பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு ஜாமீன் மறுப்பு

0
15

தமிழக முதல்​வரை அவதூறாக பேசிய வழக்​கில் கைது செய்​யப்​பட்டு சிறை​யில் அடைக்கப்பட்டுள்ள மார்க்​கண்​டேயன் எம்​எல்ஏ ஜாமீன் மனுவை தூத்​துக்​குடி முதலா​வது குற்​ற​வியல் நீதித்​துறை நடு​வர்​மன்​றம் நேற்று தள்​ளு​படி செய்​தது. மேலும், அவரை காவலில் எடுத்து விசா​ரிக்க அனு​மதி கோரிய காவல் துறை​யினரின் மனுவை​யும் நீதிபதி தள்​ளு​படி செய்​தார்.

தூத்​துக்​குடி மாவட்​டம் கோவில்​பட்​டி​யில் கடந்த 18-ம் தேதி நடை​பெற்ற திமுக பொதுக்​கூட்​டத்​தில் தமிழக முதல்​வர் விஜய் குறித்து அவதூறாக​வும், மிரட்​டும் வகை​யிலும் பேசி​ய​தாக விளாத்​திக்​குளம் தொகுதி திமுக எம்​எல்ஏ ஜி.​வி.​மார்க்​கண்​டேயன் மீது தூத்​துக்​குடி மாவட்ட குற்​றப்​பிரிவு போலீ​ஸார் 3 பிரிவு​களின்கீழ் வழக்​குப் பதிவு செய்​தனர்.

கடந்த 20-ம் தேதி மார்க்​கண்டேயன் கைது செய்​யப்​பட்​டு, பாளை​யங்​கோட்டை மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டார்.

இந்​நிலை​யில் மார்க்​கண்​டேயனுக்கு ஜாமீன் வழங்​கக் கோரி, தூத்​துக்​குடி முதலா​வது குற்​ற​வியல் நீதித்​துறை நடு​வர் மன்​றத்​தில் மனுத் தாக்​கல் செய்​யப்​பட்​டது. அது​போல், அவரை 2 நாட்​கள் போலீஸ் காவலில் எடுத்து விசா​ரிக்க அனு​மதி கோரி, காவல் துறை சார்​பிலும் மனுத்​தாக்​கல் செய்​யப்​பட்​டது.

தூத்​துக்​குடி முதலா​வது குற்​ற​வியல் நீதித்​துறை நடு​வர் மன்​றத்​தில், நீதிபதி சுமதி முன்​னிலை​யில் இந்த மனுக்​கள் நேற்று விசா​ரணைக்கு வந்​தன. பாளை​யங்​கோட்டை சிறை​யில் இருந்து மார்க்​கண்​டேயன் எம்​எல்ஏ பலத்த பாது​காப்​புடன் அழைத்​து​ வரப்​பட்டு நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்​டார்.

அப்​போது, மார்க்​கண்​டேயனிடம் போலீ​ஸார் ஏற்​கெனவே போது​மான அளவுக்கு விசா​ரணை நடத்​தி​விட்​டனர், எனவே, போலீஸ் காவல் தேவை​யில்லை என எம்​எல்ஏ தரப்பு வழக்​கறிஞர்​கள் வாதிட்​டனர். இதே​போல் முதல்​வர் குறித்து மிகக் கடுமை​யாக​வும், மிரட்​டல் விடுத்​தும் பேசி​யிருப்​ப​தால் அவருக்கு ஜமீன் தரக்​கூ​டாது என காவல் துறை தரப்பில் வாதிட்​டனர்.

இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிபதி சும​தி, மார்க்​கண்​டேயன் எம்​எல்​ஏ​வின் ஜாமீன் மனு மற்​றும் போலீஸ் காவல் கோரிய காவல் துறை​யினரின் மனு ஆகிய 2 மனுக்​களை​யும் தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டார். இதையடுத்​து, மார்க்​கண்​டேயன் மீண்​டும் பாளை​யங்​கோட்டை மத்​திய சிறைக்கு அழைத்துச் செல்லப்​பட்​டார்.

நீதி​மன்ற வளாகத்​தில் ஏராள​மான திமுக​வினர் கூடி​யிருந்​தனர். அங்​கிருந்த தனது ஆதர​வாளர்​களை மார்க்​கண்​டேயன் சந்​தித்துப் பேசி​னார்.

அப்​போது, “எவ்​வளவு நாள் நான் சிறை​யில் இருக்​கிறேனோ, அவ்​வளவு வேகத்தில் நாம் ஆட்​சிக்கு வரு​வோம். மேலும் சிறை​யில் நன்​றாக இருக்​கிறேன். அங்கு 25-க்​கும் மேற்​பட்ட புத்​தகங்​கள் உள்​ளன. அதனை படித்து வரு​கிறேன். என்னைப் பார்க்க யாரும் வர வேண்​டாம்” என்று கூறி​னார்.

இதனிடையே, பாளை​யங்​கோட்டை சிறைக்கு முன்​னாள் அமைச்சர் கே.என்​.நேரு மற்​றும் திமுக​வினர் திரண்டு வந்​து, மார்க்​கண்​டேயன் எம்​எல்​ஏவை சந்​தித்து பேசினர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here