Home 2024
Yearly Archives: 2024
லாரியில் கேரளாவுக்கு கடத்திய 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் தலைமையிலான போலீசார் வடசேரி சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நெல்லையில் இருந்து கேரளாவுக்கு லாரி சென்றது. போலீசாரை கண்ட அந்த லாரி டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓட முயன்றார்.
சந்தேகம் அடைந்த போலீசார் டிரைவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தொடர்ந்தது லாரியை சோதனை செய்தபோது, அதில் 15 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து வடசேரி போலீசார் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே...
நடைக்காவு ஊராட்சியில் சாலை சீரமைக்க கோரி மார்க்சிஸ்ட் தர்ணா
முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நடைக்காவு ஊராட்சியில் தேவன்சேரி - வயலங்கரை சாலை உள்ளது. இந்த சாலையில் துண்டு விளை என்ற பகுதியில் பள்ளம் ஏற்பட்டது. இதனால் மழை நேரங்களில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். சாலை சீரமைக்க தமிழக அரசு ரூபாய் 4 லட்சம் நிதி ஒதுக்கி பணி செய்து முடிக்கப்பட்டது.
ஆனால் வேலை துவங்கும் முன்பு ஊராட்சி நிர்வாகத்திடம் சாலையில் தண்ணீர் தேங்காமல் மேடான பகுதியை சமன் செய்த பின் சிமெண்ட் தரை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அதை கண்டு...
ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் முற்றுகை
இரணியல் அருகே குருந்தன்கோடு இரட்டை கரை கால்வாய் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. இந்த சாலையை செப்பனிடம் கேட்டு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வாழை நடும் போராட்டம், கண்டன முழக்க போராட்டம் என பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது.
இருந்தும் இந்த சாலை இதுவரை சீரமைக்கப்படவில்லை. இந்த நிலையில் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து மூன்றாம் கட்ட போராட்டமாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரக் குழு உறுப்பினர் சேது தலைமை வகித்தார். வட்டாரக்குழு உறுப்பினர் ராஜூ...
பரபரப்பான காலிறுதியில் ஸ்பெயின் வெற்றி: வெளியேறிய ஜெர்மனி | Euro Cup
நடப்பு யூரோ கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியுள்ளது ஸ்பெயின் அணி. இதன் மூலம் அரையிறுதிக்கு அந்த அணி முன்னேறியுள்ளது. தொடரை நடத்தும் அணியான ஜெர்மனி வெளியேறியுள்ளது.
ஸ்டட்கார்டில் உள்ள மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் பதிவு செய்யவில்லை. இரண்டாவது பாதி தொடங்கிய சில நிமிடங்களில் கோல் பதிவு செய்தது ஸ்பெயின்.
ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் ஒல்மோ முதல் கோலை பதிவு செய்தார். லேமினே...
5 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கும் பள்ளிகள் ஹாக்கி லீக் இன்று தொடக்கம் @ சென்னை
தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தின் சார்பில் முதன்முறையாக ‘பள்ளிகள் ஹாக்கி லீக்’ தொடர் நடத்தப்படுகிறது. இன்று (6-ம் தேதி) தொடங்கி வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் 38 மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த அணிகள் கலந்து கொள்கின்றன. இந்தவகையில் 5 ஆயிரம் வீரர்கள்கலந்து கொண்டு விளையாடுகின்றனர்.
இந்த லீக் 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக சென்னை உட்பட 38 மாவட்டங்களிலும் 38 இடங்களில் மாவட்டஅளவிலான போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதில் இருந்து 36 அணிகள் தேர்வு செய்யப்பட்டு மண்டல அளவிலான...
டி20-ல் இந்தியா – ஜிம்பாப்வே இன்று மோதல்
ஷுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை உள்ளடக்கிய இந்தியகிரிக்கெட் அணி 5 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்றுள்ளது. இந்த தொடரின் முதல் ஆட்டம் ஹராரே நகரில் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் ஜிம்பாப்வே தொடரில் அடுத்த தலைமுறை வீரர்கள் களமிறங்க உள்ளனர்.
இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப்பை சேர்ந்த அபிஷேக் சர்மா, அசாமை சேர்ந்த ரியான் பராக்...
ஆம் ஆத்மி நாடாளுமன்ற கட்சி தலைவராக சஞ்சய் சிங் நியமனம்
நாடாளுமன்றத்தின் ஆம் ஆத்மி கட்சித் தலைவராக சஞ்சய் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக சஞ்சய் சிங் செயலாற்றி வருகிறார். இந்நிலையில் டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கட்சியைச் சேர்ந்த முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, சஞ்சய்சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்குகளில் சஞ்சய் சிங் மட்டுமே ஜாமீன் பெற்று வெளியே உள்ளார்.
இந்நிலையில் நேற்று ஆம் ஆத்மி நாடாளுமன்ற கட்சித் தலைவராக சஞ்சய் சிங் நியமிக்கப்பட்டுள்ளார் என கட்சி மேலிடம்...
மோடி தலைமையிலான அரசு அடுத்த மாதம் கவிழும்: லாலு பிரசாத் பேச்சு
பிஹாரில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் (ஆர்ஜேடி) நிறுவனநாள் விழா நேற்று பாட்னாவில் நடைபெற்றது. விழாவில் கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் ஆர்ஜேடி நிறுவனர் லாலு பிரசாத் யாதவ் பேசியதாவது:
நமது கட்சியின் ஆணி வேரானதொண்டர்களுக்கு ஒரு செய்தியைஇங்கு கூற விரும்புகிறேன். மீண்டும் மக்களவைத் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரக்கூடும். அதற்கு தொண்டர்கள் தயாராக இருக்கவேண்டும். மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பலவீனமான அரசாக அது உள்ளது. அந்த கூட்டணி அரசு வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள்...
பொருளாதார ரீதியாக ஆந்திராவுக்கு உதவுங்கள்: மத்திய நிதி அமைச்சரிடம் சந்திரபாபு முறையீடு
ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியில் ஆந்திரா பொருளாதார ரீதியாகமிகவும் பின்தங்கி விட்டது. கடன் சுமையும் அதிகமாகி விட்டதால் பொருளாதார ரீதியாக எங்களுக்கு உதவுங்கள் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முறையிட்டு உள்ளார்.
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று டெல்லியில் முகாமிட்டு பல்வேறு மத்திய அமைச்சர்களை சந்தித்து, மாநிலபிரிவினை மசோதாவின் அடிப்படையில் ஆந்திராவுக்கு தேவையான நிதியை வழங்கி உதவிட வேண்டும்என்று கேட்டுக்கொண்டார். அவர் நேற்றுகாலை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அவரது வீட்டுக்கு சென்று...
‘குற்றவாளிகள் மீது நடவடிக்கை அவசியம்’ – ஹாத்ரஸ் சம்பவத்தில் மவுனம் கலைத்த போலே பாபா
ஹாத்ரஸ் சம்பவத்துக்கு காரணமான நாராயண் சாக்கா விஷ்வ ஹரி போலே பாபா எனும் சூரஜ்பால் ஜாத்தவ் முதன்முறையான ஊடகத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஒரு செய்தி நிறுவனத்துக்கு போலே பாபா அளித்த பேட்டியில் கூறியதாவது: ஜுலை 2 சம்பவத்துக்கு பின் நாம் மிகவும் கவலையுடன் இருக்கிறோம். இந்த சங்கடத்திலிருந்து மீண்டுவர பிரபு நமக்கு சக்தி அளிக்க வேண்டும். அனைத்தையும் விசாரித்து வரும் அரசு மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.
இதன் விசாரணையில்...














