கேரள சிவசேனா செயலர் கொலையில் மூவர் கைது

0
20

நாகர்கோவில்: கேரள மாநில, சிவசேனா செயலர் கொலை வழக்கில், அஜித், 28, நிதிஷ், 29, பெர்லின் ஜியோ, 27, ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.

கேரள மாநிலம், செங்கவிளையை சேர்ந்த அதுல், 32, என்பவர், அம்மாநில சிவசேனா கட்சியின் செயலராக இருந்தார். ஆக., 2ல் கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை தாமிரபரணி ஆற்றில் கண்ணன்கோடு பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். மார்த்தாண்டம் போலீசார் விசாரித்தனர்.

பிரேத பரிசோதனையில், அவரது தலையில் ஆழமான குழி இருந்ததும், ஆயுதங்களால் தலையில் பலமாக குத்தி கொல்லப்பட்டதும் தெரியவந்தது. கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

இதையடுத்து, மணவாளக்குறிச்சி அஜித், உண்ணாமலைகடை நிதிஷ், மாங்கரை பெர்லின் ஜியோ ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here