Google search engine
Home 2024

Yearly Archives: 2024

7 மாநிலங்களில் 13 பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

பிஹார், மேற்கு வங்கம், தமிழகம், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் ஆகிய ஏழு மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. மாலை 6 மணிக்கு முடிவடைய உள்ள நிலையில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்து வருகிறது மேற்கு வங்க மாநிலத்தில் ராய்கஞ்ச், ரணகாட் தக்ஷின், பாக்தா மற்றும் மணிக்தலா ஆகிய 4 தொகுதிகளிலும், இமாச்சலப் பிரதேசத்தில் டேஹ்ரா, ஹமிர்பூர் மற்றும் நலகர் ஆகிய...

தமிழகம் முழுவதும் போதை பொருள் வழக்குகளில் குறிப்பிட்ட வழக்கறிஞர் ஆஜராகும் மர்மம்: காவலர்களை மாற்ற டிஜிபிக்கு ஐகோர்ட் பரிந்துரை

கேரள மாநிலம், வெல்மான் எடவட்டத்தைச் சேர்ந்தவர் டோனி என்ற ஆண்டோ வர்கீஸ். கஞ்சா கடத்தல் வழக்கில் மதுரை நாகமலை புதுக்கோட்டை போலீஸாரால் கைது செய்யப்பட்ட இவர், 15 மாதங்களாக சிறையில் இருப்பதால், ஜாமீன் வழங்கக் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். அப்போது, வழக்கறிஞர், மனுதாரர் கையெழுத்து இல்லாமல் இருந்த மனுவைஏற்றதற்கும், வழக்கறிஞர் கையெழுத்திட்ட வக்காலத்தை திரும்ப வழங்கியதற்கும், உயர் நீதிமன்றப் பதிவுத் துறை மீது நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். பின்னர் நடைபெற்ற விசாரணையில், தமிழகம்...

பேருந்து – ரயில் ஒருங்கிணைந்த பயணச்சீட்டு: செயலியை உருவாக்க தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம்

சென்னையில் அரசு பேருந்துகள்,புறநகர் மின்சார ரயில்கள், மெட்ரோரயில்களில் லட்சக்கணக்கான வர்கள் தினசரி பயணிக்கின்றனர். ஆனால், தனித்தனியான முறைகளில் இவற்றுக்கான பயணச்சீட்டுகளை பெற வேண்டியுள்ளது. இந்நிலையில், பொதுமக்களின் சிரமங்களை குறைக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பு (கும்டா) தனது முக்கியமான முயற்சியாக, சென்னை பெருநகர போக்குவரத்துக்கழக பேருந்துகள், சென்னை மெட்ரோ ரயில், தெற்கு ரயில்வே புறநகர் ரயில் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பயணச்சீட்டு மற்றும் பயணத்திட்டமிடல் செயலியை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த ஒருங்கிணைந்த செயலியை உருவாக்கும் வகையில், கும்டா அமைப்பு...

ரயில்வே பொறியியல் பணி: விரைவு, மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம்

தென் மத்திய ரயில்வேயில் விஜயவாடா யார்டில் பொறியியல் பணி காரணமாக 8 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதன் விவரம்: ஆந்திர மாநிலம் பித்ரகுண்டா - சென்னை சென்ட்ரலுக்கு ஆக.4முதல் ஆக.11 வரை அதிகாலை 4.55மணிக்கு இயக்கப்படும் விரைவுரயில் (17237), மறு மார்க்கமாக, சென்னை சென்ட்ரல் - பித்ரகுண்டாவுக்கு ஆக.4 முதல் ஆக.11 வரைமாலை 4.30 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில் (17238) ஆகிய 2 ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. ஆந்திர மாநிலம் விஜயவாடா - சென்னை சென்ட்ரலுக்கு ஆக.5முதல் ஆக.10...

பட்டியலினத்தவருக்கு எதிரான குற்றங்கள்: எஸ்சி, மனித உரிமை ஆணையங்களில் தமிழக பாஜக புகார்

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை உட்பட பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை சுட்டிக்காட்டி, தமிழக அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய எஸ்சி, மனித உரிமை ஆணையங்களை தமிழக பாஜக குழுவினர் வலியுறுத்தினர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் வி.பி.துரைசாமி தலைமையிலான குழுவினர் தேசிய பட்டியலின ஆணையம், மனித உரிமைகள் ஆணையத்தில் முறையிட புதுடெல்லிக்கு சென்றனர். உடன் மாநில பொதுச்...

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து, இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த ஜூன் 14-ம் தேதி முதல் 21-ம் தேதி வரைவேட்புமனு தாக்கல் நடந்தது. 24-ம்தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடந்து, 26-ம் தேதி இறுதிவேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதிமுக போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ள நிலையில், திமுக சார்பில் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும்...

ரஷ்யா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு: அதிபர் புதினுடன் இன்று பேச்சுவார்த்தை

இரண்டு நாள் அரசுமுறை பயணமாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறைபயணமாக நேற்று மாஸ்கோ சென்றடைந்தார். விமான நிலையம் சென்றடைந்த அவரை அந்நாட்டு மூத்த துணைப் பிரதமர் டெனிஸ் மான்டுரோவ் வரவேற்றார். பின்னர் அந்நாட்டு பாரம்பரிய முறைப்படி ராணுவ மரியாதையும் சிவப்புகம்பள வரவேற்பும் வழங்கப்பட்டது. பின்னர் பிரதமர் மோடியும் மாண்டுரோவும் ஒரே காரில் அங்கிருந்து ஓட்டலுக்கு சென்றனர். சீன அதிபர் ஜி...

“என் வாழ்வின் ஒரே இலக்கு என் தேசமும், என் மக்களும்தான்” – பிரதமர் மோடி பேச்சு @ ரஷ்யா

“உங்கள் முழு வாழ்க்கையையும் உங்கள் நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்துள்ளீர்கள். இதனை இந்திய குடிமக்கள் நன்கு அறிவார்கள்” என்று மாஸ்கோவில் பிரதமர் மோடியை வரவேற்று ரஷ்ய அதிபர் புதின் பேசிய நிலையில், அதற்குப் பதிலளித்த மோடி, “நீங்கள் சொல்வது உண்மைதான். எனது ஒரே இலக்கு என் நாடும், நாட்டு மக்களும்தான்” என்று கூறியுள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறைபயணமாக நேற்று மாஸ்கோ சென்றடைந்தார். விமான நிலையம் சென்றடைந்த அவரை அந்நாட்டு மூத்த துணைப் பிரதமர் டெனிஸ்...

ஒலிம்பிக்கில் இம்முறை இந்தியா இரட்டை இலக்கத்தில் பதக்கம் வெல்லும்: தேசிய கொடியை ஏந்திச் செல்லும் சரத் கமல் நம்பிக்கை

பாரிஸ் ஒலிம்பிக்கில் இம்முறை இந்தியா இரட்டை இலக்கத்தில் பதக்கம் வெல்லும் என தேசிய கொடியை ஏந்திச் செல்ல உள்ள இந்திய டேபிள் டென்னிஸ் நட்சத்திரம் சரத் கமல் தெரிவித்தார். மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் வரும் 26-ம்தேதி பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் கோலாகலமாக தொடங்குகிறது. ஆகஸ்ட் 11-ம் தேதி வரைநடைபெறும் இந்தத் திருவிழாவின் தொடக்க நாளில் தேசிய கொடியை 4 முறை ஒலிம்பிக்கில் பங்கேற்ற டேபிள் டென்னிஸ் நட்சத்திர வீரரான சரத் கமல் ஏந்திச் செல்லஉள்ளார். இந்நிலையில் சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்...

தெரு நாய்களை கணக்கெடுக்கும் பணி நாளை தொடக்கம்: மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னை மாநகராட்சி சார்பில் நாளை (ஜூலை 10) தெரு நாய்களை கணக்கெடுக்கும் பணி தொடங்க இருப்பதாக மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி, உலகளாவிய கால்நடை சேவை நிறுவனம், தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம்மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து தெரு நாய்களை கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்ள உள்ளது. இப் பணியில் ஈடுபடுவோருக்கான பயிற்சி முகாம் ரிப்பன் மாளிகைவளாகத்தில் நேற்று நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் பங்கேற்று, முகாமைத்தொடங்கிவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தெரு நாய்களை கணக்கெடுக்கும் பணி ஜூலை 10-ம் தேதி தொடங்குகிறது. சென்னையில்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கம்

கோடை கால விடுமுறையையொட்டி, சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவிலுக்கு ஒருவழி சிறப்பு அதிவிரைவு ரயில் புதன்கிழமை (ஏப்.22) இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பிற்பகல் 1.25 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள்...

குளச்சல்: மயங்கி விழுந்த வேட்பாளர்; மருத்துவமனையில் அனுமதி

குளச்சல் சட்டமன்ற தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ராஜாசிங், நேற்று மாலை இறுதி பிரச்சாரத்தின் போது பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்கள் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திடீரென மயங்கி விழுந்த...

அருமனை: டீ மாஸ்டரை தாக்கி கொலை மிரட்டல்

அருமனை பகுதியை சேர்ந்த டீ மாஸ்டர் சிவன் குட்டி (52) என்பவர், உறவினர் ஸ்ரீ குமார் உடனான முன்விரோதம் காரணமாக தலையில் கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததில் படுகாயமடைந்து குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை...