Google search engine
Home 2024

Yearly Archives: 2024

மலைப்பகுதியில் சீனாவுக்கு பதிலடி கொடுக்க ‘ஜோராவர்’ இலகுரக பீரங்கி தயார்: 2027-ல் ராணுவத்தில் சேர்க்கப்படும்

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனமும் (டிஆர்டிஓ) எல் அண்ட் டி நிறுவனமும் இணைந்து ஜோராவர் இலகுரக பீரங்கியை தயாரித்துள்ளன. கிழக்கு லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட உயரமான மலைப்பகுதிகளில் போரில் பயன்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 25 டன் எடை கொண்ட இந்த பீரங்கி, குஜராத் மாநிலம் ஹசிராவில் நேற்று முன்தினம்பரிசோதித்துப் பார்க்கப்பட்டது. இந்த திட்டத்தை நேற்று முன்தினம் ஆய்வு செய்த டிஆர்டிஓதலைவர் சமிர் கே. காமத் கூறும்போது, “நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட இலகுரக பீரங்கியை பார்க்கும்போது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது....

கர்நாடகாவில் டெங்கு காய்ச்சலால் 6,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ்நேற்று முன்தினம் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர், தினேஷ் குண்டுராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டெங்கு பரவல் தொடர்பாக மாவட்டவாரியாக சுகாதார‌த்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். அதில்மாநிலம் முழுவதும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.அதில் பெங்களூருவில் மட்டும் 2 ஆயிரத்துக்கும்மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெங்கு பரவல் காரணமாக பொதுமக்கள் பீதி அடைய தேவையில்லை. பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கொசுவை அழிக்கும் பணியில்...

ஜார்க்கண்ட் முன்னாள் அமைச்சர் ஆலம்கிர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்: அமலாக்கத் துறை நடவடிக்கை

ஜார்க்கண்ட் முன்னாள் அமைச்சர்ஆலம்கிர் மற்றும் சிலர் மீது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ்அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. மேலும் ரூ.4.42 கோடி சொத்தை முடக்கி உள்ளது. இதுகுறித்து அமலாக்கத் துறை நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், “ஜார்க்கண்ட் முன்னாள் அமைச்சர் ஆலம்கிர் ஆலம்,அவரது முன்னாள் தனிச் செயலாளர் சஞ்சீவ் குமார் லால், லால் மனைவி ரீட்டா மற்றும் வீட்டு பணியாளர் ஜஹாங்கிர் ஆலம் ஆகியோருக்கு சொந்தமான ரூ.4.42 கோடி சொத்து முடக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் கடந்த 4-ம்...

கிண்டி ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் 50 சதவீதம் நிறைவு: ரயில்வே அதிகாரிகள் தகவல்

அம்ரித் பாரத் நிலையம் திட்டத்தின் கீழ், சென்னை கிண்டி ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. தற்போது வரை, 50 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ‘அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டம்’ என்ற திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வேயில் 116 நிலையங்கள் மேம்படுத்த அடையாளம் காணப் பட்டுள்ளன. இவற்றில், சென்னை ரயில்வே கோட்டத்தில் 17 ரயில்நிலையங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிலும், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் சென்னை கடற்கரை, பூங்கா, பரங்கிமலை, கிண்டி, மாம்பலம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு...

வேளச்சேரி உள்ளிட்ட 3 இடங்களில் 13, 14 தேதிகளில் பழைய பொருட்கள் சேகரிப்பு முகாம்: மின்னணு கழிவுகளும் பெறப்படுகிறது

கஸ்தூரிபா நகர் குடியிருப்போர் நலசங்கம் சார்பில் வரும் ஜூலை 13, 14 தேதிகளில் அடையார், திருவான்மியூர், வேளச்சேரி ஆகிய இடங்களில் பழைய பொருட்கள் சேகரிப்பு முகாம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அச்சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொதுமக்கள் பலர் தங்கள் வீடுகளில் தேவையற்ற பழையபொருட்களை என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டிலேயே வைத்திருக்கின்றனர். இவர்களுக்கு தேவையற்ற பொருள், மற்றவர்களுக்கு பயனுள்ள பொருளாக உள்ளன. அதனால் பழைய பொருட்களை, தேவையானவர்களிடம் பெற்று, அவை குப்பைக்கு செல்வதைதடுக்கும் நோக்கில் வரும் ஜூலை 13,14 தேதிகளில் பழைய பொருட்கள்...

ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதி மறுப்பு ஏன்? – நீதிமன்ற விவாத விவரம்

ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூர், பந்தர் கார்டன் தெருவில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி(50) நேற்று முன்தினம் மனு கொடுத்தார். அந்தமனு பரிசீலிக்கப்படாததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் அவசர வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று காலை 9 மணிக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆர்.சங்கரசுப்பு, ஆர்.கிருஷ்ணகுமார் ஆகியோர் ஆஜராகி, ‘‘2 ஆயிரத்து 700 சதுர...

100 நாள் வேலை, பதவிக்காலம் பறிபோகும் என்பதால் நகர்ப்புறத்தோடு ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு

ஊரகப்பகுதிகளில் 100 நாள் வேலை திட்டம் பாதிக்கும் என்பதால் நகர்ப்புற உள்ளாட்சிகளோடு ஊராட்சிகளை இணைக்கவும் தற்போது பதவியில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் பறிபோகும் என்பதால் உள்ளாட்சி தேர்தலை முன்கூட்டியே நடத்தவும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழகத்தில் உள்ள 6 வகையான உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. மாநில தேர்தல் ஆணையம் இந்த தேர்தல்களை நடத்துகிறது. தற்போது பதவியில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில், 2019-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதற்கிடையில், ஏற்கெனவே இருந்த திருநெல்வேலி, வேலூர்,...

தமிழகத்தில் பாமாயில், துவரம் பருப்பு விநியோகிப்பதில் சிக்கல்: ஊழியர்கள் அதிருப்தி

தமிழக அரசின் சார்பில், பொது விநியோகத்திட்ட பொருட்களான அரிசி, சர்க்கரை, கோதுமை தவிர, சிறப்பு பொது விநியோக திட்டத்தின் கீழ் மானிய விலையில் ஒரு கிலோ துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த மே மாதம் முதல் இப்பொருட்கள் கிடைப்பதில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. மாதாமாதம் தேவைப்படும் அளவு பொருட்கள் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பெறப்பட்டு, கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த மே மாதம் போதிய அளவில் பாமாயில், பருப்பு வழங்கப்படவில்லை. அப்போது மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக...

அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த எம். எல். ஏ.

அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்திற்குட்பட்ட கனகப்புரத்தில், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என். தளவாய்சுந்தரம், அவரது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ஜெஸீம் அவர்கள் குமரி கிழக்கு மாவட்ட கழக இணை செயலாளர் தோவாளை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சாந்தினி பகவதியப்பன், அரசு அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நாகர்கோவில் மாநகராட்சியில் ஆட்சியர் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகள், மழைநீர் சேகரிப்பு திட்டம், பாதாள சாக்கடை, சுகாதார கட்டிடங்கள், கிருஷ்ணன் கோவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், இதர திட்டப்பணிகள் முறையாக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறதா என ஆட்சியர் ஸ்ரீதர் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கம்

கோடை கால விடுமுறையையொட்டி, சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவிலுக்கு ஒருவழி சிறப்பு அதிவிரைவு ரயில் புதன்கிழமை (ஏப்.22) இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பிற்பகல் 1.25 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள்...

குளச்சல்: மயங்கி விழுந்த வேட்பாளர்; மருத்துவமனையில் அனுமதி

குளச்சல் சட்டமன்ற தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ராஜாசிங், நேற்று மாலை இறுதி பிரச்சாரத்தின் போது பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்கள் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திடீரென மயங்கி விழுந்த...

அருமனை: டீ மாஸ்டரை தாக்கி கொலை மிரட்டல்

அருமனை பகுதியை சேர்ந்த டீ மாஸ்டர் சிவன் குட்டி (52) என்பவர், உறவினர் ஸ்ரீ குமார் உடனான முன்விரோதம் காரணமாக தலையில் கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததில் படுகாயமடைந்து குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை...