2 கோடி பார்வையாளர்களை எட்டிய ராமேசுவரம் அப்துல் கலாம் நினைவகம்

0
20

ராமேசுவரத்​தி​லுள்ள முன்​னாள் குடியரசுத் தலை​வர் அப்​துல் கலாமின் தேசிய நினை​விடத்​துக்கு இது​வரை 2 கோடி பார்​வை​யாளர்​களுக்கு மேல் வந்து சென்​றுள்​ள​தாக டி.ஆர்​.டி.ஓ அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

அப்​துல் கலாம் குடியரசுத் தலை​வர் பதவிக் காலத்​துக்கு பிறகு நாடு முழு​வதும் சுற்​றுப் பயணம் செய்து பல்​வேறு கல்வி நிறு​வனங்​களில் நடந்த நிகழ்ச்​சிகளில் பங்​கேற்று மாணவர்​களுக்கு உத்​வேகம் ஊட்​டும் உரை​யாற்றி வந்​தார்.

இந்நிலையில் கடந்த 2015 ஜூலை 27-ம் தேதி மேகாலயா மாநிலம் ஷில்​லாங்​கில் உள்ள கல்​லூரி விழா​வில் பேசிக்​கொண்​டிருந்​த​போதே உயி​ரிழந்​தார். பின்​னர் அவரது உடல், சொந்த ஊரான ராமேசுவரம் தீவில் உள்ள பேக்​கரும்​பில் அடக்​கம் செய்​யப்​பட்​டது. அந்த இடத்​தில் அவரது நினை​வாக மத்​தி​யப் பாது​காப்பு ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்டு அமைப்பு (டிஆர்​டிஓ) சார்​பில் ‘அப்​துல்​கலாம் தேசிய நினை​வகம் அமைக்​கப்​பட்டு 2017-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி பிரதமர் நரேந்​திரமோடி திறந்து வைத்​தார்.

கலாம் நினை​வகத்​தின் நுழைவுப் பகு​தி​யில் கலாம் வீணை வாசித்​த​படி அமர்ந்​திருக்​கும் வெண்​கலச் சிலை, கலாம் பயன்​படுத்​திய பொருட்​கள், நூல்​கள், உடைகள், கலாமின் வாழ்க்கை வரலாற்​றைச் சித்​திரிக்​கும் ஓவி​யங்​கள், கலாமின் பல்​வேறு கால​கட்​டப் புகைப்​படங்​கள் காட்​சிப்​படுத்​தப்​பட்​டன.

மேலும் இங்​குள்ள நான்கு காட்​சிக் கூடங்​களில் கலாமின் மாணவப் பரு​வம், விஞ்​ஞானி​யாகப் பணி​யாற்​றிய காலம், குடியரசுத் தலை​வ​ராகப் பணி​யாற்​றிய காலம், உலகத் தலை​வர்​களு​டன் கலாமின் புகைப்பட ஓவி​யங்​கள் மற்​றும் உரு​வச் சிலைகள், அவரது கண்​டு​பிடிப்​பின் மாதிரி வடிவங்​கள் ஆகியவையும் வைக்​கப்​பட்​டுள்​ளன.

உலகளா​விய கரோனா பரவலைத் தொடர்ந்து அரசு பொது முடக்க காலத்​தில் கலாமின் தேசிய நினை​வகம் 2020 மார்ச் 17 அன்று மூடப்​பட்டு 525 நாட்​களுக்​குப் பிறகு 2021 ஆக.24 அன்று மக்​கள் பார்​வைக்​காக மீண்​டும் திறக்​கப்பட்​டது.

இந்​நிலை​யில் ஜுன் 7 அன்று அப்​துல்​கலாம் தேசிய நினை​வகம் பொது​மக்​கள் பார்​வைக்​காக திறக்​கப்​பட்டு 3,237 நாட்​கள் ஆன நிலை​யில் ஞாயிற்​றுக்​கிழமை​யுடன் 2 கோடி பார்​வை​யாளர்​கள் கலாம் நினை​வகத்​தைப் பார்​வை​யிட்​டுள்​ளனர். இந்​நிகழ்வை இனிப்பு வழங்கி டி.ஆர்​.டி.ஓ அதி​காரி​கள் கொண்​டாடினர். இந்​நிகழ்ச்​சி​யில் கலாமின் பேரன் ஷேக் சலிம் உள்​ளிட்​டோர் முன்​னிலை வகித்​தனர். மேலும் 2 கோடி பார்​வை​யாளர்​களைக் கடந்​த​போது வந்த மக்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here