கர்நாடகாவில் டெங்கு காய்ச்சலால் 6,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

0
29

கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ்நேற்று முன்தினம் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரை சந்தித்து நலம் விசாரித்தார்.

பின்னர், தினேஷ் குண்டுராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டெங்கு பரவல் தொடர்பாக மாவட்டவாரியாக சுகாதார‌த்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். அதில்மாநிலம் முழுவதும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.அதில் பெங்களூருவில் மட்டும் 2 ஆயிரத்துக்கும்மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

டெங்கு பரவல் காரணமாக பொதுமக்கள் பீதி அடைய தேவையில்லை. பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கொசுவை அழிக்கும் பணியில் பெங்களூரு மாநகராட்சி ஊழியர்கள், அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பொதுமக்கள் தங்களின் இருப்பிடத்தை சுற்றிலும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளை கண்டறிந்து, சுகாதார சீர்கேட்டை தடுக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.