Google search engine
டெல்லி முதல்வரின் உதவியாளரால் ஆம் ஆத்மி கட்சி பெண் எம்.பி. ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில் புதிய வீடியோ ஆதாரம் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, ஸ்வாதி மலிவால் அளித்த புகாரின் அடிப்படையில், டெல்லி முதல்வரின் இல்லத்தில் டெல்லி போலீஸாரும், தடயவியல் துறையும் சோதனை நடத்தி வருகின்றனர். டெல்லி மகளிர் ஆணைய முன்னாள் தலைவரும், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பியுமான ஸ்வாதி மலிவால், முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இல்லத்தில் அவரது உதவியாளரால்...
பிரதமர் மோடியின் கருத்துக்கு எதிர்வினையாற்றியுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ‘புல்டோசர்’ தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இண்டியா கூட்டணியினர் புல்டோசரை எங்கு இயக்க வேண்டும் என்பதை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று பிரதமர்...
காங்கிரஸ் சார்பில் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ப.சிதம்பரம் தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு 3 நாட்களுக்கு முன்பு டெல்லியில் இறுதிக்கட்ட ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. அதில் பல்வேறு வாக்குறுதிகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு டெல்லியில் மீண்டும் கூடி கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு இறுதி வடிவம் தந்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்த வார...
பிரதமராக மோடியின் செயல்பாடு தொடர்பான ஆய்வை இப்சாஸ் நிறுவனம் மேற்கொண்டது. கடந்த பிப்ரவரி மாதம் அந்நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி, 75 சதவீதம் பேர் மோடியின் செயல்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 65 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து இருந்தனர். பிரதமர் மோடிக்கான ஆதரவு தொடர்ந்து அதிகரித்து வருவதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 2022-ம் ஆண்டு டிசம்பரில் மோடியின் செயல்பாடு மீதான ஆதரவு 60 சதவீதமாகவும், 2023 பிப்ரவரியில்...
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “மேற்கு வங்கத்தில் அங்கன்வாடி மற்றும் ஆஷா பணியாளர்களின் மாத ஊதியம் ரூ.8,250-ல் இருந்து ரூ.9,000 ஆக அதாவது ரூ.750 உயர்த்தப்படுகிறது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணியாளர்களின் ஊதியம் மாதம் ரூ.500 உயர்த்தப்படும். இதுவரை மாதம் ரூ.6,000 பெற்று வந்த இவர்கள், இனி ரூ.6,500 பெறுவார்கள். அங்கன்வாடி மற்றும் ஆஷா ஊழியர்களின் பணி பெருமை அளிப்பதாக உள்ளது’’ என்று...
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஐஎன்-எஸ்பிஏசி மையத்தில் புதிய தொழில்நுட்ப மையத்தை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவின் விண்வெளி பொருளாதாரம் தற்போது 8 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இதை 2040-ம் ஆண்டுக்குள் பல மடங்கு உயர்த்தத் திட்டமிட்டுள்ளோம். விரைவில் உலக விண்வெளி பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கை 5 மடங்கு உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 2040-ம் ஆண்டுக்குள்...
மேற்குவங்கம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலி தீவுப் பகுதியை, திரிணமூல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஷேக் ஷாஜகான் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ரேஷன் பொருட்கள் கடத்தல், நில அபகரிப்பு, பழங்குடியின பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வது போன்ற செயல்களில் ஷாஜகான் ஈடுபட்டுவந்தார். உயர்நீதிமன்றம் விடுத்தகெடுவையடுத்து ஷேக் ஷாஜகானை மேற்கு வங்க போலீஸார்சமீபத்தில் கைது செய்தனர். இந்நிலையில் ஷாஜகானை சிபிஐயிடம் ஒப்படைக்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம்...
மேற்கு வங்கத்தில் மக்களவை தேர்தலின்போது பாரபட்சமற்ற மற்றும் வன்முறையற்ற வாக்குப் பதிவை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர்கள் மற்றும்எஸ்.பி.க்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் தேர்தல் தயார் நிலை குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று ஆய்வு செய்தார். அதன்பின் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தேர்தலில் அச்சம், மிரட்டல்போன்றவற்றுக்கு இடமில்லை. அரசு அதிகாரிகள் ஆட்சியாளர்களுக்கு சாதகமாக செயல்பட்டால் நாங்கள் பொறுத்துக் கொள்ள...
மேற்குவங்க பொது விநியோக திட்டத்தில் ரூ.10,000 கோடி ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மேற்குவங்கத்தின் சந்தேஷ்காலியை சேர்ந்த திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் ஷாஜகான் ஷேக் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. கடந்த ஜனவரி 5-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள், சந்தேஷ்காலியில் உள்ள அவரது வீட்டுக்கு சோதனையிட சென்றனர். அப்போது 200 பேர் கும்பல், அதிகாரிகள் மீது கொடூர தாக்குதல் நடத்தியது. இதில்...
மணிப்பூரில் அம்மாநில அரசின் அனுமதி இல்லாமல் இடங்களின் பெயரை மாற்றினால் இனி 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.3 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். இது தொடர்பான மசோதா கடந்த திங்கள்கிழமை மணிப்பூர் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் மலைகள், ஏரிகள் உட்பட முக்கிய இடங்களின் பெயர்களை அரசின் அனுமதி இல்லாமல் மாற்றும் போக்கு காணப்பட்டு வருகிறது. இதைத் தடுத்து நிறுத்தும் நோக்கில், ‘மணிப்பூர் இடங்களின் பெயர்கள் 2024’ மசோதா கொண்டுவரப்பட்டது....