Home 2024
Yearly Archives: 2024
போலே பாபாவின் குவாலியர் ஆசிரமத்துக்கு சீல்: ஹாத்ரஸ் சம்பவத்தால் ம.பி அரசு நடவடிக்கை
ஹாத்ரஸ் சம்பவத்துக்குப் பின் போலே பாபாவின் குவாலியர் ஆசிரமத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை மத்தியப் பிரதேசத்தின் பாஜக அரசு எடுத்துள்ளது.
ஹாத்ரஸில் 121 உயிர்கள் பலியாகக் காரணமாக இருந்தது நாரயண் சாக்கா விஷ்வ ஹரி போலே பாபா நடத்திய கூட்டம். இந்த விவகாரத்தில் உத்தரப் பிரதேச அரசு வழக்கு பதிவு செய்து விசாரணை துவக்கி உள்ளது. இதையடுத்து, அண்டை மாநிலங்களில் உள்ள போலே பாபாவின் ஆசிரமங்கள் மீதும் அதன் அரசுகள் கவனம் செலுத்தத் துவங்கி விட்டனர். மபியின் குவாலியரில் டிக்ரா சாலையிலுள்ள ஹரி...
5 மாத சிறைவாசத்துக்கு பிறகு மீண்டும் ஜார்க்கண்ட் முதல்வர் ஆனார் ஹேமந்த் சோரன்
ஜார்க்கண்ட் மாநிலத்தின் 13-வது முதல்வராக ஹேமந்த் சோரன் நேற்று மீண்டும் பதவியேற்றார்.
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நிலம் வாங்கிய விவகாரத்தில், முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் நிதி மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது. எந்நேரத்திலும் அவர் கைது செய்யப்படலாம் என்ற சூழலில், முதல்வர் பதவியை அவர் கடந்த ஜனவரி 31-ம் தேதி ராஜினாமா செய்தார். அன்றைய தினமே அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவரது கட்சியை சேர்ந்த சம்பய் சோரன் முதல்வராக பதவியேற்றார்.
ஹேமந்த் சோரன் சிறையில் அடைக்கப்பட்டு 5 மாதங்கள்...
வாக்கு இயந்திரத்தை உடைத்ததில் என்ன தவறு? – ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன் கேள்வி
ஆந்திர மாநிலத்தில் அனந்தபூர் மாவட்டம், மாசர்லா சட்டமன்ற தொகுதியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான பின்னெல்லி ராமகிருஷ்ணா ரெட்டி தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து மே 13-ம் தேதி தேர்தல் நாளன்று பாலய்யகேட் வாக்கு சாவடிக்குள் புகுந்து, அங்கிருந்த வாக்கு இயந்திரத்தை தரையில் போட்டு உடைத்தார்.
இதனை தடுக்க வந்த தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். மறுநாள் இவரும், இவரது ஆதரவாளர்களும் காரம்பூடி எனும் இடத்தில் பயங்கர கலவரத்தில் ஈடுபட்டனர். இவர்களை தடுக்க வந்த இன்ஸ்பெக்டரை தாக்கினர். இது தொடர்பாக...
பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு கூடுதல் நிதி ஒதுக்குங்கள்: பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் சந்திரபாபு கோரிக்கை
டெல்லியில் பிரதமர் மோடியை நேற்று சந்தித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு கடந்த மாதம் பொறுப்பேற்றார். அதன் பிறகு முதல்முறையாக டெல்லி சென்றுள்ள அவர், நேற்று பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பியூஷ் கோயல், ராம்மோகன் நாயுடு, நிவாச வர்மா ஆகியோரை சந்தித்தார்.
பிரதமர் மோடியை சந்தித்த சந்திரபாபு நாயுடு, மாநில அரசியல் நிலவரம் குறித்து பகிர்ந்து கொண்டார்.
பின்னர், ஜெகன்...
ஐந்து நட்சத்திர ஓட்டல் போல சொகுசு ஆசிரமம்: போலே பாபா பற்றிய விவரங்கள் அம்பலம்
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டம் சிக்கந்தரராவ் தாலுகாவின் முகல்கடி கிராமத்தில், கடந்த செவ்வாய்க்கிழமை விஸ்வ ஹரி நாராயண் (எ) போலே பாபா என்பவரது ஆன்மிகக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது நெரிசலில் 121 பேர் இறந்தது தொடர்பாக போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், போலே பாபா பெயர் அதில் இடம்பெறவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் நேற்று கூறியதாவது:
போலே பாபா மீது பாலியல் வன்கொடுமை வழக்கும் உள்ளது.தற்போது அவர் நிறைய சொத்துகளை வாங்கி குவித்துள்ளது தெரியவந்துள்ளது. அதற்கான ஆவணங்களை நாங்கள் கைப்பற்றி...
சுதந்திர போராட்ட வீரருக்கு ஓய்வூதிய நிலுவை தொகை வழங்காத பொதுத்துறை கூடுதல் செயலருக்கு பிடியாணை: ஐகோர்ட் உத்தரவு
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி 97வயது சுதந்திர போராட்ட வீரருக்குஓய்வூதிய நிலுவையை வழங்காத தமிழக பொதுத்துறை கூடுதல் செயலாளருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின்இந்திய தேசிய ராணுவத்தில் பங்கெடுத்திருந்த திருவள்ளூரைச் சேர்ந்த 97 வயது சுதந்திரப் போராட்ட வீரர் வேலு என்பவருக்கு, 2021-ம் ஆண்டு முதல் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் வழங்கப்பட்டது.
ஆனால், ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்த 1987-ம் ஆண்டு முதல் கணக்கிட்டு, தனக்கு ஓய்வூதிய நிலுவையை வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில்...
மக்களுடன் முதல்வர், காலை உணவு திட்டம் விரிவாக்க நிகழ்ச்சிகளில் எம்.பி., எம்எல்ஏக்கள் பங்கேற்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் கடிதம்
தமிழக அரசின் மக்களுடன் முதல்வர் மற்றும் காலை உணவுத் திட்டங்களின் விரிவாக்க நிகழ்ச்சிகள் ஜூலை 11 மற்றும் 15-ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளன. இதையடுத்து, அந்தந்த தொகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து தமிழக முதல்வர்ஸ்டாலின், அனைத்து நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் பொதுமக்கள் தினமும் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் சென்று சேருவதற்காக கடந்த டிசம்பர் 18-ம் தேதி ‘மக்களுடன் முதல்வர்’ என்ற...
நீட் தேர்வு விவகாரத்தில் வெள்ளை அறிக்கை வெளியிட தயங்குவது ஏன்? – தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி
நீட் தேர்வு குறித்த விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட தமிழக அரசு தயங்குவது ஏன்என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
திருச்சியில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியின் அத்துமீறலையும் மீறி பாமக வெற்றிபெறும். இந்த தேர்தலில் 3 அல்லது 4-வது இடத்துக்கு சென்றுவிடுவோம் என்ற அச்சத்தில்தான், அதிமுக போட்டியிடவில்லை. திமுக என்ற ‘ஏ’ டீம் வெற்றிபெற, அதிமுக என்ற ‘பி’ டீம் போட்டியிடவில்லை.
நீட் தேர்வு குறித்து அரசியல் கட்சித் தலைவராக விஜய் தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அவரது...
மத்திய அரசின் 3 சட்டங்கள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களை சந்திக்க திட்டம்: வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தகவல்
மத்திய அரசின் மூன்று சட்டங்களை எதிர்த்து போராடிவரும் வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பினர், அனைத்து மாநில முதல்வர்களையும் சந்தித்து முறையிட திட்டமிட்டுள்ளனர்.
இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா,பாரதிய நாகரிக் சுரக்ஷா மற்றும்பாரதிய சாக் ஷியா ஆகிய 3 சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த சட்டங்களை எதிர்த்து வழக்கறிஞர் சங்கங்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமைச்செயலகத்தில் வில்சன்...
“சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு பாடம் புகட்ட வாக்களியுங்கள்” – முதல்வர் ஸ்டாலின்
“சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு பாடம் புகட்ட இண்டியா கூட்டணி வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு வாக்களியுங்கள்” என்று விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், ”விக்கிரவாண்டி மக்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்!
வரும் ஜூலை 10-ஆம் நாள் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆற்றல்மிக்க வேட்பாளர் அன்னியூர் சிவா என்கிற சிவசண்முகத்துக்கு, உங்கள் உள்ளம் கவர்ந்த உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று...














