உலகக் கோப்பை கால்பந்து திருவிழா வரும் 11-ம் தேதி முதல் அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய 3 நாடுகளில் 45 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் குரூப் ‘ஐ’ பிரான்ஸ், செனகல், ஈராக், நார்வே ஆகிய அணிகளின் செயல்திறன், வீரர்களின் செயல்பாடு ஆகியவை இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ்
பயிற்சியாளர்: டிடியர் டெஷாம்ப்ஸ்
பிஃபா தரவரிசை: 3
சிறப்பான செயல் திறன்: 1998, 2018-ல் சாம்பியன்
கடைசி உலகக் கோப்பை: 2022, கத்தாரில் 2-வது இடம்
பங்கேற்ற உலகக் கோப்பைகள்: 16
தகுதி பெற்ற விதம்: யுஇஎஃப்ஏ தகுதிச் சுற்றின் ‘டி’ பிரிவில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் முதலிடம் பிடித்து, பிரான்ஸ் அணி உலகக் கோப்பைத் தொடருக்கு தகுதி பெற்றது.
நட்சத்திரங்கள்: கிலியன் எம்பாப்பே, உஸ்மான் டெம்பலே, வில்லியம் சலிபா.
ஒட்டுமொத்த செயல் திறன்: 73 ஆட்டங்கள், 39 வெற்றி, 14 டிரா, 20 தோல்வி, 136 அடித்த கோல்கள், 75 வாங்கிய கோல்கள்
மோதல்
ஜூன் 16 vs செனகல்
ஜூன் 22 vs ஈராக்
ஜூன் 26 vs நார்வே
ஈராக்
பயிற்சியாளர்: கிரஹாம் அர்னால்ட்
பிஃபா தரவரிசை: 56
சிறப்பான செயல் திறன்: 1986-ல் லீக் சுற்றுடன் வெளியேற்றம்.
கடைசி உலகக் கோப்பை: 1986
பங்கேற்ற உலகக் கோப்பை: 1
தகுதி பெற்ற விதம்: மெக்சிகோவில் நடைபெற்ற பிளே-ஆஃப் தொடரின் இறுதிப் போட்டியில் பொலிவியா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, ஈராக் அணி உலகக் கோப்பைத் தொடருக்கு கடைசி அணியாக தகுதி பெற்றது.
நட்சத்திரங்கள்: அலி இப்ராஹிம் அல்-ஹம்மாடி, அய்மன் ஹுசைன், அஹ்மத் பாசில் அல்-ஃபாத்லி.
ஒட்டுமொத்த செயல் திறன்: 3 ஆட்டங்கள், 0 வெற்றி, 0 டிரா, 3 தோல்வி, 1 அடித்த கோல்கள், 4 வாங்கிய கோல்கள்
மோதல்
ஜூன் 16 vs நார்வே
ஜூன் 22 vs பிரான்ஸ்
ஜூன் 26 vs செனகல்
செனகல்
பயிற்சியாளர்: பாப் தியாவ்
பிஃபா தரவரிசை: 15
சிறப்பான செயல் திறன்: 2002-ம் ஆண்டில் கால் இறுதி வரை முன்னேற்றம்.
கடைசி உலகக் கோப்பை: 2022, கத்தார்
பங்கேற்ற உலகக் கோப்பைகள்: 2
தகுதி பெற்ற விதம்: செனகல் தேசிய கால்பந்து அணி, ஆப்பிரிக்க தகுதிச் சுற்றின் ‘பி’ பிரிவில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் முதலிடம் பிடித்து, உலகக் கோப்பைத் தொடருக்கு தகுதி பெற்றது.
நட்சத்திரங்கள்: சாடியோ மானே, காலிடூ கூலிபாலி, மற்றும் இப்ராஹிம் எம்பாயே.
ஒட்டுமொத்த செயல் திறன்: 12 ஆட்டங்கள், 5 வெற்றி, 3 டிரா, 4 தோல்வி, 16 அடித்த கோல்கள், 17 வாங்கிய கோல்கள்
மோதல்
ஜூன் 16 vs பிரான்ஸ்
ஜூன் 22 vs நார்வே
ஜூன் 26 vs ஈராக்
நார்வே
பயிற்சியாளர்: ஸ்டேல் சொல்பக்கன், பிஃபா தரவரிசை: 31
சிறப்பான செயல் திறன்: 1998-ம் ஆண்டு தொடரில் கால் இறுதிக்கு முந்தைய சுற்று வரை முன்னேற்றம்.
கடைசி உலகக் கோப்பை: 1998
பங்கேற்ற உலகக் கோப்பைகள்: 3
தகுதி பெற்ற விதம்: யுஇஎஃப்ஏ தகுதிச் சுற்றின் ‘ஐ’ பிரிவில் எவராலும் முறியடிக்க முடியாத ஒரு அசாத்திய சாதனையைப் படைத்து, நார்வே அணி உலகக் கோப்பைத் தொடருக்கு நேரடியாகத் தகுதி பெற்றது. இதன் மூலம், கடந்த 28 ஆண்டுகளாக உலகக் கோப்பைத் தொடருக்குத் தகுதி பெற முடியாமல் இருந்த தங்களது நீண்ட கால ஏமாற்றத்துக்கு நார்வே அணி முற்றுப்புள்ளி வைத்தது.
நட்சத்திரங்கள்: எர்லிங் ஹாலண்ட், மார்ட்டின் ஒடேகார்ட், அலெக்சாண்டர் சோர்லோத்.
ஒட்டுமொத்த செயல் திறன்: 8 ஆட்டங்கள், 2 வெற்றி, 3 டிரா, 3 தோல்வி, 7 அடித்த கோல்கள், 8 வாங்கிய கோல்கள்
மோதல்
ஜூன் 16 vs ஈராக்
ஜூன் 22 vs செனகல்
ஜூன் 26 vs பிரான்ஸ்















