தமிழகத்திலும் கள் விற்க அனுமதிக்கலாம்: விவசாயிகள் பயனடைவர் என உயர் நீதிமன்றம் கருத்து

0
21

புதுச்​சேரி, கேரளம் உள்​ளிட்ட மாநிலங்​களைப்போல தமிழகத்​திலும் கள் விற்​பனையை அனு​ம​தித்​தால் விவ​சா​யிகள் பயனடைவர் என உயர் நீதி​மன்​றம் கருத்து தெரி​வித்​துள்​ளது.

தென்​காசியைச் சேர்ந்த பெரு​மாள் சேட், உயர் நீதி​மன்றமதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு: ஆலங்​குளம் எஸ்​ஐ இசக்​கி​ராஜா மற்​றும் போலீ​ஸார் என் மகன் மணி​கண்​டனை பனைத்​தோப்​புக்கு அழைத்​துச் சென்று பனை மரத்​தில் கட்​டப்​பட்​டுள்ள பானை​களில் கள் உள்​ள​தா அல்​லது பதநீர் உள்​ள​தா என பார்க்​கு​மாறு தெரி​வித்​தனர். அப்​போது அவர்​களுக்​குள் வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது. இதில் எஸ்​ஐ இசக்​கி​ராஜா துப்​பாக்​கி​யால் மணி​கண்​டனை சுட்​டார். இது தொடர்​பாக போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர். இந்த வழக்கு விசா​ரணையை சிபிஐக்கு மாற்றி உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது.

இந்த மனு ஏற்​கெனவே விசா​ரணைக்கு வந்​த​போது போலீஸ் விசா​ரணைக்கு தடை விதிக்​கப்​பட்​டது. இந்த வழக்கு நீதிபதி பி.பு​கழேந்தி முன்பு நேற்று விசா​ரணைக்கு வந்​தது. உதவி ஆட்​சி​யரின் விசா​ரணை அறிக்கை தாக்​கல் செய்​யப்​பட்​டது. எஸ்​ஐ இசக்கி ராஜா தரப்​பில் அறிக்கை தாக்​கல் செய்ய அவகாசம் கோரப்​பட்​டது. விசா​ரணை​யின்​போது நீதிப​தி, கள்​ளின் மருத்​து​வப் பயன் என்ன, அதிலிருந்து தயாரிக்​கப்​படும் வேறு பொருட்​களின் பயன்​கள் என்ன என்​பது தொடர்​பாக அறிக்கை தாக்​கல்செய்ய வேண்​டும்.

அந்த அறிக்கை அடிப்​படை​யில் கள் விற்​பனைக்கு அரசு பரிசீலிக்க உத்​தர​விடலாம். போலீ​ஸாரின் செயல்​பாடு​கள் தனி​யார் மது​பானக் கூடங்​களின் வரு​மானத்தை பெருக்​கும் வகை​யிலேயே உள்​ளன. கள்​ளுக்கு தடை விதித்​து, டாஸ்​மாக் கடைகளை அரசே நடத்​துகிறது. கள் விற்​பனையை அனு​ம​தித்​தால், விவ​சா​யிகள் பயனடைவர். புதுச்​சேரி, கேரளம் உள்​ளிட்ட மாநிலங்​களைப்போல தமிழகத்​தி​லும் கள் விற்​பனைக்கு அனு​மதி வழங்​கலாம்.

இந்த வழக்​கில் விவ​சாயி மீது 4 குண்​டு​கள் சுடப்​பட்​டுள்​ளன. தனி​யாக இருந்த விவ​சா​யியை நோக்கி 4 முறை சுட வேண்​டிய அவசி​யம் என்ன, காவல்​துறை​யினர் எல்லை மீறி உள்​ளனர். 3 காவலர்​களால் ஒரு நபரை பிடிக்க முடிய​வில்​லை​யா விவ​சாயி தாக்​கிய​தால் துப்​பாக்​கி​யால் சுட்​டோம் என்​பது ஏற்​கும்​படி​யான காரணம் அல்ல.

இதுதொடர்​பாக காவல்​துறை தரப்​பில் பதிலளிக்க வேண்​டும். அரசால் சட்​ட​விரோத கனிமவளக் கொள்​ளை​யைத் தடுக்க முடிய​வில்​லை. ஆனால், டாஸ்​மாக் விற்​பனையை தொடர்​வதற்​காக கள் தடுப்​புச் சட்​டத்தை மட்​டும் கடுமை​யாக அமல்​படுத்​துகிறது. இதை கருத்​தில் கொண்டு புதிய அரசு செயல்பட வேண்​டும். வழக்கின் மீதான தீர்ப்பு தள்ளி வைக்​கப்​படு​கிறது என உத்​தர​விட்​டார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here