டிஎன்பிஎல் டி 20 தொடர் இன்று தொடக்கம்

0
59

தமிழ்நாடு கிரிக்கெட் சார்பில் நடத்தப்படும் டிஎன்பிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 8-வது சீசன் போட்டி இன்று தொடங்குகிறது. இந்த தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், லைகா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், எஸ்.கே.எம் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் சீகம் மதுரை பேந்தர்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

போட்டிகள் சேலம், கோவை, திருநெல்வேலி, திண்டுக்கல் மற்றும் சென்னை ஆகிய 5 நகரங்களில் நடைபெறுகிறது. இன்று தொடங்கி ஆகஸ்ட் 4-ம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 32 ஆட்டங்கள் நடைபெறுகிறது. தொடக்க நாளான இன்று சேலத்தில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் – லைகா கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரவு 7.15 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 HD சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.