சென்னை: சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்க டெண்டருக்கு விண்ணப்பித்த சென்னை பட்டாசு முகவர்கள் நலச் சங்கத்தின் டெண்டர் விண்ணப்பத்தை நிராகரித்த தமிழக அரசு, தகுதியில்லாத சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச் சங்கத்தின் டெண்டர் விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டுமென கோரியும் சென்னை பட்டாசு முகவர்கள் நலச் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது....
மதுரை: உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தொடர்பான வழக்கு நடைபெற்றது. இதில், டிஎன்பிஎஸ்சி தரப்பில் காணொலியில் ஆஜரான மூத்தவழக்கறிஞரும், திமுக எம்.பி.யுமான வில்சனின் செயல்பாடுகுறித்து நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் அதிருப்தி தெரிவித்து, விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார். இந்நிலையில், இது தொடர்பானவீடியோ பதிவு, சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, மூத்த வழக்கறிஞரிடம் நீதிபதி கண்ணியக்குறைவாக நடந்து கொண்டதாக வழக்கறிஞர் சங்கங்கள் சார்பில், உச்ச நீதிமன்ற...
சென்னை: சென்னையில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் தேங்கிய வெள்ளநீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார். சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், துணை முதல்வர் உதயநிதி நேற்று முன்தினம் இரவு தேனாம்பேட்டை மண்டலம் ஜானி ஜக்கான் முதல் தெரு, முசிறி சுப்பிரமணியன் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணிகளை பார்வையிட்டார். அப்போது அப்பணியில் ஈடுபட்ட...
சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் நிரந்தரமாக இணைப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லுரிகளில் காலியாக உள்ள இணைப் பேராசிரியர் பணிக்கு நேரடி நியமனங்களை மேற்கொள்ளக் கோரி வசந்தகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2018-ல் வழக்கு தொடர்ந்தார். இதில் சட்டக்கல்வி இயக்குநர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்...
சென்னை: தமிழர்கள் செழித்து வாழ்ந்திட உழைப்போம், உறுதி ஏற்போம். எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் 2026-ல் அதிமுக ஆட்சி அமைந்திடுவதை எந்த சக்தியாலும் தடுத்துவிட முடியாது என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உறுதி தெரிவித்துள்ளார். அதிமுகவின் 53-வது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி தொண்டர்களுக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: காரிருள் சூழ்ந்து காட்டாட்சி நடைபெற்ற நேரத்தில், தமிழக மக்களை மீட்டெடுக்கத் தோன்றிய நம்பிக்கை நட்சத்திரமாக எம்.ஜி.ஆரால்...
சென்னை: சென்னையில் இன்று (அக்.16) அதி கனமழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை அர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது குறித்து வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கடக்கலாம் என்றாலும்கூட அதன் காற்றுக் குவிப்பு மேல் நோக்கி நகர்ந்ததால் சென்னைக்கு இன்று (அக்.16) அதி கனமழை பெய்ய வாய்ப்பில்லை. இது சென்னை மக்களுக்கு ஒரு...
சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இன்று (அக்.16)வழக்கம்போல இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழையின் தாக்கத்தை பொறுத்து, மின்சார ரயில் சேவையில் மாற்றம் குறித்து முடிவு செய்யப்படும் என்றும், பறக்கும் ரயில் மார்க்கத்தில் வழக்கம்போல ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று கனமழை பெய்தது. இதனால், பல்வேறு இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கி, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. மாநகர பேருந்து...
சென்னை: சென்னையில் தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் தேமுதிக அலுவலகத்தில் தங்குவதற்கு, கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அழைப்பு விடுத்துள்ளார். அதேபோல மழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவ வேண்டும் என காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் தங்களது தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது: தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வரும் நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்துள்ளது....
கிருஷ்ணகிரி/ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையால் மாணவ, மாணவிகள் சிரமத்துக்கு உள்ளாகினர். பாரூரில் 34.6, நெடுங்கல்லில் 26 மிமீ மழை பதிவானது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரி, ஓசூர், போச்சம்பள்ளி, வேப்பனப்பள்ளி, பர்கூர், ஊத்தங்கரை, சூளகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விடிய, விடியப் பெய்த மிதமான மழை காலை 7.15 மணி வரை நீடித்தது. தொடர்ந்து, சாரல்...
சென்னை: சென்னையில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக தண்ணீர் பெருக்கெடுத்ததால், 8 சுரங்கப்பாதைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக மூடப்பட்டன. சென்னையில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக போக்குவரத்து போலீஸார் நேற்று பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். முதல் கட்டமாக மழைநீர் சூழ்ந்ததால் பெரம்பூர் ரயில்வே சுரங்கப்பாதை, கணேசபுரம் சுரங்கப்பாதை, சுந்தரம் பாயின்ட் சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, கெங்கு ரெட்டி, ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, வில்லிவாக்கம், சூரப்பட்டு அண்டர்...