சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை எதிர்த்து அவரதுதாயார் தொடர்ந்த ஆட்கொணர்வு மனு, உயர் நீதிமன்றத்தில் வரும் 23-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
பெண் போலீஸாரை அவதூறாக பேசியது மற்றும் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் குறித்து அரசுக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவித்து பொதுமக்களை போராடத் தூண்டியது உள்ளிட்ட வழக்குகளில் கைதான யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்து சென்னை மாநகர காவல்...
நில மோசாடி தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் உள்பட ஏழு பேர் மீது பதியப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரதுசகோதரர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பாகநேற்று நடைபெற்றது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன், முன்னாள் அமைச்சரான விஜயபாஸ்கர் கேரளாவில்...
ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் நிலைய நுழைவு வாயிலை வேறு இடத்துக்கு மாற்ற முடியுமா? – உயர் நீதிமன்றம்
admin - 0
ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் பழமையான ஸ்ரீரத்தின விநாயகர் மற்றும் துர்க்கை அம்மன் கோயில்கள் உள்ளன. இந்நிலையில், சென்னைமெட்ரோ திட்டத்தின் 2-ம் கட்ட பணிகளுக்காக, கோயிலின் ராஜ கோபுரத்தை இடிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மயிலாப்பூர் பி.எஸ்.சிவசாமி சாலையைச் சேர்ந்த ‘ஆலயம் காப்போம்’ கூட்டமைப்பின் தலைவரான பி.ஆர்.ரமணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், ஆயிரம் விளக்கு பகுதியில் மெட்ரோ ரயில் நிலைய நுழைவு வாயிலுக்காக கோயில்ராஜகோபுரத்தை இடிக்கும்...
தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவு அடிப்படையில், ஜூலை 1-ம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. யூனிட் ஒன்றுக்கு 20 பைசா முதல் 55 பைசா வரை உயர்த்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 15-ம் தேதி முதல், புதிய இணைப்பு கட்டணம், மீட்டருக்கான வைப்புத் தொகை, பதிவு, மேம்பாட்டு கட்டணம் ஆகியவற்றுக்கான சேவை கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.இதன்படி, வீட்டு உபயோகம், குடியிருப்புகளுக்கான பொது மின்உபயோகம், அரசு கட்டிடங்கள், விசைத்தறி,...
பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தொடர் மழையால் கர்நாடக அணைகள் நிரம்பினாலும், தண்ணீர் திறப்பதில் சிக்கல் நீடிக்கிறது. உபரிநீரைத் திறக்கும் வடிகாலாகவே, தமிழகத்தை கர்நாடகா பார்க்கிறது.காவிரி துணை ஆறுகளில் கட்டப்பட்டுள்ள அணைகளின் நிர்வாகத்தை, காவிரி மேலாண்மை வாரியத்துக்கு வழங்க வேண்டும். இது தொடர்பாக உச்ச நீதி மன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர வேண்டும்.பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்குவது குறித்த அறிக்கையை ரோகிணி...
தமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க, தேசிய மருத்துவ ஆணையத்திடம் இந்த ஆண்டுக்குள் விண்ணப்பிக்க இருப்பதால், தலா 22 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி வழங்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு, மருத்துவ கல்வி இயக்ககம் வலியுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் கடந்த 2022-ம் ஆண்டு 11 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இதன் மூலம் அரசு மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்தது. இதுதவிர, 34 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன.இந்நிலையில்,...
ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுவதை ஒட்டி தமிழ்நாடு எனப் பெயர் சூட்ட முன்னாள் முதல்வர் அண்ணா சட்டப்பேரவையில் பேசிய வீடியோ காட்சியை முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “கடல் கண்டு, மலை கண்டு பயன்கொண்ட தமிழ்நாடு வாழ்க. களங்கண்டு, கலை கண்டு, கவி கொண்ட தமிழ்நாடு வாழ்க. உடல் கொண்டு, உரங்கொண்டு, உயிர் கொண்ட தமிழ்நாடு வாழ்க. ஜூலை...
கரூரில் ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி புகாரில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த மோசடியில் உடந்தையாக இருந்ததாக காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுஉள்ளார்.
கரூரை சேர்ந்தவர் பிரகாஷ். இவர், தனக்கு சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர், ஆதரவாளர் பிரவீன் உள்ளிட்டோர் மிரட்டி பத்திரப்...
வருவாய்த் துறையின் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஆங்கிலேயேரால் உருவாக்கப்பட்டு ஒரு காலத்தில் நிலவரி வசூலில் மட்டும் ஈடுபட்டிருந்த வருவாய்த் துறை, பொது நிர்வாகம், மக்கள் நலன் காக்கும் துறையாக உள்ளது. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல், 6,52,559 இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. எங்கிருந்தும் எப்போதும் இணையவழி பட்டா மாறுதல் திட்டம் மூலம், 2...
பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இணையாததால் மத்திய அரசின் நிதியுதவி மீண்டும் நிறுத்தம்: பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தகவல்
admin - 0
அரசு மற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகளின் வளர்ச்சிப் பணிகள் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் நிதியுதவி வழங்கி வருகிறது. இந்தநிதியைப் பெற மத்திய அரசின் விரிவான கல்வி மேம்பாட்டுத்திட்டங்கள், விதிமுறைகளை மாநில அரசுகள் பின்பற்றியாக வேண்டும்.
இதற்கிடையே தேசிய கல்விக் கொள்கையில் பிஎம்ஸ்ரீ பள்ளி எனும் திட்டம் உள்ளது. இதன்மூலம் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், இத்திட்டத்தில் டெல்லி, பஞ்சாப், மேற்கு வங்கம், தமிழகம்,கேரளா...










