Home 2024
Yearly Archives: 2024
ரஷ்யா – சென்னை இடையே புதிய கடல்வழி பாதை
ரஷ்யாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் கூட்டம் மாஸ்கோவில் நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:
கடந்த 17-ம் நூற்றாண்டிலேயே குஜராத்தை சேர்ந்த வணிகர்கள் ரஷ்யாவின் அஸ்ட்ராகான் நகரில் குடியேறினர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் மும்பை - ரஷ்யாவின் அஸ்ட்ராகான் துறைமுகங்கள் இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கியது.
அடுத்ததாக, இந்தியாவின் சென்னை - ரஷ்யாவின் விளாடிவாஸ்டோக் துறைமுகங்கள் இடையே புதிய கடல்வழி போக்குவரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான பணிகளை இரு நாடுகளும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.
இந்தியா - ரஷ்யா இடையிலான உறவு...
பசியால் இறக்கும் காசாவின் குழந்தைகள்: பின்னணியில் இஸ்ரேல் என ஐ.நா வல்லுநர்கள் கருத்து
காசாவில் பட்டினியால் குழந்தைகள் உயிரிழந்து வருவதாக ஐ.நா வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதன் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாகவும் அவர்கள் நேற்று (ஜூலை 9) தெரிவித்தனர். இது ஒருவகையில் பாலஸ்தீன மக்கள் மீது நடத்தப்படும் இனப்படுகொலை என்றும் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் வசித்து வரும் மக்கள் தங்களது வசிப்பிடங்களில் இருந்து கான் யூனிஸ் பகுதிக்கு புலம் பெயர்ந்துள்ளனர். இந்நிலையில், அங்கு நிலவும் பட்டினி சூழல் கவனம் பெற்றுள்ளது.
பாலஸ்தீன மக்களுக்கு எதிராக...
3-வது டி 20-ல் ஜிம்பாப்வேயுடன் இன்று மோதல்: வெற்றியை தொடரும் முனைப்பில் இந்திய அணி
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்துவிளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே 13ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. தொடர்ந்து 2-வது ஆட்டத்தில் 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி பதிலடி கொடுத்தது. இதனால் தொடர் 1-1 என சமநிலையை அடைந்தது. இந்நிலையில் இரு அணிகளும் 3-வது ஆட்டத்தில் ஹராரேநகரில் இன்று மோதுகின்றன.
டி 20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற்றிருந்த யஷஸ்வி...
சிராஜுக்கு அரசு வேலை, ஹைதராபாத்தில் வீடு: தெலங்கானா முதல்வர் அறிவிப்பு
மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்ற டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பரிசுகளும், பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ஹைதராபாத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் வீரர் முகமது சிராஜ் நேற்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது அவருக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் சீருடையை வழங்கினார். இதைத் தொடர்ந்து முகமது சிராஜுக்கு, தெலங்கானா...
விராட் கோலியின் அலிபாக் ‘ஹோம் டூர்’ – வீடியோ வைரல்
இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி, மகாராஷ்டிராவின் கடற்கரை நகரமான அலிபாக் நகரத்தில் சொகுசு வீடு கட்டியுள்ளார். இதன் பிரத்யேக வீடியோ காட்சியை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு இந்த வீடு குறித்தும் அவர் சிலாகித்து பேசியுள்ளார். இது வைரலாகி உள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் சிறப்பாக பேட் செய்து ஆட்ட நாயகன் விருதை வென்றிருந்தார். கோப்பை வென்று கையோடு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார். இந்திய அணிக்கான...
‘இந்தியா என் அடையாளம்’ – புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ரியாக்ஷன்
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பதில் பெருமை கொள்வதாக கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில், “இந்தியா என் அடையாளம். தேசத்துக்காக சேவை செய்வது என் வாழ்நாளின் பாக்கியமாக கருதுகிறேன். மீண்டும் அணியில் இணைந்ததை கவுரவமாக கருதுகிறேன். என்ன இந்த முறை எனக்கு வேறு பொறுப்பு. ஆனால், எப்போதும் போல எனது இலக்கு ஒன்று தான். அது ஒவ்வொரு இந்தியரையும் பெருமை கொள்ள செய்வது.
இந்திய அணி வீரர்கள் 140 கோடி இந்திய மக்களின் கனவுகளை...
ராகுலுக்கு எதிரான சர்ச்சை பேச்சு: பாஜக எம்எல்ஏ மீது வழக்கு
மக்களவை எதிர்க்கட்சி தலைவர்ராகுல் காந்தியை நாடாளுமன் றத்திலேயே கன்னத்தில் அறைய வேண்டும் என்று பேசிய கர்நாடக பாஜக எம்எல்ஏ பாரத் ஷெட்டி மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கர்நாடகாவில் உள்ள மங்களூரு வடக்கு தொகுதி எம்எல்ஏ பரத் ஷெட்டி நேற்று முன்தினம் மாலை மங்களூருவில் நடந்த பாஜகவின் பொதுக்கூட்டத்தில் பேசுகையில், “ராகுல் காந்தி குஜராத் மாநிலம் சென்றால் சிவபெருமானின் தீவிர பக்தரை போல நடிக்கிறார்.
அதே ராகுல் கேரளாவுக்கு சென்றால் மதச்சார்பற்ற நபராகவும், தமிழகத்தில் நாத்திகராகவும் மாறிவிடுவார். இந்துக்களும் இந்துத்துவாவும் வேறு வேறு என்று...
கருணாநிதி நினைவு நாணயம் வெளியிட மத்திய அரசு அனுமதி: கெஜட்டில் விரைந்து வெளியிட நிதியமைச்சகம் உத்தரவு
தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நினைவுநாணயத்திற்கு மத்திய நிதியமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இது குறித்த அறிவிப்பை அரசு கெஜட்டில் விரைந்து வெளியிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரான திமுகவின் தலைவருக்காக ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் எம்.கருணாநிதி’ என்ற பெயரில் ஒரு நினைவு நாணயம் வெளியிட தமிழ்நாடு அரசு விரும்பியது. இதற்காக, ரூ.100 மதிப்பில் நினைவு நாணயம்வெளியிடும்படி மத்திய நிதியமைச்சகத்திடம் தமிழக முதல்வர்மு.க.ஸ்டாலின் அரசு சார்பில்கடந்த வருடம் கோரப்பட்டிருந்தது. இந்நாணயத்தை, கடந்த ஜுன் 3-ல் முடிந்த கலைஞர் கருணாநிதியின் நூறாவது...
சட்டவிரோத உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை: டெல்லியில் பெண் மருத்துவர் உட்பட 7 பேர் கைது
சட்டவிரோத உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக பெண் மருத்துவர் உட்பட 7 பேரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.
வங்கதேசம் மற்றும் டெல்லியில் சட்டவிரோத உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெறுவதாக டெல்லி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கடந்த 2 மாதங்களாக போலீஸார் இது தொடர்பான தகவல்களை திரட்டினர். இந்நிலையில், இது தொடர்பாக பெண் மருத்துவர் உட்பட 7 பேரை டெல்லி குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து டெல்லி காவல் ஆணையர் அமித் கோயல் கூறும்போது, “சட்டவிரோத...
உ.பி.யில் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் முதல் தவணை ரூ.40 ஆயிரம் பெற்ற பின்னர் திருமணமான 11 பெண்கள் காதலருடன் மாயம்
பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் (பிஎம்ஏஒய்) முதல் தவணையைப் பெற்றுக் கொண்ட திருமணமான 11 பெண்கள், தங்களது காதலர்களுடன் வீட்டைவிட்டு மாயமான சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
நாடு முழுவதும் பிரதமரின் பிஎம்ஏஒய் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் மக்கள் பயன் பெற்று வருகின்றனர். இந்த திட்டம் பாஜகஆளும் உத்தர பிரதேச மாநிலத்திலும் பிரபலமாக உள்ளது. அண்மையில் அந்த மாநிலத்தின் மகராஜ்கஞ்ச் மாவட்டத்தில் மட்டும் 2,350 பேர் பிஎம்ஏஒய் திட்டத்தின்கீழ் பயன் பெற்றுள்ளனர். முதல்தவணையாக அவர்களுக்கு தலாரூ.40 ஆயிரம் அவர்களது வங்கிக்கணக்குக்கு...














