ஆசிய பாரா விளையாட்டு போட்டி: இந்தியா 114 பதக்கங்களை குவித்து சாதனை

0
26

5-வது ஆசிய பாரா விளையாட்டு போட்டி ஜப்​பானின் ஐச்சி-நகோயா நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதன் 6-வது நாளான நேற்று பாட்​மிண்​டனில் ஆட​வருக்​கான ஒற்​றையர் எஸ்எல் 3 பிரிவு இறுதிப் போட்​டி​யில் இந்​தி​யாவின் நிதேஷ் குமார் 21-18, 21-16 சகநாட்​டைச் சேர்ந்த பிரமோத் பகத்தை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்​றார். கடந்த 2 முறை தங்​கப் பதக்​கம் வென்ற பிரமோத் பகத் இம்​முறை வெள்​ளிப் பதக்​கத்​துடன் போட்​டியை நிறைவு செய்​துள்​ளார்.

துப்​பாக்கி சுடுதல்

மகளிருக்​கான 50 மீட்​டர் ரைபிள் 3 பொசிஷன் எஸ்​ஹெச் 1 பிரிவில் இந்​தி​யாவின் மோனா அகர்வால் 357.5 புள்ளிகளை குவித்து உலக சாதனையுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்​றார். இதற்கு முன்​னர் கடந்த ஜூலை மாதம் சுவீடனின் அனா பென்​சன் 356 புள்​ளி​களை குவித்​ததே சாதனையாக இருந்தது. நடப்பு தொடரில் மோனா அகர்​வால் வெல்​லும் 2-வது தங்​கப் பதக்​கம் இது​வாகும். 10 மீட்​டர் ஏர் ரைபிள் எஸ்​ஹெச் 1 பிரிவிலும் அவர், தங்​கம் வென்​றிருந்​தார்.

வில்வித்தை

வில்​வித்​தையில் ஆட​வருக்​கான ரீகர்வ் அணிகள் பிரிவு இறுதிப் போட்​டி​யில் இந்​தி​யாவின் ஹர்​விந்​தர் சிங், விஜய் சுந்தி ஜோடி 5-1 என்ற கணக்​கில் சீனாவின் யுன் டுவோ, ஜாவோ லிக்ஸ்யூ ஜோடியை வீழ்த்தி தங்​கப் பதக்​கம் வென்​றது. மகளிருக்​கான இறுதிப் போட்​டி​யில் இந்​தி​யாவின் பாவ்னா சவுத்ரி, பூஜா ஜத்​யான் ஜோடி 0-6 என்ற செட் கணக்​கில் சீனாவின் காவோ ஸிஹான், வாங் சூச்​சி​யான் ஜோடி​யிடம் தோல்வி அடைந்து வெள்​ளிப் பதக்கம் பெற்​றது.

சந்தீப்

ஆட​வருக்​கான 400 மீட்​டர் டி 64 பிரி​வில் இந்​தி​யாவின் சந்தீப் பந்தய தூரத்தை 52.28 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்து உலக சாதனையுடன் தங்​கப் பதக்​கம் வென்​றார். சவுதி அரேபியாவின் நூர் அல்​சனா (53.13) வெள்​ளிப் பதக்​கமும், இந்தியாவின் அஜய் குமார் (53.61) வெண்​கலப் பதக்​கமும் வென்றனர்.

ஆட​வருக்​கான ஈட்டி எறிதலில் எஃப் 37/38 பிரி​வில் இந்​தி​யாவின் ஹேனி 60.49 மீட்​டர் தூரம் எறிந்து உலக சாதனையுடன் முதலிடம் பிடித்து தங்​கப் பதக்​கம் வென்​றார். மகளிருக்​கான நீளம் தாண்டுதலில் டி 47 பிரி​வில் இந்​தி​யாவின் நிமிஷா 5.37 மீட்​டர் தூரம் தாண்டி 2-வது இடம் பிடித்து வெள்​ளிப் பதக்​கம் வென்​றார். ஆட​வருக்​கான 1,500 மீட்​டர் ஓட்​டத்​தில் இந்​தி​யாவின் பிரமோத் பிஜார்​னியா பந்​தய தூரத்தை 4:09.65 விநாடிகளில் கடந்து 2-வது இடம் பிடித்து வெள்​ளிப் பதக்​கம் பெற்​றார்.

டேபிள் டென்​னிஸ்

டேபிள் டென்​னி​ஸில் ஆட​வருக்​கான இரட்​டையர் பிரிவு எம்டி 4 பிரி​வில் இந்​தி​யாவின் ஜெஹன் டோரப் மதன், ஷுபம் வாத்வா ஜோடி தங்​களது கடைசி ஆட்​டத்​தில் 0-3 என்ற செட் கணக்​கில் தென் கொரியாவின் பார்க் ஜின்​சி​யோல், கிம் கியுங் ஹியுன் ஜோடி​யிடம் தோல்வி அடைந்து வெண்​கலப் பதக்​கம் பெற்​றது. இதில் ஜெஹன் டோரப் மதன் தமிழகத்​தின் சென்​னையை சேர்ந்தவர்.

நேற்​றைய நாளின் முடி​வில் இந்​தியா 30 தங்​கம், 35 வெள்ளி, 49 வெண்​கலம் என 114 பதக்​கங்​களை குவித்து பட்​டியலில் 4-வது இடத்​தில் இருந்​தது. ஆசிய பாரா விளை​யாட்​டில் இந்​தியா அதிக பதக்​கங்​களை குவிப்​பது இதுவே முதன்​முறை​யாகும். இதற்கு முன்னர் கடந்த 2023-ம் ஆண்டு சீனாவின் ஹாங்​சோவில் நடை​பெற்ற ஆசிய பாரா விளை​யாட்டு போட்​டி​யில் இந்​தியா 28 தங்கம், 38 வெள்ளி, 40 வெண்​கலம் என 106 பதக்​கங்​களை வென்றிருந்​தது. தற்​போது இந்த சாதனையை இந்​தியா முறியடித்துள்​ளது.

கிளப் த்ரோ

ஆடவருக்கான கிளப் த்ரோ எஃப் 51 பிரிவில் இந்தியாவின் பிரணவ் சூர்மா 32.87 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரரான தரம்வீர் (27.71) வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். ஆடவருக்கான ஈட்டி எறிதலில் எஃப்42-44/61-64 பிரிவில் இந்தியாவின் சுமித் அண்டில் 72.46 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார்.

நிறைவு விழா​வில் கொடியை ஏந்​துகின்​றனர் மோனா, நிஷாத்

ஜப்​பானின் ஐச்சி-நகோயா மாகாணத்​தில் கடந்த 18-ம் தேதி ஆசிய பாரா விளை​யாட்டு போட்​டிகள் தொடங்​கியது. ஒரு​வாரம் நடை​பெற்ற இந்த விளை​யாட்டு போட்டி இன்​றுடன் நிறைவு பெறுகிறது. இந்​நிலை​யில் நிறைவு விழா அணி வகுப்​பில் இந்​திய தேசி​யக் கொடியை துப்​பாக்கி சுடுதலில் 2 தங்​கப் பதக்​கம் வென்ற மோனா அகர்​வால் மற்​றும் உயரம் தாண்​டுதலில் 2 தங்​கப் பதக்​கம் வென்ற நிஷாத் குமார் ஆகியோர் ஏந்​திச் செல்​வார்​கள் என அறி​விக்​கப்​பட்​டு உள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here