இங்கிலாந்து – மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணியானது இங்கிலாந்து வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 41.4 ஓவர்களில் 121 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதிகபட்சமாக மைக்கேல் லூயிஸ் 27, கவேம் ஹாட்ஜ் 24,அலிக் அத்தானஸ் 23, அல்சாரிஜோசப் 17 ரன்கள் சேர்த்தனர்.கேப்டன் பிராத்வெயிட் 6, கிர்க் மெக்கென்சி 1, ஜேசன் ஹோல்டர் 0, ஜோஷ்வா டி சில்வா 0, ஜெய்டன் சீயல்ஸ் 2 ரன்களில் நடையை கட்டினர். குடகேஷ் மோதி 14 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இங்கிலாந்து அணி சார்பில் அறிமுக வீரரான கஸ் அட்கின்சன்7 விக்கெட்களை வீழ்த்தினார். இதையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 13 ஓவர்களில் ஒருவிக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்திருந்தது. பென் டக்கெட் 3ரன்னில் ஆட்டமிழந்தார். ஸாக் கிராவ்லி 26, ஆலி போப் 24 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.