பாரிஸ் ஒலிம்பிக் போட்டி 28 பேர் கொண்ட இந்திய தடகள அணி அறிவிப்பு: தமிழகத்தை சேர்ந்த 5 பேர் இடம் பெற்றனர்

0
47

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் 28 பேர் கொண்ட தடகளஅணியை இந்திய தடகள சங்கம்அறிவித்துள்ளது. இதில் தமிழகவீரர்கள் 5 பேர் இடம் பெற்றுள்ளனர்.

பாரிஸ் ஒலிம்பிக் வரும் 26-ம்தேதி பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் கோலாகலமாக தொடங்குகிறது. ஆகஸ்ட் 11-ம்தேதி வரை நடைபெறும் இந்தவிளையாட்டு திருவிழாவில் தடகளபோட்டியில் பங்கேற்கும் 28 பேர் கொண்ட அணியை இந்திய தடகளசங்கம் அறிவித்துள்ளது. இந்தியஅணியில் 17 வீரர், 11 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா மீண்டும் களமிறங்குகிறார்.

ஆசிய விளையாட்டு சாம்பியன்களான அவினாஷ் சேபிள், தஜிந்தர்பால் சிங் தூர், ஜோரி யார்ராஜி ஆகியோருடன் தமிழகத்தைச் சேர்ந்த பிரவீன் சித்திரவேல், சந்தோஷ் தமிழரசன், ராஜேஷ் ரமேஷ், சுபா வெங்கடேசன், வித்யா ராம்ராஜ் ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர். ஒலிம்பிக்கில் டிராக் அன்ட் பீல்டு போட்டிகள் ஆகஸ்ட் 1 முதல் 11-ம் தேதி வரை ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானத்தில் நடைபெறுகின்றன.