Home 2024
Yearly Archives: 2024
3 புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டம்: நீதிமன்றத்தை புறக்கணித்தனர்
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 3 குற்றவியல் சட்டங்களை திரும்ப பெறக்கோரி உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நேற்றுநீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
இந்திய தண்டனை சட்டம், குற்ற விசாரணை முறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகிய சட்டங்களுக்கு பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக் ஷிய அதிநியம் என்ற பெயர்களில் மூன்று புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த 3 புதிய சட்டங்களையும்...
விடுபட்ட வங்கி ஆவணங்களை வழங்க கோரிய செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த மனு மீதான உத்தரவை தள்ளி வைக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மூன்று புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
அதில், நீதிமன்ற உத்தரவுப்படி வழங்கப்பட்ட வங்கி ஆவணங்களில் வேறுபாடுகள் உள்ளதால் விடுபட்ட ஆவணங்களை வழங்கவும், கரூர் சிட்டி யூனியன் வங்கியில் உள்ள கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுக்களை விசாரித்தமுதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி, வங்கி தொடர்பான...
முதிர்ச்சி இல்லாமல் செயல்படுகிறார் ராகுல்காந்தி: மத்திய அமைச்சர் சிவராஜ் சவுகான் குற்றச்சாட்டு
குழப்பம் மற்றும் பொய்களை மட்டுமே ராகுல் காந்தி பரப்புகிறார் என்று மத்திய அமைச்சர் சிவராஜ் சவுகான் கூறினார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி கடந்த சனிக்கிழமை அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அயோத்தியில் பாஜகவை தோற்கடித்ததன் மூலம், பாஜக மூத்த தலைவர் அத்வானியால் தொடங்கப்பட்ட ராமர் கோயில் இயக்கத்தை இண்டியா கூட்டணி தோற்கடித் துள்ளது” என்றார்.
சமீபத்திய மக்களவைத் தேர்தலில் அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் பாஜக வேட்பாளரை இண்டியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி வேட்பாளர் தோல்வியுறச் செய்த நிலையில் ராகுல் இவ்வாறு...
வெளிநாட்டு தலைவர்களின் பாதுகாப்புக்காக ரூ.20 கோடியில் கவச கார்களை வாங்க திட்டம்
வெளிநாட்டு தலைவர்கள் இந்தியாவுக்கு வரும்போது அவர்களுக்கு சேவை செய்வதற்காக ரூ.20 கோடி மதிப்பில் 4 கவச கார்களை மெர்சிடிஸ் நிறுவனத்திடமிருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: வெளிநாட்டு தலைவர்களின் இந்திய வருகையின்போது அவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வது மிக முக்கியமாகிறது. இதனை கருத்தில் கொண்டு 4 கவச மெர்சிடிஸ் கார்களை ஜெர்மனியின் டெய்ம்லர் நிறுவனத்திடமிருந்து மத்திய அரசு வாங்க உள்ளது. இதற்காக, 2.2 மில்லியன் யூரோக்கள் செலவிடப்பட உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.20...
பிஜு ஜனதா தள கட்சியின் மாநில நிர்வாகிகள் கூண்டோடு மாற்றம்: தேர்தல் தோல்வியை அடுத்து நவீன் பட்நாயக் நடவடிக்கை
ஒடிசா மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல் தோல்வியின் எதிரொலியாக பிஜு ஜனதா தளம் கட்சியின் மாநில நிர்வாகிகளை கூண்டோடு மாற்றி அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து பட்நாயக் நேற்று மேலும் கூறியதாவது: பிஜு ஜனதா தளம் கட்சியின் மாநில அளவிலான நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் அனைவரும் மாற்றப்பட்டுள்ளனர். அதேநேரம் மாவட்ட அளவிலான பொறுப்பாளர்கள் தொடர்ந்து அதே பதவியில் நீடிப்பர். மாநில அளவில் புதிய பொறுப்பாளர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவர்.
மேலும், கட்சியின் புதிய தேசிய செய்தித் தொடர்பாளர்களாக சந்த்ருத்...
சாலையில் தொழுகையை அனுமதிக்க கோரிய பீம் ஆர்மி தலைவருக்கு காங்கிரஸ் எம்.பி. இம்ரான் கண்டனம்
உ.பி.யில் மசூதிகளில் இடமின்மை காரணமாக முஸ்லிம்கள் சாலைகளில் தொழுகை நடத்துவது சர்ச்சையானது. இதற்கு ஆதரவாக பீம் ஆர்மி எம்.பி. ராவண் என்கிற சந்திரசேகர் ஆசாத் கூறிய கருத்தைகாங்கிரஸ் எம்.பி. இம்ரான் மசூத் கண்டித்துள்ளார்.
ராஜஸ்தான் ஹரியாணா, உ.பி. உள்ளிட்ட வட மாநிலங்களில் வெள்ளிக்கிழமைகளில் மசூதிகள் நிரம்பி வழிவதால் முஸ்லிம்கள் சாலைகளில் தொழுகை நடத்தி வந்தனர். கரோனா பரவலுக்கு பிறகு ஹரியாணாவின் குருகிராமில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. பிறகு உ.பி. மற்றும் டெல்லியிலும் இந்த பிரச்சினை வெடித்தது. இதையடுத்து சாலைகளில் தொழுகை நடத்த பாஜக ஆளும்...
மும்பைக்கு ரெட் அலர்ட் | ரயில், விமான சேவைகள் பாதிப்பு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரில் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (செவ்வாய்க்கிழமை) மும்பை மற்றும் அதன் அருகில் அமைந்துள்ள மற்ற பகுதிகளில் கனமழை பொழியும் என ரெட் அலர்ட் கொடுத்துள்ளது.
அதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பை, தானே, நவி மும்பை மற்றும் ஊரக பகுதிகளான ரத்னகிரி உள்ளிட்ட இடங்களில் இன்று (செவ்வாய்க் கிழமை) கனமழை பொழியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று நடைபெற இருந்த மும்பை பல்கலைக்கழக...
பொது இடங்களில் கல்லூரி மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டால் 2 ஆண்டு சிறை தண்டனை: ரயில்வே காவல்துறை எச்சரிக்கை
ரயில்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் கல்லூரி மாணவர்கள் தொடர் வன்முறையில் ஈடுபட்டால், 2 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சென்னை ரயில்வே காவல் துறை டிஎஸ்பி ரமேஷ் எச்சரித்துள்ளார்.
செங்கல்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு மின்சார ரயில்களில் கல்லூரி மாணவர்கள் வந்து செல்கின்றனர். வெவ்வேறு கல்லூரிகளில் படிக்கும் இந்த மாணவர்கள் இடையே ‘ரூட் தல’ விவகாரத்தில் அவ்வப்போது மோதல் ஏற்படுகிறது.
இதை தடுக்கும் விதமாக கல்லூரிகளுக்கு சென்று ரயில்வே போலீஸார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்....
அமீபா நுண்ணுயிரியால் மூளையழற்சி பாதிப்பு; ஏரி, குளங்களில் யாரும் குளிக்க வேண்டாம்: பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
கேரளாவில் அமீபா நுண்ணுயிரியால் மூளையழற்சி பாதிப்பு பரவி வருவதால் தமிழகத்தில் ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளில் யாரும் குளிக்க வேண்டாம் என்று தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.
கேரள மாநிலத்தில் அமீபா நுண்ணுயிரியால் ஏற்படும் மூளையழற்சி பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. இதுவரை அந்நோய் பாதிப்புக்கு மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். அசுத்தமான தண்ணீரில் உள்ள அமீபா மூலம் உருவாகும் என்சபலிட்டிஸ் எனப்படும் மூளையழற்சி பாதிப்பு ஏற்படுகிறது. சுகாதாரமற்ற தண்ணீரில் குளிக்கும்போது சுவாசப் பாதைவழியே ஊடுருவிச் செல்லும் அந்த வகை அமீபா, நேரடியாக...
போயஸ் கார்டனில் வீடு கட்டியது ஏன்? – தனுஷ் விளக்கம்
தனுஷின் 50 வது படம் ‘ராயன்’. இதில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், சந்தீப்கிஷண், காளிதாஸ், துஷாரா விஜயன் அபர்ணா பாலமுரளி உட்பட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இதை தனுஷ் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.
இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் பேசிய தனுஷ் கூறியதாவது: ஒன்றுமே தெரியாமல் இருந்த என்னை நடிகன் ஆக்கியது என் அண்ணனும் இயக்குநருமான செல்வராகவன். அவர்தான் என் ஆசான். அவர்தான் குரு. எனக்கு கிரிக்கெட் சொல்லிக் கொடுத்தது, சாப்பிடச் சொல்லி கொடுத்தது, வாழ்வில் போராட...














