்​யப்​பட்​டு​விட்​டனர். 43 கவுன்​சிலர்​கள் மட்​டுமே தங்​கள் சொத்​துக் கணக்கை தாக்​கல் செய்​துள்​ளனர்” என தெரி​வித்​திருந்​து. சொத்​துக் கணக்கை தாக்​கல் செய்​யாதவர்​கள் பட்​டியலை​யும் மாநக​ராட்சி வழங்​கி​யுள்​ளது.

அதில் மாநக​ராட்சி மேயர் ஆர்​.பிரி​யா, துணை மேயர் மு.மகேஷ்கு​மார் உள்​ளிட்ட 157 கவுன்​சிலர்​களின் பெயர்​கள் இடம்​பெற்​றுள்​ளன. இவர்​களின் பதவிக்​காலம் இன்​னும் 8 மாதங்​கள் மட்​டுமே உள்ள நிலை​யில், அரசின் விதி​களை மதிக்​காமல் மக்​கள் பிர​தி​நி​தி​களாக தொடர்ந்து வரு​வது சர்ச்​சைக்​கு உள்​ளாகி​யுள்​ளது.

இவர்​கள் மீதான நடவடிக்கை தொடர்​பாக மாநக​ராட்சி அதி​காரி​களிடம் கேட்​ட​போது, “சட்ட விதி​களில் தலை​மை, துணை தலை​மைப் பொறுப்​பில் இருப்​பவர்​கள், கவுன்​சிலர்​கள் பதவி​யேற்ற 90 நாட்​களுக்​குள் சொத்​துக் கணக்கை தாக்​கல் செய்ய வேண்​டும் என்று தான் உள்​ளது.

தவறி​னால், அவர்​கள் மீது எடுக்க வேண்​டிய நடவடிக்கை தொடர்​பாக எந்த அம்​சங்​களும் இடம்​பெற​வில்​லை. இருப்​பினும் 30 நாட்​களுக்​குள் தங்​கள் சொத்​துக் கணக்​கு​களை தாக்​கல் செய்​யு​மாறு அனைத்து கவுன்​சிலர்​கள், மேயர், துணை மேயருக்​கு அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது” என்​றனர்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here