Google search engine
மேற்குவங்க மாநிலம் சந்தேஷ்காலியில் பாலியல் வன்கொடுமை மற்றும் நில அபகரிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஷாஜகான் ஷேக் மீது அமலாக்கத் துறை பணமோசடி வழக்கு பதிவு செய்துள்ளது. நில அபகரிப்பு குற்றச்சாட்டு தொடர்பாக புதிய வழக்கை பதிவு செய்துள்ள அமலாகத் துறை, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் முதல் தகவல் அறிக்கைக்கு இணையான புதிய அமலாக்கத் துறை வழக்குத் தகவல் அறிக்கை (ECIR) பதிவு...
காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளிலிருந்து வருமான வரித் துறை நேற்று ரூ.65 கோடியை வரி நிலுவையாக பிடித்தம் செய்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் “ஜனநாயகத்துக்கு விரோதமாக வருமான வரித் துறை செயல்படுகிறது” என்று விமர்சித்துள்ளது. கடந்த வாரம், வருமான வரித் துறை காங்கிரஸ் கட்சியின் முக்கியமான நான்கு வங்கிக் கணக்குகளை முடக்கியது. இதை எதிர்த்து, வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் காங்கிரஸ் முறையிட்டது. அதைத் தொடர்ந்து வங்கிக்...
ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் கட்சியின் மற்றொரு எம்.பி. நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் கட்சியை விட்டும் விலகினார்.வரும் மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற உள்ளது. இந்நிலையில் மக்களிடையே செல்வாக்கு இல்லாத அல்லது செல்வாக்கு குறைந்த எம்.பி., எம்எல்ஏ.க்கள் பலரை வரும் தேர்தலில் வேறு தொகுதியில் போட்டியிட வைக்க முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திட்டமிட்டுள்ளார். வேட்பாளர்கள் மாற்றம்: இதற்காக 4-வது கட்டமாக வேட்பாளர்களை மாற்றிய...
கர்நாடகாவில் கடந்த ச‌ட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக பெங்களூரு ஆசிரியர் தொகுதி எம்எல்சி புட்டண்ணா தனது பதவியை ராஜினாமா செய்தார்.ஆனால் அவருக்கு காங்கிரஸ் சார்பாக சீட் வழங்கப்படவில்லை. இதனால் கடந்த வாரம் நடந்த பெங்களூரு ஆசிரியர் தொகுதி சட்டமேலவை இடைத்தேர்தலில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜக - மஜத கூட்டணி சார்பில் ஏ.பி.ரங்கநாத் போட்டியிட்டார்.இந்த தேர்தலில் 16,063 வாக்குகள் பதிவாகின. இந்த வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில்...
மகாராஷ்டிராவில் மொத்தம் 48 மக்களவை தொகுதிகள் உள்ளன. இங்கு கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணி 41 இடங்களில் வென்றது. தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி 5 இடங்களை வென்றது. இந்நிலையில் கோல்ஹாபூரில் சத்ரபதி சிவாஜி குடும்பத்தைச் சேர்ந்த சத்ரபதி ஷாஹு மகாராஜை சரத் பவார் நேற்று சந்தித்தார். அவரை மக்களவை தேர்தலில் மகா விகாஸ் அகாடி கூட்டணி வேட்பாளராக நிறுத்துவதற்கு...
70 பண்டிதர்களால் இந்து சமூகங்களுக்கான நடத்தை விதிமுறைகள் தயாராகி வருகின்றன. இவை, உத்தர பிரதேசம் பிரயாக்ராஜில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள மகா கும்பமேளாவில் வெளியிடப்பட உள்ளன. இந்துக்களில் ஒவ்வொருவரின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான நிகழ்வுகளுக்கான நடத்தைவிதிமுறைகள் அனுசரிக்கப்படுகின்றன. இந்துக்களின் பல்வேறுசமூகங்களால் கடைப்பிடிக்கப்படும் நடத்தை விதிமுறைகள் பெரும்பாலும் சனாதனத்தை அடிப்படையாகக் கொண்டவையாகக் கருதப்படுகிறது. காலப்போக்கின் மாற்றங்களால் சில தவறான சம்பிரதாயங்களும் இதில் கடைப்பிடிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இவற்றை சரி செய்யும் வகையில் இந்துக்களுக்கான...
 “நாங்கள் டெல்லி நோக்கி முன்னேறுவது நிச்சயம். நாளை (பிப்.21) காலை 11 மணியளவில் டெல்லியை நோக்கி முன்னேறுவோம். இனி என்ன நடந்தாலும் அதற்கு அரசாங்கமே பொறுப்பு” என்று விவசாய சங்கத் தலைவர் சர்வான் சிங் பாந்தர் தெரிவித்துள்ளார். வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, கொள்முதலுக்கான உத்தரவாதம், விவசாய கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து டெல்லி நோக்கி செல்லும் போராட்டத்தில் பல்வேறு விவசாய சங்கங்கள் ஈடுபட்டுள்ளன. முன்னதாக,...
கரோனா பெருந்தொற்றால் ஏற்படும் நுரையீரல் சார்ந்த பிரச்சினைகள் குறித்து வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி (சிஎம்சி) மருத்துவமனை ஓரு ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வுக் கட்டுரை பிஎல்ஓஎஸ் என்ற சுகாதார இதழில் வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கரோனாவுக்கு பிறகு ஐரோப்பியர்கள் மற்றும் சீனர்களைவிட இந்தியர்கள் நுரையீரல் சார்ந்த பிரச்சினைகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நுரையீரல் சார்ந்த பிரச்சினை சிலருக்கு ஒரு வருடம் வரை நீடிக்கிறது. மீதமுள்ளவர்கள் வாழ்நாள் முழுவதும் அந்த...
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா - பிஜாப்பூர் மாவட்ட எல்லையில் உள்ளது புவாரி கிராமம். இந்த கிராமத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் இருந்தது. இந்த கிராமத்தில் அவர்கள் சொல்வது தான் சட்டம். தனி அரசாங்கமே நடத்தி வந்த மாவோயிஸ்டுகளை மீறி கிராம மக்கள் ஒன்றும் செய்ய முடியாது. இந்த கிராமத்தில் இருந்து கொண்டே பாதுகாப்புப் படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்துவது, சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள இளைஞர்கள், இளம்பெண்களை மாவோயிஸ்ட் இயக்கத்தில்...
கர்நாடக மாநிலத்தில் கடந்த 2022-ம் ஆண்டு முன் அனுமதியின்றி நடத்திய போராட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் மாநில முதல்வர் சித்தராமையாவுக்கு உயர் நீதிமன்றம் விதித்த அபராத உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று தடைவித்தது. கடந்த பாஜக ஆட்சியில் அரசு ஒப்பந்ததாரர் சந்தோஷ் தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் அமைச்சர் ஈஸ்வரப்பா 40 சதவீத கமிஷன் தொகை கேட்டு நெருக்கடி கொடுத்ததால் இந்த துயர...