குளச்சல் போலீசார் நேற்று மாலையில் காமராஜர் பஸ் நிலையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, பைக்கில் வந்த மூன்று இளைஞர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் பிளஸ் டூ தேர்வு எழுதிவிட்டு கல்லூரியில் சேர காத்திருப்பதாக தெரிவித்தனர். இதில், பைக் ஓட்டி வந்த மாணவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் பெற வயது பூர்த்தியாகவில்லை. வயது வரம்பை மீறி பைக் ஓட்ட அனுமதித்த மாணவரின் தந்தை ஆண்டனி இன்னோசன்ட் (45) மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.














