சர்க்கரை ஆலைகளின் உரிமையாளர்கள் முதல்வர் விஜய்யுடன் சந்திப்பு

0
19

முதல்வர் விஜய்யை சர்க்கரை ஆலைகளின் உரிமையாளர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று சந்தித்து பேசினர். முதல்வர் விஜய் கடந்த மே 10-ம் தேதி பதவியேற்ற பின்னர், வாரநாட்களில் தினமும் சென்னை தலைமைச் செயலகம் வந்துவிடுகிறார்.

காலை 10 முதல் மாலை 5 மணி வரை துறைசார்ந்த அலுவல் பணிகளை கவனிப்பதுடன், பல்வேறு முக்கிய பிரமுகர்களை சந்திப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார். அதன்படி சர்க்கரை ஆலைகளின் உரிமையாளர்கள், முதல்வர் விஜய்யை சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று சந்தித்துப் பேசினர்.

அப்போது தங்கள் துறைசார்ந்த முக்கிய கோரிக்கைகளை முதல்வரிடம் அவர்கள் முன்வைத்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பில் தென்னிந்திய சர்க்கரைஆலைகள் சங்கத்தின் (தமிழ்நாடு) தலைவர் ஆர்.வரதராஜன், ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் நிறுவனத்தின் தலைவர் ராஜ்ஸ்ரீ பதி, சக்தி சுகர்ஸ் நிறுவனத்தின் தலைவர் எம்.மாணிக்கம், ஈஐடி பாரி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் முத்தையா முருகப்பன், கோத்தாரி சுகர்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அர்ஜுன் கோத்தாரி, பொன்னி சுகர்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் என்.ராமநாதன், கோத்தாரி சுகர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் எம்.சில்வெஸ்டர், ஈஐடி பாரி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அலுவலர் ஜே.ஏ.எச்.ஆஷிக், ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் நிறுவனத்தின் தலைமை வியூக அலுவலர் ஆதித்ய பதி, ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் நிறுவனத்தின் பிரசிடெண்ட் ஜி.சத்தியமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதன்பின் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.மணிக்குமார், முதல்வர் விஜய்யை மரி யாதை நிமித்தமாகச் சந்தித்து கலந்துரையாடினார்.

என்எல்சி நிறுவனம் தலைவர் தொடர்ந்து, நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளி, முதல்வரை சந்தித்துப் பேசினார்.

அவருடன் என்எல்சி நிறுவனத்தின் ஆலோசகர் கே.பிரபு கிஷோர், முதன்மை மேலாளர் ஏ.முரளிதரன் உள்ளிட்டோர் இருந்தனர்.

மேலும், சன்மார் குழுமத்தின் தலைவர் விஜய் சங்கரும், முதல்வர் விஜய்யை நேற்று சந்தித்தார். அப்போது சன்மார் குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் எஸ். கணேஷ்குமார், நிர்வாகத் தலைவர் ஆர்.கார்த்திக் ஆகி யோர் உடனிருந்தனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here