33-வது ஒலிம்பிக் திருவிழா வரும் 26-ம் தேதி பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் கோலாகலமாக தொடங்குகிறது. இந்தியாவில் இருந்து 117 வீரர், வீராங்கனைகள் 16 வகையான போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
இந்த சூழலில் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கும் விளையாட்டு போட்டிகள் மற்றும் அதன் தேதி, நேரம் முதலியவை வெளியாகி உள்ளது. இதில் அதிகபட்சமாக தடகளத்தில் 29 பேர் இந்தியா சார்பில் பங்கேற்கின்றனர். ஆடவர் 18, மகளிர் 11 என தடகள வீரர்கள், வீராங்கனைகளின் எண்ணிக்கை உள்ளது.துப்பாக்கி சுடுதல் 21, ஹாக்கி 19, டேபிள் டென்னிஸ் 8, பாட்மிண்டன் 7, மல்யுத்தம் 6, வில்வித்தை 6, குத்துச்சண்டை 6, கோல்ஃப் 4, டென்னிஸ் 3, நீச்சல் 2, பாய்மர படகுப் போட்டி 2, குதிரையேற்றம், ஜுடோ, துடுப்பு படகு, பளுதூக்குதலில் தலா ஒருவர் பங்கேற்கின்றனர். இதில் 7 ரிசர்வ் வீரர்களும் அடங்குவர்.இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கும் விளையாட்டு போட்டிகள் விவரம்:
இதில் அடுத்தடுத்த சுற்றுகள், காலிறுதி, அரையிறுதி, இறுதி ஆட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட இந்திய வீரர்கள்/வீராங்கனைகள் (தனிநபர்/குழு) தகுதி பெற்றால் தான் பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய வீரர்கள் பங்கேற்கும் போட்டிகள் அனைத்தும் பகல் 12 மணி அளவில் தொடங்கி நள்ளிரவு வரை நடைபெறுகிறது.
ஜூலை 25: வில்வித்தை (ரேங்கிங் ரவுண்ட்)
ஜூலை 27: பாட்மிண்டன் (குரூப் சுற்று), துடுப்பு படகுப் போட்டி, துப்பாக்கி சுடுதல், குத்துச்சண்டை (ரவுண்ட் ஆஃப் 32), ஹாக்கி (இந்தியா vs நியூஸிலாந்து), டேபிள் டென்னிஸ், டென்னிஸ் (ரவுண்ட் 1).
ஜூலை 28: வில்வித்தை (டீம் – பதக்க போட்டி), பாட்மிண்டன், குத்துச்சண்டை (ரவுண்ட் ஆஃப் 32), துடுப்பு படகுப் போட்டி, துப்பாக்கி சுடுதல் (பதக்க போட்டி), டேபிள் டென்னிஸ் (ரவுண்ட் ஆஃப் 64), டென்னிஸ் (ராவுண்ட் 1).
ஜூலை 29: வில்வித்தை (டீம் – பதக்க போட்டி), பாட்மிண்டன், ஹாக்கி (இந்தியா vs அர்ஜென்டினா), துடுப்பு படகுப் போட்டி, துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ் (ரவுண்ட் ஆஃப் 32), டென்னிஸ் (ரவுண்ட் 2).
ஜூலை 30: நீச்சல் (பதக்க போட்டி), வில்வித்தை, பாட்மிண்டன், குத்துச்சண்டை, குதிரையேற்றம், ஹாக்கி (இந்தியா vs அயர்லாந்து), துடுப்பு படகுப் போட்டி, துப்பாக்கி சுடுதல் (பதப்ப போட்டி), டேபிள் டென்னிஸ் (ரவுண்ட் ஆஃப் 32), டென்னிஸ் (ரவுண்ட் 2).
ஜூலை 31: வில்வித்தை, பாட்மிண்டன், குத்துச்சண்டை (ரவுண்ட் ஆஃப் 16), குதிரையேற்றம், துடுப்பு படகு போட்டி, துப்பாக்கி சுடுதல் (பதக்க போட்டி), டேபிள் டென்னிஸ் (ரவுண்ட் ஆஃப் 32), டென்னிஸ் (ரவுண்ட் 3).
ஆகஸ்ட் 1: வில்வித்தை, தடகளம், பாட்மிண்டன், குத்துச்சண்டை, கோல்ஃப், ஹாக்கி (இந்தியா vs பெல்ஜியம்), துடுப்பு படகு போட்டி, பாய்மர படகு போட்டி, துப்பாக்கி சுடுதல் (பதக்க போட்டி), டேபிள் டென்னிஸ், டென்னிஸ்.
ஆகஸ்ட் 2: வில்வித்தை, தடகளம், பாட்மிண்டன் – அரையிறுதி, குத்துச்சண்டை, கோல்ஃப், ஜுடோ (பதக்க போட்டி), துடுப்பு படகு போட்டி (பதக்க போட்டி), பாய்மர படகு போட்டி, துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ் – அரையிறுதி, டென்னிஸ் (பதக்க போட்டி).
ஆகஸ்ட் 3: வில்வித்தை (பதக்க போட்டி), தடகளம், பாட்மிண்டன் (பதக்க போட்டி), குத்துச்சண்டை, கோல்ஃப், துடுப்பு படகு போட்டி (பதக்க போட்டி), பாய்மர படகு போட்டி, துப்பாக்கி சுடுதல் (பதக்க போட்டி), டேபிள் டென்னிஸ் (பதக்க போட்டி), டென்னிஸ் (பதக்க போட்டி).
ஆகஸ்ட் 4: வில்வித்தை (பதக்க போட்டி), தடகளம், பாட்மிண்டன் (பதக்க போட்டி), குத்துச்சண்டை (காலிறுதி/அரையிறுதி), குதிரையேற்றம் (இறுதிப்போட்டி), கோல்ஃப் (பதக்க போட்டி), ஹாக்கி – காலிறுதி, பாய்மர படகு போட்டி, துப்பாக்கி சுடுதல் – ஃபைனல், டேபிள் டென்னிஸ் (பதக்க போட்டி).
ஆகஸ்ட் 5: தடகளம் (5 கே ஃபைனல்), பாட்மிண்டன் (பதக்க போட்டி), பாய்மர படகு போட்டி, துப்பாக்கி சுடுதல் (ஃபைனல்), டேபிள் டென்னிஸ், மல்யுத்தம்.
ஆகஸ்ட் 6: தடகளம் (நீளம் தாண்டுதல் – ஃபைனல்), குத்துச்சண்டை (அரையிறுதி), ஹாக்கி (அரையிறுதி), பாய்மர படகு போட்டி (பதக்க போட்டி), டேபிள் டென்னிஸ், மல்யுத்தம் (பதக்க போட்டி).
ஆகஸ்ட் 7: தடகளம் (3கே ஸ்டீப்சேஸ் ஃபைனல்), குத்துச்சண்டை, கோல்ஃப், பாய்மர படகு போட்டி, டேபிள் டென்னிஸ், பளுதூக்குதல் (49 கிலோகிராம் – ஃபைனல்), மல்யுத்தம் (பத்தக போட்டி).
ஆகஸ்ட் 8: தடகளம் (ஈட்டி எறிதல் – ஃபைனல்), கோல்ஃப், ஹாக்கி (பதக்க போட்டி), டேபிள் டென்னிஸ், மல்யுத்தம்.
ஆகஸ்ட் 9: குத்துச்சண்டை (ஃபைனல்), தடகளம் (பதக்க போட்டி), கோல்ஃப், ஹாக்கி (பதக்க போட்டி), மல்யுத்தம் (பதக்க போட்டி).
ஆகஸ்ட் 10: குத்துச்சண்டை (பதக்க போட்டி), தடகளம் (பதக்க போட்டி), கோல்ஃப் (பதக்க போட்டி), டேபிள் டென்னிஸ் (பதக்க போட்டி), மல்யுத்தம்.
ஆகஸ்ட் 11: குத்துச்சண்டை (பதக்க போட்டி), மல்யுத்தம் (பதக்க போட்டி).