பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மாவுக்கு செக் மோசடி வழக்கில் மும்பை நீதிமன்றம் பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
ஹார்ட் டிஸ்க் வாங்கியதற்காக ராம் கோபால் வர்மா கொடுத்த செக் வங்கியில் பணமில்லாமல் இரண்டு முறை திரும்பி வந்தைதயடுத்து அவர் மீது கடந்த 2018-ம் மீது காசோலை மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு நடப்பாண்டு ஜனவரி 21-ம் தேதி அந்தேரி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ஒய்.பி.புஜாரி முன்பு...
மகா கும்பமேளாவில் தாக்குதல் நடத்த சதி: ஐஎஸ்ஐ உடன் தொடர்புடைய பப்பர் கல்சா தீவிரவாதி உ.பி.யில் கைது
admin - 0
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உடன் தொடர்பு வைத்திருந்த பப்பர் கல்சா சர்வதேச தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் உ.பி.யில் நேற்று கைது செய்யப்பட்டார்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரை அடுத்த குர்லியான் கிராமத்தைச் சேர்ந்தவர் லஜர் மசி. ஜெர்மனியின் பப்பர் கல்சா இன்டர்நேஷனல் (காலிஸ்தான் தீவிரவாத அமைப்பு) தலைவர் ஸ்வர்ன் சிங் (எ) ஜீவன் பாவ்ஜியுடன் இணைந்து செயல்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புடன் லஜர் நேரடி தொடர்பு...
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் ஜனவரி 13-ம் தேதி தொடங்கி 45 நாட்கள் நடைபெற்ற மகா கும்பமேளாவில் பக்தர்கள் தங்குவதற்கு கூடார நகரம் அமைக்கப்பட்டது. இதில் நட்சத்திர விடுதிகளின் வசதிகளை உ.பி. அரசு செய்திருந்தது. மாநில சுற்றுலா கழகத்தின் திரிவேணி சங்கம கரை காலனியில் 2,100 கூடாரங்கள், 110 தனிக்குடில்கள் கட்டப்பட்டிருந்தன. இவற்றில் தங்குவதற்கு இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினர் இணையதளத்தில் முன்பதிவு செய்தனர்.
சர்வதேச தரத்தில் நவீன வசதிகளுடன்...
திருமலை திருப்பதி தேவஸ்தானம் கடந்த 1983-ம் ஆண்டு முதல், அப்போதைய முதல்வர் என்.டி.ராமாராவின் ஆலோசனையின் பேரில் திருமலையில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை பணத்தை அரசு வங்கிகளில் டெபாசிட் செய்து, அதில் வரும் வட்டியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறது. முதலில் தினமும் 2,000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தற்போது ஒரு லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
இதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தினமும் ரூ.44 லட்சம் செலவிடுகிறது. இந்த அன்னதானத்தை...
பெங்களூரு பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா தமிழகத்தை சேர்ந்த பாடகியை மணந்தார்: அண்ணாமலை உள்ளிட்டோர் வாழ்த்து
admin - 0
பெங்களூரு பாஜக எம்.பி.யும், பாஜக இளைஞர் அணி தலைவருமான தேஜஸ்வி சூர்யா தமிழகத்தை சேர்ந்த கர்னாடக சங்கீத பாடகி சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத்தை நேற்று திருமணம் செய்துகொண்டார். பெங்களூருவில் நடந்த இந்த திருமணத்தில் பாஜக மூத்த தலைவர் பி.எல்.சந்தோஷ், தமிழக தலைவர் கே.அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பெங்களூருவை சேர்ந்த வழக்கறிஞரான தேஜஸ்வி சூர்யா பாஜக இளைஞர் அணியில் தீவிரமாக செயல்பட்டார். அவர் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில்...
மகா கும்பமேளாவில் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவம் ஒன்றுகூட நிகழவில்லை என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 26 வரை வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதுகுறித்து உ.பி. சட்டப்பேரவையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று பேசியதாவது: பிரயாக்ராஜில் 45 நாட்கள் நடைபெற்ற மகா கும்பமேளாவுக்கு நாடு மற்றும் உலகம் முழுவதிலும்...
ஒடிசாவில் மூளைச்சாவு அடைந்த 16 மாதக் குழந்தையின் உறுப்புகள் தானம்: 2 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டது
admin - 0
ஒடிசாவில் மூளைச்சாவு அடைந்த 16 மாதக் குழந்தையின் உடல் உறுப்புகள் தானத்தால் 2 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி 16 மாதக் குழந்தையான ஜன்மேஷ் லேன்கா சேர்க்கப்பட்டார். தவறுதலாக அந்த குழந்தை, வாய் வழியாக விழுங்கிய பொருள் ஒன்று மூச்சுக்குழாயை அடைத்தது. இதனால் மூச்சுத்திணறலுடன் சேர்க்கப்பட்ட குழந்தைக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி...
ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய் திட்டத்திற்காக எஸ்எல்பிசி சுரங்கம் தோண்டப்பட்டது. ஸ்ரீ சைலம் முதல் நல்கொண்டா வரை செயல்படுத்தப்படும் இக்கால்வாய் திட்டத்தில் 14 கி.மீ சுரங்கம் தோண்டப்பட்டது. கடந்த 10 நாட்களுக்கு முன் சுரங்கத்தில் உள்ள மேற்கூரை திடீரென சரிந்ததால் 8 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கி கொண்டனர். இவர்களை மீட்க இந்திய ராணுவப்படை, பேரிடர் மீட்பு குழு, தீயணைப்பு படையினர் மற்றும் போலீஸார் என இரவும், பகலுமாக தீவிர மீட்பு...
ஆன்லைன் கேம்ஸ் விளையாடுவதை குடும்பத்தினர் கண்டித்ததால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர் ஒருவர் தனது பெற்றோர் மற்றும் சகோதரியை கற்களால் தாக்கி கொலை செய்தார்.
ஒடிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டம், ஜெயபடா சேத்தி சாகி பகுதியை சேர்ந்த பிரசாந்த் சேத்தி என்கிற காளியா (65), அவரது மனைவி கனகலதா (62), மகள் ரோசலின் (25) ஆகிய மூவரும் நேற்று காலையில் தங்கள் வீட்டில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். கிராம மக்கள் அளித்த தகவலின்...
மகா கும்பமேளா பற்றி ஆசியாநெட் சேனலில் விமர்சனம்: தலைமை அதிகாரிக்கு உரிமையாளர் அறிவுறுத்தல்
admin - 0
மகா கும்பமேளா பற்றி விமர்சனம் செய்த ஆசியாநெட் டி.வி. சேனலின் உயர் அதிகாரிக்கு, ‘ஒவ்வொரு இந்துவுக்கும் நம்பிக்கை முக்கியம்’ என்பதை உரிமையாளர் ராஜீவ் சந்திர சேகர் நினைவு படுத்தியுள்ளார்.
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி சமீபத்தில் நடந்து முடிந்தது. கோடிக்கணக்கான மக்கள் இதில் புனித நீராடினர். இந்நிலையில் ஆசியாநெட் நியூஸ் என்ற மலையாள செய்தி சேனலில் கடந்த 1-ம் தேதி ‘கவர் ஸ்டோரி’ என்ற தலைப்பில் வெளியான...









