Home 2024
Yearly Archives: 2024
எங்கள் செல்வி: தயாரிப்பாளரை தாக்கப் பாய்ந்த மல்யுத்த வீரர்!
நர்கிஸ், பல்ராஜ் சாஹ்னி நடித்து 1958-ல் வெளியான இந்தி திரைப்படம், ‘லாஜ்வந்தி’. நரேந்திர சூரி இயக்கியிருந்தார். 1959-ம் ஆண்டில் கேன்ஸ் பட விழாவின் தங்கப்பனை விருதுக்குப் போட்டியிட்ட இந்தப் படத்தைத் தழுவி தமிழில் உருவாக்கப்பட்ட படம், ‘எங்கள் செல்வி’. யோகானந்த் இயக்கிய இந்தப் படத்துக்கு முரசொலி மாறன் திரைக்கதை, வசனம் எழுதினார்.
அக்கினேனி நாகேஸ்வரராவ், அஞ்சலி தேவி ஜோடியாக நடித்தனர். டி.எஸ்.பாலையா, பாலாஜி, வி.ஆர்.ராஜகோபால், சி.கே.சரஸ்வதி, கே.ஆர்.செல்லம், மல்யுத்த வீரரும் இந்திநடிகருமான தாரா சிங், சர்வதேச மல்யுத்த வீரர் கிங்காங் உட்பட பலர் நடித்தனர்.
கே.வி.மகாதேவன்...
இந்தியா, அமெரிக்கா எச்சரித்த பிறகும் வெளிநாட்டு ஆய்வு கப்பலுக்கு தடை விதிக்க இலங்கை மறுப்பு
வெளிநாட்டு ஆய்வு கப்பல்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அடுத்தாண்டு முதல் விலக்கிக்கொள்ள இலங்கை முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீன ஆய்வுக் கப்பல்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த2022-ம் ஆண்டு சீனாவின் ஆய்வுகப்பல் யான் வாங் 5 இலங்கையில் உள்ள ஹம்பந்தோட்டா துறைமுகத்தில் நின்று சென்றது. கடந்த 2023-ம் ஆண்டில் சீனாவின் யான் வாங் 6 ஆய்வு கப்பல் இலங்கை வந்து சென்றது. இது குறித்து அமெரிக்கா, இந்தியா ஆகியவை இலங்கையிடம் கவலை தெரிவித்தன. அந்த கப்பல்கள்...
பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் | முன்னிலையில் இடதுசாரி கூட்டணி
பிரான்ஸ் நாட்டில் ஜூன் 30 மற்றும் ஜூலை 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பின் படி இடதுசாரி கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. இந்த முறை அங்கு வலதுசாரி கூட்டணி கட்சியான நேஷனல் ரேலி தலைமையில் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இடதுசாரி கூட்டணி கட்சிகள் அதிக இடங்களில் முன்னிலை பெற்று இருந்தாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை அந்தக் கூட்டணியால் பெற முடியவில்லை என தெரிகிறது. இரண்டாம் இடத்தில் அதிபர் இமானுவேல் மேக்ரான்...
மோடியின் வருகையை மேற்கத்திய நாடுகள் பொறாமையுடன் பார்க்கின்றன – ரஷ்யா
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று (திங்கட்கிழமை) ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்தியா - ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்கும் அவர், அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்த சூழலில் பிரதமர் மோடியின் வருகையை மேற்கத்திய நாடுகள் பொறாமையுடன் பார்ப்பதாக மாஸ்கோவின் செய்தித் தொடர்பாளர் பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
“மேற்கத்திய நாடுகள் இந்திய பிரதமர் மோடி, ரஷ்யாவுக்கு வருகை தருவதை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. மேலும், இதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கின்றன. பொறாமையால் இப்படி...
ஓய்வை அறிவித்தார் பிரபல WWE வீரர் ஜான் சீனா!
பிரபல WWE மல்யுத்த வீரரும் நடிகருமான ஜான் சீனா தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளார். 2025ஆம் ஆண்டு நடக்கவுள்ள ரஸ்ஸல்மேனியா 41 போட்டிதான் தான் கலந்துகொள்ளும் கடைசி போட்டி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கனடாவின் டொரான்டோ நகரில் இன்று (ஜூலை 7) நடைபெற்ற ‘மனி இன் தி பேங்க்’ மல்யுத்த போட்டியின்போது சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த ஜான் சீனா தன்னுடைய ஓய்வை அறிவித்தார்.
ஜான் சீனா மைக்கை எடுத்து பேசத் தொடங்கியபோது ரசிகர்கள் கூட்டம் “நோ.. நோ” என்று கூச்சலிட்டது. பின்னர் பேசிய அவர், “இந்த இரவில்,...
டி20 போட்டியில் அபிஷேக் சர்மா சதம்: ஜிம்பாப்வேயை வீழ்த்தியது இந்திய அணி
ஜிம்பாப்வே அணிக்கெதிரான 2-வது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணி, ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் 2-வது டி20 ஆட்டம் நேற்று ஹராரே மைதானத்தில் நடைபெற்றது.
முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 234 ரன்களைக்...
சென்னையில் வரும் 13 முதல் முதியோர் டி20 கிரிக்கெட்
சென்னையில் தமிழ்நாடு கிரிக்கெட் மூத்தோர் சங்கம் சார்பில் 50 பிளஸ் வயதினருக்கான டி.எஸ்.மகாலிங்கம் டிராபி டி20 கிரிக்கெட் தொடர் வரும் 13-ம் தேதி முதல் நடைபெற உள்ளது.
இந்தத் தொடர் ஜூலை 28-ம் தேதி வரை சென்னை தாம்பரத்தில் உள்ள ரெட்டி சுமங்கலி டர்ஃப் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் விசிஏ, எம்சிசி, ஐஎன்எஸ்சி, ஐஎஃப்சிஆர், ஜிஎன்எஸ்சி, கோவை, சிடிசிஏ, எம்ஜிசி, எம்ஆர்சி, காஸ்மோ பாலிட்டன் ஆகிய 10 அணிகள் பங்கேற்கவுள்ளன. ஒவ்வொரு அணியும் தலா 3 லீக் ஆட்டங்களில் விளையாடும். வெற்றி பெறும்...
சாம்பியன்ஸ் டிராபியில் ரோகித் இந்தியாவை வழிநடத்துவார்: ஜெய் ஷா
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடர் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் இந்திய அணியை ரோகித் சர்மா வழிநடத்துவார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக ரோகித் செயல்படுவார் என்பதை அவர் உறுதி செய்துள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் ரோகித் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று இருந்தது. இந்திய அணிக்கு பாராட்டு...
6 தீவிரவாதிகள் காஷ்மீரில் சுட்டுக் கொலை: 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் முடர்கம், சானிகம் ஆகிய கிராமங்களில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. ராணுவ வீரர்கள், மத்திய பாதுகாப்பு படையினர், போலீஸார் இணைந்து கடந்த 6-ம் தேதி தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது, முடர்கம் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர் பிரதீப் உயிரிழந்தார். சானிகம் பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டையில்4 தீவிரவாதிகள் சுட்டுக்...
உணவுப் பொருள் பாக்கெட்டுகளில் சர்க்கரை, உப்பு, கொழுப்பு அளவை பெரிய எழுத்தில் அச்சிட ஒப்புதல்
உணவுப் பொருள் பாக்கெட்டுகளில் சரக்கரை, உப்பு, கொழுப்பு சத்து அளவுகளை பெரிய எழுத்தில் அச்சிடும் திட்டத்துக்கு, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (எப்எஸ்எஸ்ஏஐ) ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சர்க்கரை, உப்பு, கொழுப்பு சத்துக்கள் அதிகம் உள்ள பாக்கெட்உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வதுதான் பல நோய்களுக்கு காரணம் எனவும், அவற்றை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.அதனால் உணவுப் பொருள் பாக்கெட்டுகளில் சரக்கரை, உப்பு, கொழுப்பு ஆகியவை எவ்வளவு சதவீதம் உள்ளன...














