இந்திய பொருளாதார வளர்ச்சியின் முதுகெலும்பாக குறு, சிறு தொழில் துறை செயல்படுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பட்ஜெட்டுக்கு பிந்தைய கருத்தரங்கில் காணொலி மூலம் அவர் நேற்று பேசியதாவது: இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. இதன்மூலம் தொழில்துறையில் புதிய நம்பிக்கை பிறந்திருக்கிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் 3-வது முறையாக பதவியேற்று உள்ளது. கடந்த பிப்ரவரியில் தாக்கல்...
இந்தியாவிலிருந்து விசா வேண்டி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை கடந்த 2024-ம் ஆண்டில் 67.5 லட்சத்தைத் தொட்டுள்ளது. இதையடுத்து, கரோனாவுக்கு முந்தைய விறுவிறுப்பான நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக, கரோனாவுக்கு முந்தைய 2019 காலகட்டத்தில் விசா வேண்டி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 65 லட்சமாக இருந்தது. இந்த நிலையில், கடந்த ஆணடில் அந்த எண்ணிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது . இதுகுறித்து விசா ஆதாரம் மற்றும் தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனமான விஎப்எஸ் குளோபலின் தலைமை செயல்பாட்டு அதிகாரியான...
தரவுப் பாதுகாப்பு என்ற பெயரில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை மத்திய அரசு பலவீனப்படுத்துகிறது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து 'எக்ஸ்' தளத்தில் கார்கே நேற்று வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஒருபுறம், தவறான தகவல்களை அளிப்பதில் இந்தியா கடந்த பல ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது. மறுபுறம், காங்கிரஸ் கூட்டணி அரசு கொண்டு வந்த தகவல் அறியும் உரிமை சட்டத்தை (ஆர்டிஐ) தரவுப் பாதுகாப்பு என்ற...
உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் பழம்பெரும் கல்வி நிறுவனமான பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் உள்ளது. இதன் வளாகத்தில் இந்திய பொருளாதார அளவீட்டு சங்கத்தின் 59-வது மாநாடு நடைபெற்றது. இதில் முக்கிய விருந்தினராக பங்கேற்ற மத்திய அரசின் நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெரி பேசியதாவது: நாடு முழுவதும் உள்ள நகரங்களில் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாத்து நவீன வளர்ச்சியை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு வாராணசியின் வளர்ச்சி ஒரு முன்மாதிரியாக...
துபாயில் இருந்து 14.8 கிலோ தங்க நகைகளை கடத்தி வந்த‌தாக நடிகை ரன்யா ராவ் பெங்களூரு சர்வதேச‌ விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவை சேர்ந்த ரன்யா ராவ் (32) கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‛வாகா' திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ந‌டித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு ரன்யா ராவ் துபாயில் இருந்து...
அயோத்தி ராமர் கோயிலை குண்டு வீசி தகர்க்க பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ செய்த சதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உ.பி. இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து 2 கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோயில் புதிதாக கட்டப்பட்டு கடந்தாண்டு ஜனவரியில் திறக்கப்பட்டது. அப்போது முதல் அங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதும் இருந்து வந்து செல்கின்றனர். இங்கு 1529-ம் ஆண்டு முகலாயர்...
பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கு விவகாரத்தில் மகாராஷ்டிர அமைச்சரான தனஞ்செய் முண்டே நேற்று ராஜினாமா செய்தார். மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்த்தைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் சந்தோஷ் தேஷ்முக் என்பவர் கடந்த டிசம்பர் மாதம் படுகொலை செய்யப்பட்டார். இவரது கொலை விவகாரம் மகாராஷ்டிர மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பீட் மாவட்டத்தில் பிரபலமான பஞ்சாயத்துத் தலைவராகவும், மக்களின் நன்மதிப்பைப் பெற்றவராகவும் சந்தோஷ் தேஷ்முக் இருந்ததால் அவரது கொலை வழக்கு...
பார்வை குறைபாடு உடையவர்கள் நீதிபதியாக தகுதியானவர்கள்தான் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பார்வைக் குறைபாடு உடைய ஒருவர் நீதிபதி பணிக்கு விண்ணப்பிக்க விரும்பி உள்ளார். ஆனால், பார்வை குறைபாடு உடையவர்கள் நீதிபதி பணியிடத்துக்கான தேர்வில் பங்கேற்க முடியாது என மத்திய பிரதேச நீதித் துறை சேவை விதிகள் (6ஏ) கூறுகின்றன. இந்த விதிகளை ரத்து செய்யக் கோரி, பார்வைக் குறைபாடு உடையவரின்...
உ.பி. ராஜஸ்தான் மற்றும் ம.பி. ஆகிய மாநிலங்களில் பரவியுள்ள பகுதி சம்பல் பள்ளத்தாக்கு. இந்த பள்ளத்தாக்கு கொள்ளை கும்பலின் கேந்திரமாக விளங்கியது. ஜலோனின் டிக்ரி கிராமத்தில் இருந்து சம்பல் கொள்ளை கும்பலுக்கு மாறிய குசுமா நைனின் வாழ்க்கை மர்மம் நிறைந்தது. சமாஜ்வாதி கட்சியில் இணைந்து எம்.பி.யான கொள்ளை கும்பல் தலைவி பூலன் தேவியை அடுத்து குசுமா நைனின் பெயரும் பொதுமக்களுக்கு பயத்தை ஏற்படுத்தியது. குசுமா நைன் 7 ஆண்டாக ஆயுள்...
உலக வன உயிரின தினத்தையொட்டி குஜராத்தில் கிர் தேசிய பூங்காவில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று சிங்கங்களை பார்வையிட்டார். இயற்கையை பாதுகாப்பது இந்தியாவின் கலாச்சாரம் என்று அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டு உள்ளார். கடந்த சனிக்கிழமை இரவு பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தின் ஜாம் நகருக்கு சென்றார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜாம்நகரில் அமைந்துள்ள ரிலையன்ஸ் குழுமத்தின் 3,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட வன்தாரா வனப்பகுதியை அவர் பார்வையிட்டார். இது யானைகள் சரணாலயமாக...