இந்தியா, அமெரிக்கா எச்சரித்த பிறகும் வெளிநாட்டு ஆய்வு கப்பலுக்கு தடை விதிக்க இலங்கை மறுப்பு

0
82

வெளிநாட்டு ஆய்வு கப்பல்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அடுத்தாண்டு முதல் விலக்கிக்கொள்ள இலங்கை முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீன ஆய்வுக் கப்பல்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த2022-ம் ஆண்டு சீனாவின் ஆய்வுகப்பல் யான் வாங் 5 இலங்கையில் உள்ள ஹம்பந்தோட்டா துறைமுகத்தில் நின்று சென்றது. கடந்த 2023-ம் ஆண்டில் சீனாவின் யான் வாங் 6 ஆய்வு கப்பல் இலங்கை வந்து சென்றது. இது குறித்து அமெரிக்கா, இந்தியா ஆகியவை இலங்கையிடம் கவலை தெரிவித்தன. அந்த கப்பல்கள் இலங்கை துறைமுகத்தில் நின்று சென்றால், இந்தியாவை உளவு பார்க்கும் நடவடிக்கையில் ஈடுபடும் என இலங்கையிடம் இந்தியாகவலை தெரிவித்தது.

இலங்கை அரசு கடந்த 2022-ம் ஆண்டு முதல் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதால் இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளில் இருந்து கடனுதவி பெற்றுள்ளது. இதனால் அதற்கு இரு நாடுகளும் முக்கியம். இதனால் வெளிநாட்டு ஆய்வு கப்பல்கள் இலங்கை துறைமுகத்தை பயன்படுத்துவதற்கு கடந்த ஜனவரி மாதம் தடைவிதிக்கப்பட்டது. ஆனால் சீன கப்பலுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்து இலங்கை அனுமதி அளித்தது. மற்ற நாடுகளின் கப்பலுக்கு இந்த தடை தொடரும் என அறிவித்தது.

சோனார் வசதி: இந்நிலையில் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரிஜப்பான் பயணம் மேற் கொண்டுள்ளார். தற்போது இலங்கைக்குசோனார் வசதியுடன் கூடிய கப்பலை வழங்க ஜப்பான் திட்டமிட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து அலி சப்ரி அளித்த பேட்டியில் கூறியதாவது:

வெவ்வேறு நாடுகளுக்கு வெவ்வேறான விதிமுறைகளை இலங்கையால் பின்பற்ற முடியாது. அடுத்த நாடுகளுக்கு இடையேயான பிரச்சினைகளில் நாங்கள் தலையிட மாட்டோம். அடுத்தாண்டு ஜனவரி முதல் வெளிநாட்டு ஆய்வு கப்பல்கள் இலங்கை வந்து செல்ல தடைவிதிக்கப்படாது. இவ்வாறு அலி சப்ரி கூறினார்