உலகக் கோப்பை கால்பந்து திருவிழா வரும் 11-ம் தேதி முதல் அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய 3 நாடுகளில் 45 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் குரூப் ‘ஜி’ பெல்ஜியம், எகிப்து, ஈரான், நியூஸிலாந்து ஆகிய அணிகளின் செயல்திறன், வீரர்களின் செயல்பாடு ஆகியவை இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.
பெல்ஜியம்
பயிற்சியாளர்: ரூடி கார்சியா, பிஃபா தரவரிசை: 9
சிறப்பான செயல் திறன்: 20018-ல் 3-வது இடம்
கடைசி உலகக் கோப்பை: 2022
பங்கேற்ற உலகக் கோப்பைகள்: 14
தகுதி பெற்ற விதம்: வட அமெரிக்கா தகுதி சுற்றில் பெல்ஜியம் அணி ‘ஜே’ பிரிவில் முதலிடம் பிடித்து உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது.
நட்சத்திரங்கள்: கெவின் டி ப்ரூய்ன், ஜெரெமி டோகு, திபாட் கூர்டோயிஸ்
ஒட்டுமொத்த செயல் திறன்: 51 ஆட்டங்கள், 21 வெற்றி, 10 டிரா, 20 தோல்வி, 69 அடித்த கோல்கள், 74 வாங்கிய கோல்கள்
மோதல்
ஜூன் 15 vs எகிப்து
ஜூன் 21 vs ஈரான்
ஜூன் 26 vs நியூஸிலாந்து
எகிப்து
பயிற்சியாளர்: ஹொசாம் ஹசன்
பிஃபா தரவரிசை: 29
சிறப்பான செயல் திறன்: 1934, 1990, 2018-ம் ஆண்டு தொடர்களில் லீக் சுற்றுடன் வெளியேற்றம்.
கடைசி உலகக் கோப்பை: 2018
பங்கேற்ற உலகக் கோப்பைகள்: 3
தகுதி பெற்ற விதம்: ஆப்பிரிக்க கால்பந்து கூட்டமைப்பு தகுதி சுற்றில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றிருந்த எகிப்து அணி 8 வெற்றி, 2 டிராக்களுடன் 26 புள்ளிகளை குவித்து முதலிடம் பிடித்து உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது.
நட்சத்திரங்கள்: முகமது எல் ஷெனாவி, உமர் மர்மவுஷ், முகமது சலா.
ஒட்டுமொத்த செயல் திறன்: 7 ஆட்டங்கள், 0 வெற்றி, 2 டிரா, 3 தோல்வி, 5 அடித்த கோல்கள், 12 வாங்கிய கோல்கள்
மோதல்
ஜூன் 15 vs பெல்ஜியம்
ஜூன் 21 vs நியூஸிலாந்து
ஜூன் 26 vs ஈரான்
ஈரான்
பயிற்சியாளர்: அமீர் காலேனோயி, பிஃபா தரவரிசை: 20
உலகக் கோப்பையில் சிறப்பான செயல் திறன்: 1978, 1998, 2006, 2014, 2018, 2022-ம் ஆண்டு தொடர்களில் லீக் சுற்றுடன் வெளியேற்றம்.
கடைசி உலகக் கோப்பை: 2022
பங்கேற்ற உலகக் கோப்பைகள்: 6
தகுதி பெற்ற விதம்: ஆசிய கால்பந்து கூட்டமைப்பு தகுதி சுற்றின் இறுதிக்கட்டத்தில் ‘ஏ’ பிரிவில் ஈரான் அணி 23 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து, உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது.
நட்சத்திரங்கள்: சமன் ஜஹூதஸ், லிரேசா ஜஹான்பக் ஷ், மஹ்தி தர்மி
ஒட்டுமொத்த செயல் திறன்: 18 ஆட்டங்கள், 3 வெற்றி, 4 டிரா, 11 தோல்வி, 13 அடித்த கோல்கள், 31 வாங்கிய கோல்கள்
மோதல்
ஜூன் 15 vs நியூஸிலாந்து
ஜூன் 21 vs பெல்ஜியம்
ஜூன் 26 vs எகிப்து
நியூஸிலாந்து
பயிற்சியாளர்: டேரன் பேஸ்லி
பிஃபா தரவரிசை: 85
சிறப்பான செயல் திறன்: 1982, 2010-ம் ஆண்டுகளில் லீக் சுற்றுடன் வெளியேற்றம்.
கடைசி உலகக் கோப்பை: 2010,
பங்கேற்ற உலகக் கோப்பைகள்: 2
தகுதி பெற்ற விதம்: ஒசியானா தகுதி சுற்றின் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணி 5-1 என்ற கோல் கணக்கில் தஹிதியை தோற்கடித்து உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது.
நட்சத்திரங்கள்: கிறிஸ் வுட், மார்கோ ஸ்டாமெனிக், பென் ஓல்டு
ஒட்டுமொத்த செயல் திறன்: 6 ஆட்டங்கள், 0 வெற்றி, 3 டிரா, 3 தோல்வி, 4 அடித்த கோல்கள், 14 வாங்கிய கோல்கள்
மோதல்
ஜூன் 15 vs ஈரான்
ஜூன் 21 vs எகிப்து
ஜூன் 26 vs பெல்ஜியம்















