Home 2024
Yearly Archives: 2024
உ.பி. அரசின் நிர்வாகத் தோல்வியே ஹாத்ரஸ் உயிரிழப்புகளுக்கு காரணம்: அகிலேஷ் குற்றச்சாட்டு
உத்தரப் பிரதேச அரசின் நிர்வாகத் தோல்வியே ஹாத்ரஸ் உயிரிழப்புகளுக்குக் காரணம் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் சைஃபை நகரில் நடைபெற்ற கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அகிலேஷ் யாதவ், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "கடந்த 2-ம் தேதி ஹாத்ரஸ் மாவட்டத்தில் நடந்த போலே பாபாவின் ஆன்மிக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 112 பெண்கள் உள்பட 121 பேர் உயிரிழந்தனர். உத்தரப் பிரதேச அரசின் தோல்வியே இதற்குக் காரணம். மாநில அரசும்...
சொந்த வாகனத்தில் சைரன் பயன்படுத்திய மகாராஷ்டிர பெண் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி இடமாற்றம்
மகாராஷ்டிராவில் சொந்த வாகனத்தில் சிவப்பு சைரன் விளக்கு பயன்படுத்திய பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 821-வது ரேங்க் பெற்றவர் பூஜா கேத்கர், மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்ட உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பயிற்சி அதிகாரிகளுக்கு வழங்கப்படாத வசதிகளை அவர் பயன்படுத்தி வருவதாக சர்ச்சை எழுந்தது. பூஜா தனது சொந்த காரில் மகாராஷ்டிர அரசு என்ற பலகையும் சிவப்பு-நீல சைரன் விளக்கும் பயன்படுத்தி வந்துள்ளார்.
கூடுதல் ஆட்சியர் அஜய் மோர் இல்லாதபோது அவரது முன் அறையை...
“இது போருக்கான நேரம் அல்ல” – ஆஸ்திரியாவில் மீண்டும் உறுதிப்படுத்திய பிரதமர் மோடி
ஆஸ்திரியாவில் அந்நாட்டு பிரதமர் கார்ல் நெகம்மரைச் சந்தித்துப் பேசிய பிரதமர் மோடி, உக்ரைன் - ரஷ்யா விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து எடுத்துரைத்தார். அப்போது, 'இது போருக்கான நேரம் அல்ல' என்ற தனது முந்தைய கருத்தை மீண்டும் அவர் உறுதிப்படுத்தினார்.
ரஷ்ய பயணத்தை முடித்துக்கொண்டு இரண்டு நாள் பயணமாக நேற்றிரவு (செவ்வாய்க்கிழமை) ஆஸ்திரியா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆஸ்திரியா பிரதமர் கார்ல் நெகம்மர், பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்றார். மேலும், பிரதமர் மோடியோடு செல்ஃபி எடுத்துக்கொண்டார். ஆஸ்திரியாவில் உள்ள இந்தியர்கள்...
மத்திய அரசு ஊழியர்களுக்கு 50% ஓய்வூதியத்துக்கு உத்தரவாதம்: பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்ப்பு
தேசிய ஓய்வூதிய திட்டத்தில் (என்பிஎஸ்) அங்கம் வகிக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அவர்களுக்கு கடைசியாக வழங்கப்பட்ட ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக தருவதை உத்தரவாதமாக்கும் வகையிலான அறிவிப்புகள் வரும் பட்ஜெட்டில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பழைய ஓய்வூதிய முறை கடந்த 2003-ம் ஆண்டு கைடவிடப்பட்டது. அதற்கு பதிலாக, ஊழியர்கள் பங்கேற்புடன் கூடிய தேசிய ஓய்வூதிய திட்டம் 2004—ம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. அந்த ஆண்டிலிருந்து மத்திய அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு தேசிய ஓய்வூதிய திட்டம் கட்டாயமாக்கப்பட்டது. இது வரையறுக்கப்பட்ட ஓய்வூதிய திட்டமாகும்.
இந்த திட்டத்தில்...
ராணுவத்தின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் தடை: தமிழக பாஜக குற்றச்சாட்டு
பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், தமிழக பாஜக முன்னாள் ராணுவ வீரர் பிரிவு தலைவர் ராமன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
அக்னி வீர் திட்டத்தில் 17 வயதில்ராணுவத்தில் சேருபவர்கள் 21 வயது வரை 4 ஆண்டுகள் பணியாற்றுவார்கள். 5 ஆண்டுகள் அவர்கள் பணியாற்றினால், வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் என்ற அங்கீகாரம் கிடைத்துவிடும். முன்னாள் ராணுவ வீரர்களுக்கு நாட்டில்பல்வேறு சலுகைகள் உள்ளன.
இதுபோன்ற சலுகைகளை 5 ஆண்டுகள் பணிபுரிந்து விட்டு,வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு வழங்கினால் அதிக நிதி செலவுகள்...
அமைதியாக நடந்தது விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: 82.48 சதவீத வாக்குப்பதிவு
விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் அமைதியாக நடந்தது. இதில் 82.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியின் திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து, இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதிநடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் அறிவிப்பு வெளியான நிலையில், விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கடந்த ஜூன் 10-ம் தேதி நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
ஜூன் 14-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. 24-ம் தேதி மனுக்கள்...
ஊரகப் பகுதிகளில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்: ஸ்டாலின் இன்று தொடக்கம்
ஊரகப் பகுதி மக்களும் பயன்பெறும் வகையில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை தருமபுரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் பொதுமக்கள் தினசரி அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் அவர்களுக்கு விரைவாகவும், எளிதாகவும் சென்று சேரும் வகையில், ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த 2023 டிசம்பர் 18-ம் தேதி தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மட்டும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்திட்டம் மூலம் இதுவரை 8.74 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
இதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊரகப் பகுதிகளிலும் இத்திட்டத்தை...
‘புதுமைப்பெண்’ திட்டத்தில் ரூ.1,000 பெற அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்: சென்னை ஆட்சியர் அறிவிப்பு
புதுமைப்பெண் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதால், அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளும் மாதம் ரூ.1,000 பெற கல்லூரி மூலம் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெண் கல்வியை போற்றும் விதமாகவும், மாணவிகள் உயர்கல்வியில் சேருவதை ஊக்கப்படுத்தும் வகையிலும் முதல்வர் ஸ்டாலின்தொடங்கி வைத்த ‘புதுமைப்பெண்’திட்டம், சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்கீழ், அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் உயர்கல்வி முடிக்கும்...
இந்தியன் ஆயில் நிறுவனத்தை கண்டித்து டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
டேங்கர் லாரி உரிமையாளர்கள் இந்தியன் ஆயில் நிறுவனத்தைக் கண்டித்து நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் கூறியதாவது: இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பெட்ரோல், டீசல் நிரப்பும் நிறுவனங்கள் தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
இங்கு டேங்கர் லாரிகள் செல்வதற்கான சாலைகுண்டும், குழியுமாக உள்ளது.மேலும், மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெறுவதால் மாற்று வழியில் லாரிகளை இயக்கிசென்றால் அதிக கிலோ மீட்டர்தூரம் ஆகிறது. அதற்குண்டான டீசல் பணம் தருவதில்லை.
சிறு பிரச்சினைகளுக்குக் கூட இந்தியன் ஆயில்...
ரஷ்ய அதிபர் புதினுடன் மோடி பேச்சு: இரு நாடுகள் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
மாஸ்கோவில் நடைபெற்ற 22-வது உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் 22-வது இந்தியா - ரஷ்யா உச்சி மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் மாஸ்கோ சென்ற பிரதமர் மோடிக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனதுவீட்டில் சிறப்பு விருந்து அளித்தார்.
அப்போது அதிபர் புதின் கூறும்போது, “உங்கள் வாழ்க்கையை இந்திய மக்களுக்காக அர்ப்பணித்துள்ளீர்கள். அதனாலேயே, மக்களின் ஆதரவுடன் 3-வது முறையாக பிரதமர்ஆகி இருக்கிறீர்கள்” என்று பாராட்டினார். இதற்கு...














