செயின்ட் லூயிஸ் கிளப் செஸ்: ரேபிட் பிரிவில் பிரக்ஞானந்தா முதலிடம்

0
20

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் கிளப் சார்பில் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சிந்தரோவ், அமெரிக்காவின் வெஸ்லி சோ, வோன் அரோனியன், லீனியர் டொமிங்கியூஸ் பெரெஸ், கருனா பேபியானோ, அவண்டர் லியோங், நெதர்லாந்தின் அனிஷ் கிரி, ஜோர்டான் வான் பாரஸ்ட், ஜெர்மனியின் வின்சென்ட் கீமர் ஆகிய 10 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் 9 சுற்றுகள் கொண்ட ரேபிட் பிரிவில் பிரக்ஞானந்தா 12 புள்ளிகளை குவித்து முதலிடம் பிடித்துள்ளார். இதன் மூலம் அவர், இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவுள்ள கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

கடைசி சுற்றில் பிரக்ஞானந்தா, நெதர்லாந்தின் ஜோர்டன் வான் பாரஸ்டிடம் தோல்வி அடைந்தார். எனினும் உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சிந்தரோவைவிட ஒரு புள்ளி கூடுதலாக பெற்றிருந்ததால் முதலிடத்தை பிடித்தார். பிரக்ஞானந்தா 4 வெற்றி, 4 டிரா, ஒரு தோல்வியை பதிவு செய்தார்.

கிராண்ட் செஸ் டூர் தொடரின் வெற்றியாளர் ரேபிட் பிரிவின் அடிப்படையில் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. பிளிட்ஸ் பிரிவில் 18 சுற்று போட்டிகள் நடைபெற உள்ளன.

இதன் முடிவில்தான் வெற்றியாளர் யார்? என்பது தெரியவரும். ஜாவோகிர் சிந்தரோவ், வெஸ்ஸி சோ ஆகியோர் தலா 11 புள்ளிகளுடன் உள்ளனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here