சோதனைகளை சாதனையாக மாற்றிய துளசிமதி – ஆசிய பாரா விளையாட்டில் ஹாட்ரிக் பதக்கம்

0
23

ஜப்​பானில் நடை​பெற்று வரும் ஆசிய பாரா விளையாட்​டுப் போட்டி​யில் ஒரு தங்​கம், 2 வெள்ளி என 3 பதக்​கங்​களை வென்று இந்​தி​யா​வுக்​கும் தமிழகத்​துக்​கும் பெருமை சேர்த்​துள்​ளார் காஞ்சிபுரத்​தைச் சேர்ந்த 24 வய​தான துளசிமதி முருகேசன். பாட்மிண்டன் மகளிர் இரட்​டையர் பிரி​வில் ராஜஸ்தானைச் சேர்ந்த மானஷி ஜோஷியுடன் இணைந்து விளை​யாடிய துளசிமதி, சீன ஜோடியை வீழ்த்தி தங்​கப் பதக்​கம் வென்​றார். இது​த​விர, மகளிர் ஒற்​றையர் மற்​றும் கலப்பு இரட்​டையர் பிரிவு​களி​லும் வெள்​ளிப் பதக்​கங்​களை வென்​றுள்​ளார்.

காஞ்​சிபுரம் அம்​பேத்​கர் நகரைச் சேர்ந்த முருகேசன் – விஜி தம்​ப​தி​யின் மகள் துளசிமதி (24). இவருக்கு கிருத்​திகா என்ற சகோ​தரியும் உள்​ளார். பிறக்​கும்​போதே ஒரு கையில் பாதிப்​புடன் இருந்​த​போதிலும், சிறு வயது முதலே விளை​யாட்​டில் ஆர்​வம் கொண்​டிருந்​தார் துளசிமதி.

மகளின் ஆர்​வத்​தையும் திறமையையும் அடை​யாளம் கண்ட அவரது தந்தை முருகேசன், இரு மகள்​களை​யும் அரு​கிலுள்ள மாவட்ட விளை​யாட்டு மைதானத்​துக்கு அழைத்​துச் சென்று பயிற்சி அளித்​தார். பொருளாதார நெருக்​கடிகளுக்கு இடை​யிலும் மகள்​களின் விளை​யாட்​டுக் கனவு நிறைவேற வேண்​டும் என்​ப​தில் உறுதி​யாக இருந்​தார்.

ஆனால், துளசிமதி விளை​யாட்​டில் ஈடு​படத் தொடங்​கியபோது பல்​வேறு விமர்​சனங்​களை​யும் கேலிகளை​யும் எதிர்​கொள்ள வேண்​டி​யிருந்​தது. தனது விளை​யாட்​டுப் பயணம் குறித்து துளசிமதி கூறிய​தாவது: சிறு வயதி​லிருந்தே எனது தந்தை எனக்கு விளை​யாட்​டில் ஊக்​கம் அளித்​தார். எனது சகோ​தரி கிருத்​தி​கா​வுடன் சேர்த்து எனக்​கும் பயிற்சி அளித்​தார். ஆரம்​பத்​தில், ஒரு கை ஏற்​கெனவே பாதிக்​கப்​பட்​டிருக்​கும்​போது மற்​றொரு கையையும் உடைத்​துக்​கொள்​ளப் போகிறாயா என்​பது போன்ற கேலிப் பேச்​சுகளை எதிர்​கொண்​டோம்.

ஆனால், இதையெல்​லாம் பொருட்​படுத்​தாமல் எனது தந்தை தொடர்ந்து பயிற்சி அளித்​தார். பல்​வேறு போட்​டிகளில் பங்​கேற்​றோம். சில போட்​டிகளில் வெற்றி பெற்​றோம்; சில நேரங்​களில் தோல்​வியடைந்​தும் திரும்​பியுள்​ளோம். ஆரம்ப காலத்​தில் விளை​யாட்டு மட்டை உள்​ளிட்ட உபகரணங்​களை வாங்​கு​வதற்​குக்​கூட சிரமப்​பட்​டோம். இத்​தனை சிரமங்​களைக் கடந்​து​தான் இந்த நிலையை அடைந்​துள்​ளோம். தற்​போது நாமக்​கல்​லில் கால்​நடை மருத்​து​வப் படிப்​பின் இறுதி​யாண்டு படித்து வரு​கிறேன். எனக்​குப் பயிற்சி அளிப்​ப​தற்​காகவே எனது தந்தை நாமக்​கல்​லுக்கு வந்து தங்​கி​யுள்​ளார்.

விளை​யாட்​டில் இது​தான் எல்லை என்று எது​வும் இல்லை. தொடர்ந்து இந்​தி​யா​வுக்​காக விளை​யாட வேண்​டும் என்​பதே எனது விருப்​பம். என்​னைப் போன்ற பொருளாதா​ரத்​தில் பின்​தங்​கிய குடும்​பங்​களைச் சேர்ந்​தவர்​கள் விளை​யாட்​டில் சாதிக்​கத் தேவை​யான வாய்ப்​பு​கள் உரு​வாக்​கப்​பட வேண்​டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஏற்​கெனவே, 2024-ல் பாரீஸ் பாராலிம்​பிக் போட்​டி​யில் வெள்​ளிப் பதக்​கம் வென்று துளசிமதி சாதனை படைத்​துள்​ளார். அவரது விளை​யாட்​டுத் திறமையைப் பாராட்டி மத்​திய அரசின் அர்​ஜுனா விருதும், தமிழக அரசின் கல்​பனா சாவ்லா விருதும் வழங்​கப்​பட்​டுள்​ளன. பிறவி பாதிப்பு, பொருளாதார நெருக்​கடி, சமூகத்​தின் கேலிப் பேச்​சுகள் எனப் பல தடைகளைத் தாண்டி சர்​வ​தேச அரங்​கில் பதக்​கங்​களை வென்​றுள்ள துளசிமதி​யின் பயணம், விளை​யாட்​டில் சாதிக்​கத் துடிக்​கும் இளம் தலைமுறை​யினருக்கு நம்பிக்கையூட்​டுவ​தாக அமைந்​துள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here