பெண் மற்றும் சிறுமியிடம் அவதூறு பேசிய வாலிபர் கைது

0
212

கொல்லங்கோடு அருகே சூழால் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணின் 13 வயது மகளை அவரது வீட்டு அருகே வசிக்கும் ஆதர்ஷ் (27) என்பவர் கடந்த வருடம் பாலியல் சீண்டல் செய்தார். இது தொடர்பான புகாரின் பேரில்  கொல்லங்கோடு போலீசார் ஆதர்ஷ் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் இவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது.இதன் காரணமாக சம்பவதினம் அந்தப் பெண்ணின் வீட்டின் அருகே சென்ற ஆதர்ஷ், பெண்ணை அவதூறாக பேசியுள்ளார். மேலும் தனது உறவினர் ராஜன் என்பவருடன்  சேர்ந்து சிறுமியிடமும் அசிங்கமாக பேசியுள்ளார்.

இதையடுத்து  அந்த பெண் அளித்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து ஆதர்ஷை கைது செய்தனர். ராஜனை தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here