Google search engine
பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் நாடு முழுவதும் இருந்து 11,500 பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர். இரு நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.வரும் தேர்தலில் பாஜக 370 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி 400 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் உறுதிபட கூறி வருகின்றனர்....
பாஜக தேசிய கவுன்சில் கூட்டம் கட்சித் தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: மகாபாரதத்தில் கவுரவர்கள் பாண்டவர்கள் என 2 பிரிவினர் இடையே போர் நடந்தது. இதுபோல இப்போது வரும் மக்களவைத் தேர்தலில் 2 பிரிவுகள் உள்ளன.இதில் ஒன்று பாஜக தலைமையிலான தே.ஜ.கூ, மற்றொன்று காங்கிரஸ் தலைமையிலான இண்டி கூட்டணி. இதில் இண்டி கூட்டணி என்பது...
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பி.யாக பதவி வகித்தவர் மஹுவா மொய்த்ரா. இவர் பிரதமர் மோடி, தொழிலதிபர் கவுதம் அதானிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய மக்களவை நெறிமுறைக் குழு அளித்த பரிந்துரையின் பேரில் அவருடயை மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிலுவையில்...
எல்லையில் போர் வீரர்கள் போல், விவசாயிகள் நாட்டுக்காக போராட்டம் நடத்தி வருகின்றனர் என ராகுல்காந்தி கூறியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று பாரத் நியாய யாத்திரை மேற்கொண்டார். அப்போது பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: பஞ்சாப் - ஹரியாணா எல்லையில் தற்போது போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், எல்லையில் போர் வீரர்களைப்போல நாட்டுக்காக போராடுகின்றனர். நாட்டு நலனுக்காக விவசாயிகள் போராட்டம் நடத்துவது, போர்...
நாட்டிலேயே முதன்முறையாக உத்தராகண்ட் மாநிலத்தில் அவசர மருத்துவ சேவையில் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட உள்ளதாக மத்திய விமானத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் பக்கத்தில், “விரைவிலேயே உத்தராகண்ட் மாநிலத்தில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இந்த ஹெலிகாப்டர் நிறுத்தப்பட்டிருக்கும்.150 கி.மீ. சுற்றளவு: அங்கிருந்து 150 கி.மீ. சுற்றளவில் அது சேவை வழங்கும். அவசர சிகிச்சை தேவைப்படுவோர் ஹெலிகாப்டர்...
15 மாநிலங்களில் ஏப்ரல் 2-ம் தேதியுடன் காலியாகவிருக்கும் 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு பிப்ரவரி 27-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் குஜராத்தில் இருந்து பாஜக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, கோத்ரா பகுதி மூத்த தலைவர் ஜஸ்வந்த்சிங் பார்மர், பிரபல வைர வியாபாரி கோவிந்த் தோலக்கியா, மாநில பாஜக ஓபிசி மோர்ச்சா தலைவர் மாயங்க் நாயக் ஆகிய நால்வரும் நேற்று காந்திநகரில் வேட்பு...
உ.பி.யில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குரலில் பேசி பணமோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலம், பிலிபித் மாவட்டத்தின் பர்கேரா சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்ஏ கிஷன்லால் ராஜ்புட். பாஜகவைச் சேர்ந்த இவருக்கு கடந்த ஜனவரி மாதம் 4ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சக அலுலகத்திலிருந்து பேசுவதாக கூறி ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர் தான்...
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் எல்.முருகன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களில் 56 பேரின் பதவிக் காலம் வரும் ஏப்ரல் மாதம் முடிவடைய உள்ளது. இதையடுத்து, புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதன்படி, கடந்த 8-ம்...
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: தேர்தலில் விவிபாட் இயந்திரங்கள் அதிகளவில் பயன்படுத்துவது குறித்து விவாதிக்க, தேர்தல் ஆணையத்திடம் இண்டியா கூட்டணி கடந்தாண்டு ஜூன் முதல் நேரம் கேட்டு வருகிறது. 100 சதவீத விவிபாட் இயந்திரங்களை அனுமதிக்கவில்லை என்றால், அது இந்திய வாக்காளருக்கு மிக மோசமான விஷயமாக இருக்கும். விவிபாட் இயந்திரங்களுடன் கூடிய வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கையை அதிரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம்...
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை உடைத்து பாஜகவுடன் கூட்டணி முதல்வராக பதவி வகித்து வருபவர் ஏக்நாத் ஷிண்டே. ஏக்நாத் தலைமையி லான சிவசேனாதான் உண்மையான சிவசேனா என்று தலைமைத் தேர்தல் ஆணையமும் அறிவித்துவிட்டது. இந்நிலையில் அண்மையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து முன்னாள் மத்திய அமைச்சர் மிலிந்த் தியோரா விலகி, முதல்வர் ஏக்நாத் தலைமையிலான சிவசேனா கட்சியில் இணைந்துள்ளார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) ஆட்சியின்போது மத்திய அமைச்சராகவும் மிலிந்த்...