“காவிரி பிரச்சினையில் தவெக அரசின் அர்த்தமற்ற மவுனம் அதிர்ச்சி அளிக்கிறது” – மு.க.ஸ்டாலின்

0
17

‘காவிரி டெல்டாவின் உயிர்நாடிப் பிரச்சினையில் த.வெ.க. அரசின் அர்த்தமற்ற மவுனம் அதிர்ச்சி அளிக்கிறது’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தமிழ்நாட்டின் கோரிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையம் மீண்டும் மீண்டும் நிராகரித்து கால தாமதம் செய்து கொண்டிருக்கிறது. ஏற்கெனவே முழுக் கடன் தள்ளுபடி செய்யாமல் விவசாயிகளை ஏமாற்றிவிட்டது இந்த அரசு?

குறுவையும் பாதித்து, சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகும் பேராபத்தில் காவிரி டெல்டா விவசாயிகள் உள்ளனர்.

நெருக்கடியான இந்தச் சூழ்நிலையில், முதல்வர், பிரதமரை சந்தித்திருக்க வேண்டும். ஆனால், முதல்வரும் பேசவில்லை. நீர்வளத் துறை அமைச்சரும் பேசவில்லை.

மேகேதாட்டு அணைக்கு எதிரான சட்டப்பேரவை தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளையும் அழைத்துக் கொண்டு பிரதமரிடம் நேரில் கொடுக்க நேரமில்லாமல் இருக்கிறார் முதல்வர்.

தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடக அரசையும் தட்டிக் கேட்க முடியாமல் தவிக்கிறார். அர்த்தமற்ற மவுனத்தைக் கலைத்து மாநில உரிமையை நிலைநாட்ட போர்க்கால நடவடிக்கையில் ஈடுபடுக.

குறுவை பாதிப்பு மற்றும் சம்பா சாகுபடி ஏமாற்றத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு “புதிய நிவாரணத் தொகுப்பினை” அறிவித்திடுக’ எனத் தெரிவித்துள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here