228 ரன்​கள்​ குவித்​தும்​ மும்பையிடம்​ தோல்​வி: லக்னோ அணி​ கேப்​டன்​ ரிஷப்​ பந்த்​ சொல்லும் காரணம்

0
20

ஐபிஎல்​ தொடரில்​ நேற்​று முன்​தினம்​ நடை​பெற்​ற ஆட்டத்​தில்​ மும்பை இந்​தி​யன்​ஸ்​ அணி​யிடம்​ 6 விக்​கெட்​கள்​ வித்தியாசத்​தில்​ தோல்​வி அடைந்​தது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்​ அணி. இந்​த ஆட்​டத்​தில்​ 229 ரன்​கள்​ இலக்​கை விரட்டிய மும்​பை அணி 18.4 ஓவர்​களில்​ 4 விக்​கெட்​களை இழந்​து வெற்​றிபெற்​றது.

தொடக்​க வீரர்​களான ரோஹித்​ சர்​மா 44 பந்​துகளில்​, 7 சிக்ஸர்கள், 6 பவுண்​டரி​களு​டன்​ 84 ரன்​களும்​, ரியான்​ ரிக்கெல்டன்​ 32 பந்​துகளில்​, 8 சிக்​ஸர்​கள்​, 6 பவுண்​டரி​களு​டன்​ 83 ரன்​களும்​ விளாசி அணி​யின்​ வெற்​றி​யில்​ முக்​கிய பங்​கு வகித்தனர்​. மும்​பை அணிக்​கு இது 3-வது வெற்​றி​யாக அமைந்​தது.

10 ஆட்​டங்​களில்​ விளை​யாடி உள்​ள மும்​பை அணி 3 வெற்​றி, 7 தோல்வி​களு​டன்​ 6 புள்​ளி​கள்​ பெற்​று பட்​டியலில்​ 9-வது இடத்​தில்​ தொடர்​கிறது. அதேவேளை​யில்​ லக்​னோ அணிக்​கு இது 7-வது தோல்​வி​யாக அமைந்​தது. அந்​த அணி 9 ஆட்​டங்​களில்​ விளையாடி 2 வெற்​றி, 7 தோல்வி​களு​டன்​ 4 புள்​ளி​கள்​ பெற்​று 10-வது இடத்​தில்​ நீடிக்​கிறது.

தற்​போதைய தோல்​வி​யால்​ லக்​னோ அணி​யின்​ பிளே ஆஃப்​ சுற்​று வாய்ப்​பு கடின​மாகி உள்​ளது. மும்​பை அணிக்​கு எதி​ரான தோல்விக்​கு பின்​னர்​ லக்​னோ அணி​யின்​ கேப்​டன்​ ரிஷப்​ பந்த்​ கூறிய​தாவது: நாங்​கள்​ பேட்​டிங்​கை தொடங்​கிய விதத்​துக்​கு இன்னும் அதி​க​மான ரன்​களை எடுத்​திருக்​க வேண்​டும்​. எங்​கள்​ வீரர்​கள்​ தயக்​கமின்​றி விளை​யாடி​னார்​கள்​. ஆனால்​ இறு​தி பகுதியில்​ மும்​பை வீரர்​கள்​ சிறப்​பாகப்​ பந்​து​வீசி​னார்​கள்​.

ஏனெனில்​ இந்​த ஆடு​களத்​தின்​ சூழலில்​ அவர்​கள்​ விளை​யாடி பழகி​விட்​டனர்​. நாங்​கள்​ 10 முதல்​ 15 ரன்​கள்​ குறை​வாக எடுத்​து​விட்​டோம்​. நாங்​கள்​ ஆட்​டத்​தைத்​ தொடங்​கிய விதத்​தைப்​ பார்க்கை​யில்​, அவர்​களை விட முன்​னிலை​யில்​ இருந்​தோம்​. ஆனால்​ அதே சமயம்​, இது போன்​ற ஆடு​களங்​களில்​ பந்துவீச்சாளர்​களைக்​ குறை சொல்​ல முடி​யாது. லக்​னோ அணியின்​ பந்​து​வீச்​சாளர்​கள்​ எங்​களுக்​காக அற்​புத​மான பணியைச்​ செய்​து வரு​கிறார்​கள்​.

எனவே, அவர்​களைப்​ பற்​றி நான்​ அதி​கம்​ ஒன்​றும்​ சொல்​ல முடியாது. எங்​களுக்​கு சற்​று அதிர்​ஷ்ட​மும்​ தேவை என்​று நினைக்கிறேன்​. நிறைய ஆசீர்​வாதங்​கள்​ இருந்​தால்​ மட்​டுமே இது நடக்​கும்​ என்​று நினைக்​கிறேன்​. மேலும்​, இதற்​காக நாங்​கள்​ நிச்​சய​மாக இன்​னும்​ கூடு​தல்​ முயற்​சி​யை எடுக்​க வேண்​டி​யிருக்​கும்​. இவ்​வாறு ரிஷப்​ பந்த்​ கூறி​னார்​. லக்​னோ அணி தனது அடுத்​த ஆட்டத்​தில்​ நாளை (7-ம்​ தேதி) ஆர்​சிபி அணி​யுடன்​ மோதுகிறது. இந்​த ஆட்​டம்​ இரவு 7.30 மணிக்​கு லக்​னோ​வில் ஏகா​னா மைதானத்​தில்​ நடை​பெறுகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here