Google search engine
Home 2024

Yearly Archives: 2024

காப்பீடு  vs இழப்பீடு | அக்னி வீரர் திட்டம்; மத்திய அரசு மீது ராகுல் புதிய தாக்கு

அக்னி வீரர் திட்டம் குறித்த சர்ச்சையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசு மீது புதிய தாக்குதல் தொடுத்துள்ளார். காப்பீடுக்கும், இழப்பீடுக்கும் வித்தியாசம் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் இந்தியில் வெளியிட்டுள்ள வீடியோவில், அக்னி வீரர் அஜய் குமாரின் தந்தை தனது குடும்பம் ஒரு தனியார் வங்கியில் இருந்து ரூ.50 லட்சம் காப்பீடும் , ராணுவக் குழு காப்பீட்டு நிதியில் இருந்து ரூ.48 லட்சமும் பெற்றதாக தெரிவிக்கிறார். அதனைத் தொடர்ந்து பேசும் ராகுல்...

கள்ளச் சாராய உயிரிழப்புகளுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவது ஏன்?- அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் என்னும் அதிகதொகையை எப்படி இழப்பீடாக வழங்க முடியும் என சென்னைஉயர் நீதிமன்றம் கேள்விஎழுப்பியுள்ளது. கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த ஜூன் 18, 19-ம் தேதிகளில்கள்ளச் சாராயம் குடித்து 65 பேர்உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் பெரும்பாலானோருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னையை சேர்ந்த முகமது கோஸ்என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல...

பயணிகளின் வசதிக்காக அடுத்த 2 ஆண்டுகளில் 10,000 ஏசி அல்லாத பெட்டிகளை தயாரிக்க ரயில்வே திட்டம்

பயணிகளின் வசதிக்காக, அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10,000 ஏசி இல்லாத ரயில் பெட்டிகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய ரயில்வேயில் தினசரி 13,000-க்கும் மேற்பட்ட பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினசரி 2.50 கோடிக்கும் அதிகமானோர் பயணம் செய்து வருகின்றனர். ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அண்மையில், விரைவு ரயில்களின்பொதுபெட்டிகளில் இடம் இல்லாதவர்கள், முன்பதிவு பெட்டிகளில் நின்றுசெல்லும் நிலை ஏற்பட்டது. இதனால்,முன்பதிவு டிக்கெட் எடுத்து பயணித்தவர்கள் சிரமத்தை சந்தித்தனர். இது பெரிய விவாதத்துக்கு உள்ளானது. இதைத்தொடர்ந்து, சாதாரண...

விக்கிரவாண்டியில் வெளிநபர்களுக்கு ஜூலை 8 முதல் தடை

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் இருந்து வெளிநபர்கள் 8-ம் தேதி தேதி மாலை 6 மணிக்கு மேல் வெளியேற வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஜூலை 10-ம்தேதி நடைபெற உள்ளது.பிரச்சாரம் 8-ம் தேதி மாலையுடன் நிறைவடைகிறது. அன்றுமாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் வரை தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலத்தை, யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ, அதில் பங்கேற்கவோ கூடாது. தேர்தல் விவகாரங்களை திரைப்படம், தொலைக்காட்சி, பண்பலை வானொலி,...

காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம்: டாஸ்மாக் தகவல்

மலைபிரதேசங்களில் மதுபாட்டில்களை வீசிச் செல்வதால் விலங்கினங்கள் பாதிக்கப்படுவது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு, டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபான பாட்டிலுக்கு ரூ.10 அதிகமாக விற்கவும், திருப்பித் தரப்படும் காலி பாட்டிலுக்கு ரூ.10 திருப்பிக் கொடுக்கவும் வகை செய்யும் திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டது. இது தொடர்பான வழக்கு நேற்றுமீண்டும் விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து, தமிழகத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 70 லட்சம் பாட்டில்கள் விற்கப்படுகின்றன. மேலும், காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் செப்டம்பர் முதல் தமிழகம்...

“கூலிப்படையினரால் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது கண்டனத்துக்குரியது” – கமல்ஹாசன்

 “ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் கூலிப் படையினரால், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்,” என்று மநீம தலைவர் கமல்ஹாசன் பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும்,...

குமரி எம். பி. யை வரவேற்ற மாநகராட்சி மேயர்.

கன்னியாகுமரி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற பின் விஜய் வசந்த் எம். பி. முதல் முறையாக நேற்று நாகர்கோவில் வருகை தந்தார். அவருக்கு குமரி கிழக்கு மாவட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பாக நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தலைமையில் பார்வதிபுரம் பகுதியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் இந்தியா கூட்டணி கட்சியை சேர்ந்தோர் பங்கேற்றனர்.

இரணியல் ரயில்வே நிலையத்தில் கடத்த முயன்ற அரிசி மீட்பு

கன்னியாகுமரி மாவட்ட பறக்கும் படை தாசில்தார் ரமேஷ் தலைமையில் துணை தாசில்தார் ராஜா, தனி வருவாய் ஆய்வாளர் அனில்குமார் மற்றும் ஓட்டுனர் சுரேஷ் ஆகியோர் ரேசன் அரிசி கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் நேற்றிரவு கண்டன்விளை, இரணியல், திங்கள்நகர்  ஆகிய பகுதியில் தீவிர ரோந்து சென்றனர். இரணியல்  ரயில்வே பகுதியில் செல்லும்போது அங்கு ரயில் மூலம்  கேரளாவுக்கு கொண்டு செல்ல 14 சிறு பிளாஸ்டிக் பைகளில் சுமார் 300 கிலோ அரிசி மூடைகள் தண்டவாளம் பகுதியில் பதுக்கி வைக்கப்ட்டிருந்ததை கண்டு பிடித்தனர். உடனே பறக்கும்படையினர்...

குழித்துறையில் அரசு பஸ் டிரைவர்கள் திடீர் போராட்டம்

குழித்துறை பணிமனையில் இருந்து இயங்கூடிய இரண்டு பேருந்துகளின் ஓட்டுநர்களை பணிமனை மேலாளர் உரிய காரணங்கள் இன்றி பணி இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்து உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பணிமனையில் இருந்து கன்னியாகுமரி பகுதிக்கு இயக்கப்படும் அரப் பேருந்துகளை இயக்காமல் நிறுத்தி வைத்துள்ளதோடு, ஏற்கனவே 8 மணி நேரம் வேலை செய்த பணியாளர்களை 12 மணி நேரம் வேலை செய்ய வற்புறுத்தியும் வந்ததாக கூறப்படுகிறது.இதனால் பணியிட மாற்றம் செய்தவர்களை மீண்டும் இதே பணிமனையில் வேலைக்கு அமர்த்தவும், 12 மணி நேர வேலையை மீண்டும்...

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ராஜாக்கமங்கலம் ஒன்றிய பேரவை கூட்டம் ஈத்தாமொழியில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சொர்ணம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆர் ரவி  சங்கத்தின் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.   பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. ஒன்றிய தலைவராக எஸ். ஜெபமணி, துணைத் தலைவர்களாக நாராயணன், பிரசாத், நளன், செயலாளராக எஸ் எஸ் பிள்ளை,   இணைச் செயலாளராக பௌலி, நாகராஜன், செந்தில்குமார்,   பொருளாளராக ராதாகிருஷ்ணன் ஆகிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் பறக்கின்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

தக்கலையில்: மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை மீட்ட நிமிர் குழு

தக்கலை அருகே 12 ஆண்டுகளாக சாலையோரம் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட முதியவரை குமரி மாவட்ட போலீஸ் நிமிர் குழுவினர் பாதுகாப்பாக மீட்டனர். முதல் கட்ட பராமரிப்புகளை செய்து, அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை...

குமரியில்: நூதன முறையில் வாக்குப்பதிவு விழிப்புணர்வு

தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் நவதானியங்கள், காய்கறிகள், கிழங்கு வகைகள் போன்றவைகளைக் கொண்டு...

குளச்சல்: முதியவர் சாவு – போலீசார் விசாரணை

குளச்சல் பகுதியில் யாசகம் கேட்டு வாழ்ந்து வந்த முதியவர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கால் புண் காரணமாக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று (ஏப்ரல்...