மலைபிரதேசங்களில் மதுபாட்டில்களை வீசிச் செல்வதால் விலங்கினங்கள் பாதிக்கப்படுவது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு, டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபான பாட்டிலுக்கு ரூ.10 அதிகமாக விற்கவும், திருப்பித் தரப்படும் காலி பாட்டிலுக்கு ரூ.10 திருப்பிக் கொடுக்கவும் வகை செய்யும் திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டது.
இது தொடர்பான வழக்கு நேற்றுமீண்டும் விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து, தமிழகத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 70 லட்சம் பாட்டில்கள் விற்கப்படுகின்றன. மேலும், காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் செப்டம்பர் முதல் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஆக.7-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.