உ.பி.யில் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் முதல் தவணை ரூ.40 ஆயிரம் பெற்ற பின்னர் திருமணமான 11 பெண்கள் காதலருடன் மாயம்

0
31

பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் (பிஎம்ஏஒய்) முதல் தவணையைப் பெற்றுக் கொண்ட திருமணமான 11 பெண்கள், தங்களது காதலர்களுடன் வீட்டைவிட்டு மாயமான சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.

நாடு முழுவதும் பிரதமரின் பிஎம்ஏஒய் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் மக்கள் பயன் பெற்று வருகின்றனர். இந்த திட்டம் பாஜகஆளும் உத்தர பிரதேச மாநிலத்திலும் பிரபலமாக உள்ளது. அண்மையில் அந்த மாநிலத்தின் மகராஜ்கஞ்ச் மாவட்டத்தில் மட்டும் 2,350 பேர் பிஎம்ஏஒய் திட்டத்தின்கீழ் பயன் பெற்றுள்ளனர். முதல்தவணையாக அவர்களுக்கு தலாரூ.40 ஆயிரம் அவர்களது வங்கிக்கணக்குக்கு வந்துள்ளது.

இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற்றவர்களில் 11 பெண்கள் தங்களது கணவரின் வீட்டை விட்டு வெளியேறி காதலர்களுடன் ஓடிவிட்டதாக தகவல்கள் வந்துள்ளன.

துத்திபாரி, ஷீத்தல்பூர், சாட்டியா,ராம்நகர், பகுல் திஹா, கஸ்ரா,கிஷுன்பூர், மெதவுலி கிராமங்களைச் சேர்ந்த 11 பெண்கள் முதல்தவணை பணத்தை எடுத் துக் கொண்டு காதலர்களுடன் மாயமாகியுள்ளனர்.

பிஎம்ஏஒய் திட்டத்தின் கீழ் ஏழை, நடுத்தர வகுப்பைச் சேர்ந்த வர்கள் வீடு கட்டிக் கொள்ள ரூ.2.5 லட்சம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் முதல் தவணை வந்த பின்னர்தான் அந்தபெண்கள் காதலர்களுடன் மாயமாகி யுள்ளனர்.

வீட்டு வேலையைத் தொடங் காதது தொடர்பாக சம்பந்தப்பட்ட பெண்களின் கணவர்களிடம் பிஎம்ஏஒய் அதிகாரிகள் கேட்ட போது பெண்கள் மாயமாகியுள்ள விஷயம் தெரியவந்துள்ளது. இதையடுத்து வீட்டு வேலையை உடனடியாகத் தொடங்குமாறு அவர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். வீட்டு வேலை தொடங்காத நிலையில் மாவட்ட ஊரகமேம்பாட்டு ஏஜென்சி (டியுடிஏ) அதிகாரிகள், சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

இந்நிலையில், அந்தப் பெண் களின் கணவர்கள் 2-வது தவணைபணத்தை தங்களுடைய வங்கிக் கணக்குக்கு மாற்றித் தருமாறு வங்கி அதிகாரிகளிடமும், பிஎம்ஏஒய் திட்ட அதிகாரிகளிடமும்கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு திட்டத்தில் பயன் அடைந்தபின்னர், அந்தத் தொகையுடன் பெண்கள் காதலர்களுடன் மாய மாகியுள்ள சம்பவம் உ.பி.யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.