Google search engine
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னோடி வள்ளிநாயகம் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் அ.வள்ளிநாயகம் (78) நேற்று சென்னையில் காலமானார். அவரது உடல் குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. வள்ளிநாயகத்தின் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், அறிவியல் இயக்கத்தின் மாநில பொருளாளர் எஸ்.சுதாகர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அவரது...
அரசியல் படிப்பை மேற்கொள்ள லண்டன் சென்றுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரும் 1-ம் தேதி சென்னை திரும்பவுள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 3 மாத காலம் சர்வதேச அரசியல் மேற்படிப்பை படிக்க கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி லண்டன் புறப்பட்டு சென்றார். அவருக்கு பதிலாக தமிழக பாஜகவை வழிநடத்த மூத்த தலைவர் ஹெச்.ராஜா தலைமையிலான ஒருங்கிணைப்புக் குழு செயல்பட்டு வருகிறது....
வங்​கக்​கடலில் நிலவும் ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறாமல், காரைக்​கால் - மாமல்​லபுரம் இடையே நாளை காலை கரையை கடக்​கக்​கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்ளது. இதன் காரண​மாக, செங்​கல்​பட்டு, விழுப்பு​ரம், கடலூர் உள்ளிட்ட 6 மாவட்​டங்​களில் இன்றும், 7 மாவட்​டங்​களில் நாளை​யும் அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ விடுக்​கப்​பட்​டுள்​ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்​தின் தென் மண்டல தலைவர் எஸ்.பாலசந்​திரன் செய்தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: தென்மேற்கு...
தமிழகத்​தில் உள்ள 4,453 வேளாண் கடன் சங்கங்கள் பொது சேவை மையங்​களாக​வும் செயல்​படும் என்று நாடாளு​மன்​றத்​தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரி​வித்​துள்ளார். நாடாளு​மன்ற மாநிலங்​களவை​யில், ‘தமிழகத்​தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை பொருளாதார ரீதியாக வலுப்​படுத்​த​வும், அந்த சங்கங்களை பொது​மக்கள் சேவை மையமாக மாற்​ற​வும் எடுத்த நடவடிக்கைகள் என்ன?’ என்று தி.மு.க. எம்.பி., கனிமொழி என்விஎன். சோமு கேள்வி எழுப்​பி​யிருந்​தார். இதற்கு மத்திய உள்துறை,...
வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறை அலுவலர்களுக்கு நீதிபதிகள், சட்ட வல்லுநர்கள் மூலம் வழங்கப்படும் பயிற்சியை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார். வன்கொடுமை தடுப்பு சட்டம், விதிகள் தொடர்பாக ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறையின் அனைத்து நிலை அலுவலர்களுக்கும் துறை சார்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது. ‘சமத்துவம் காண்போம்’ என்ற பெயரிலான இந்த பயிற்சியை சென்னை எழும்பூரில் அமைச்சர் மதிவேந்தன் நேற்று தொடங்கி வைத்து, பயிற்சி கையேட்டை...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உடல்நலக் குறைவு காரணமாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். அரசியல் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்த கே.பாலகிருஷ்ணனுக்கு கடந்த 2 நாட்களாக தொண்டை வலி, நெஞ்சு சளி, காய்ச்சல் பாதிப்பு இருந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு காது,...
ஒரே பயணச்சீட்டில் பயணிக்கும் வகையில் சென்னைக்கான ஒருங்கிணைந்த போக்குவரத்துத் திட்டத்தை வகுப்பது தொடர்பான ஆய்வில் பயணிகள் கருத்து தெரிவித்து ஒத்துழைக்க வேண்டும் என சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் (கும்டா) வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக அமைப்பின் உறுப்பினர் செயலர் ஐ.ஜெயக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் பரப்பளவு 5,904 சதுர கிலோ மீட்டராக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இங்கு அதிகளவிலான பயணிகள் பேருந்துகளில் பயணிக்கின்றனர். எனவே...
சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ் குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் முன்னிலையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சி பாகுபாடின்றி கவுன்சிலர்கள் பலர், சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் எங்களின் புகாரை கண்டுகொள்வதில்லை. சரியான பயனாளிகளுக்கு சாலையோர வியாபாரிக்கான அடையாள அட்டைகளை வழங்க வேண்டும். சாலையோர வியாபாரம் அனுமதிக்கப்பட்ட பகுதி, அனுமதிக்கப்படாத பகுதி குறித்து, கவுன்சிலர்களுடன் கலந்தாலோசித்து மாநகராட்சி அதிகாரிகள்...
இருமுடி, தைப்பூச விழாவை முன்னிட்டு, மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் இருமார்க்கமாக 48 விரைவு ரயில்கள் தற்காலிகமாக நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு: சென்னை எழும்பூர் - திருச்சிக்கு டிச.14 முதல் பிப்.11-ம் தேதி வரை இயக்கப்படும் மலைகோட்டை விரைவு ரயில் (12653), சென்னை எழும்பூர்-மதுரைக்கு டிச.15 முதல் பிப்-12-ம் தேதி வரை இயக்கப்படும் பாண்டியன் விரைவு ரயில் (12637), சென்னை எழும்பூர்- செங்கோட்டைக்கு...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி நாகேந்திரன் உள்பட 27 பேரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5-ம் தேதி சென்னையில் ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே சிறையில் இருந்த ரவுடி நாகேந்திரன், அவரது மகன் வழக்கறிஞர் அஸ்வத்தாமன், ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம்,...