Home 2024
Yearly Archives: 2024
குமரியில் கிராம்பு, நல்ல மிளகு விலை ஏற்றம்
கீரிப்பாறை, காளிகேசம், கரும்பாறை, மாறாமலை, தடிக்காரன்கோணம், பகுதிகளில் கிராம்பு, நல்லமிளகு, ஜாதிக்காய் தோட்டங்கள் உள்ளன. குமரியில் கிராம்பு, நல்ல மிளகு, ஜாதிக்காய் விலை உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ ₹700-க்கு விற்கப்பட்ட கிராம்பு நேற்று ₹1200, நல்லமிளகு ₹500ல் இருந்து ₹850, ஜாதிக்காய் ₹250ல் இருந்து ₹400 ஆகவும் உயர்ந்துள்ளது. இவற்றின் விலை ஏற்றத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பிரிட்டன் பொதுத் தேர்தல்: எதிர்க்கட்சிக்கு சாதகமாக கருத்துக்கணிப்பு; வாக்கு எண்ணிக்கை உடனடியாக தொடங்கியது
பிரிட்டனில் நேற்று நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் வாக்களித்தனர். வாக்குப் பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை உடனடியாக தொடங்கியது.
பிரிட்டனில் கடந்த 14 ஆண்டுகளாக கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. எனினும், இந்த காலகட்டத்தில் பிரதமர்கள் மாறிக் கொண்டே வந்துள்ளனர். இப்போது 5-வது நபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் (44) பிரதமராக பதவி வகிக்கிறார். இந்நிலையில், அங்கு மொத்தம் உள்ள 650 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது. நாடு முழுவதும்...
பிரிட்டன் தேர்தல்: முந்தும் கீர் ஸ்டார்மர்; முடிவுக்கு வருகிறது 14 ஆண்டு கால கன்சர்வேட்டிவ் ஆட்சி
பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் லேபர் கட்சி வேட்பாளர் கீர் ஸ்டார்மர் முன்னிலை வகிக்கிறார். அவர் பிரதமராகும் சூழல் கணிந்துள்ளது. பிரதமராக இருந்த கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர் ரிஷி சுனக் படுமோசமாக பின்தங்கியுள்ளார்.
கீர் ஸ்டார்மர் அவர் போட்டியிட்ட லண்டன் தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில், “நீங்கள் வாக்களித்துவிட்டீர்கள்; இனி நாங்கள் பணியாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது” என வாக்காளர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
350+ தொகுதிகளில்.. இந்தத் தேர்தலில், முக்கிய எதிர்க்கட்சியான லேபர் கட்சி 418 இடங்களில் வெற்றி பெற்று...
அனைத்து சமூக வலைதளங்களுக்கும் 6 நாட்கள் தடை @ பாகிஸ்தான்
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் அனைத்து சமூக வலைதள சேவையும் சுமார் ஆறு நாட்களுக்கு தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 13 முதல் 18-ம் தேதி வரையில் அங்கு இந்த தடை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணம் குறித்து பார்ப்போம்.
பஞ்சாப் மாகாண முதல்வர் மர்யம் நவாஸ் தலைமையிலான அரசு இதனை அறிவித்துள்ளது. இது தொடர்பான பரிந்துரையை ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு, மத்திய அரசிடம் முன்வைத்துள்ளது. வன்முறையை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என மாகாண அரசு...
“பிரிட்டன் பொதுத் தேர்தல் தோல்விக்கு நான் முழு பொறுப்பேற்கிறேன்” – ரிஷி சுனக்
பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளது கன்சர்வேட்டிவ் கட்சி. இந்நிலையில், இந்த தோல்விக்கு முழு பொறுப்பேற்கிறேன் என அக்கட்சியை சேர்ந்தவரும், பிரதமருமான ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். அந்த நாட்டில் லேபர் கட்சி ஆட்சி அமைக்கிறது.
தோல்வி குறித்து ரிஷி சுனக், “தேர்தலில் லேபர் கட்சி வெற்றி பெற்றுள்ளது. நான் கீர் ஸ்டார்மரை தொடர்பு கொண்டு பேசினேன். அவருக்கு எனது வாழ்த்தினை தெரிவித்தேன். இன்று ஆட்சி அதிகாரம் அமைதியான முறையில் கைமாறியுள்ளது. நம் நாட்டின் எதிர்காலம் சார்ந்து நம் அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆட்சி...
டி 20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு பிரம்மாண்டமான வரவேற்பு: மும்பையில் வெற்றி ஊர்வலம்
மேற்கு இந்திய தீவுகளில் நடந்த டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று நாடு திரும்பிய இந்திய அணிக்கு மும்பையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக, டெல்லியில் பிரதமர் மோடியைசந்தித்து வீரர்கள் வாழ்த்து பெற்றனர்.
மேற்கு இந்தியத் தீவுகளில் சமீபத்தில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ரோஹித்சர்மா தலைமையிலான இந்திய அணி, இறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த சனிக்கிழமை போட்டி முடிவடைந்த நிலையில் பார்படாஸ் நகரில் வீசிய...
டிஎன்பிஎல் டி 20 தொடர் இன்று தொடக்கம்
தமிழ்நாடு கிரிக்கெட் சார்பில் நடத்தப்படும் டிஎன்பிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 8-வது சீசன் போட்டி இன்று தொடங்குகிறது. இந்த தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், லைகா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், எஸ்.கே.எம் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் சீகம் மதுரை பேந்தர்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
போட்டிகள் சேலம், கோவை, திருநெல்வேலி, திண்டுக்கல் மற்றும் சென்னை ஆகிய 5 நகரங்களில் நடைபெறுகிறது. இன்று தொடங்கி ஆகஸ்ட் 4-ம் தேதி வரை...
பாரிஸ் ஒலிம்பிக் போட்டி 28 பேர் கொண்ட இந்திய தடகள அணி அறிவிப்பு: தமிழகத்தை சேர்ந்த 5 பேர் இடம் பெற்றனர்
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் 28 பேர் கொண்ட தடகளஅணியை இந்திய தடகள சங்கம்அறிவித்துள்ளது. இதில் தமிழகவீரர்கள் 5 பேர் இடம் பெற்றுள்ளனர்.
பாரிஸ் ஒலிம்பிக் வரும் 26-ம்தேதி பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் கோலாகலமாக தொடங்குகிறது. ஆகஸ்ட் 11-ம்தேதி வரை நடைபெறும் இந்தவிளையாட்டு திருவிழாவில் தடகளபோட்டியில் பங்கேற்கும் 28 பேர் கொண்ட அணியை இந்திய தடகளசங்கம் அறிவித்துள்ளது. இந்தியஅணியில் 17 வீரர், 11 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா...
“பும்ரா ஒரு தலைமுறைக்கான வீரர்” – கோலி புகழாரம்
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஒரு தலைமுறைக்கான வீரர் என அவருடன் இணைந்து விளையாடும் இந்தியாவின் விராட் கோலி தெரிவித்துள்ளார். ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு நேற்று மும்பையில் வெற்றி விழா நடத்தப்பட்டது. அதில் அவர் இதனை தெரிவித்தார்.
இதில் தொடர் நாயகன் விருதை பும்ரா வென்றிருந்தார். அவரது பந்து வீச்சு இதில் அபாரமாக இருந்தது. இந்த சூழலில் கோலி இதனை தெரிவித்துள்ளார். “இந்த மைதானத்தில் உள்ள எல்லோரையும் போல தான் நாங்களும்...
சேப்பாக்கத்தில் முதல் டி 20 போட்டியில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகள் இன்று மோதல்
தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே நடைபெற்ற 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை இந்திய அணி 3-0 என முழுமையாக வென்றது. இதைத் தொடர்ந்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஒரே ஒரு டெஸ்ட் கொண்ட தொடரில் இந்திய மகளிர் அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
இந்நிலையில் இரு அணிகள் மோதும் 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரின் முதல்...














