கேரள கோயில் விழாவில் 2 யானை மிரண்டு ஓடியதில் 3 பேர் உயிரிழப்பு: நடந்தது என்ன?

0
41

கேரளா கோயில் திரு​விழா​வின் போது யானைகள் மிரண்டு ஓடிய​தில் 3 பக்தர்கள் உயிரிழந் தனர். 30-க்​கும் மேற்​பட்​டோர் உயிரிழந்​தனர்.

கேரள மாநிலம் கோழிக்​கோடில் மனக்​குலங்கரா விஷ்ணு கோயில் உள்ளது. இங்கு நேற்று​முன்​தினம் திரு​விழா நடைபெற்​றது. அதற்காக யானைகள் ஊர்வலம் நடத்​த​வும் அரசு அனுமதி பெற்​ற​தாகக் கூறப்​படு​கிறது. அதற்காக 2 யானைகள் அலங்​கரிக்​கப்​பட்டு அழைத்து வரப்​பட்டன. அன்று மாலை 6 மணிக்கு திரு​விழா கோலாகலமாக தொடங்​கியது. அப்போது பட்டாசுகள் வெடித்து மேள, தாளங்கள் இசைக்​கப்​பட்டன.

அந்த சத்தத்தை கேட்ட யானைகள் மிரண்டு அங்கும் இங்கும் ஓடின. முதலில் 2 யானை​களும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. பின்னர் அருகில் இருந்த கட்டிடத்​தின் சுற்றுச்​சுவரை மோதி அங்கும் இங்கும் பிளிறிக் கொண்டே ஓடின. இதில் சுற்றுச்​சுவர் நொறுங்கி விழுந்​தது. அதில் பக்தர்கள் சிலர் சிக்​கிக் கொண்​டனர். கோயி​லில் கூடி​யிருந்த பக்தர்கள் பயத்​தில் அங்கும் இங்கும் சிதறி ஓடினர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழந்​தனர். மேலும், 30-க்​கும் மேற்​பட்​ட​வர்கள் படுகாயம் அடைந்​தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்​துவ​மனை​களில் சேர்க்​கப்​பட்​டுள்​ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்​போது, ‘‘கோ​யில் திரு​விழா​வில் உயிரிழந்​தவர்கள் அம்முகுட்டி, லீலா, ராஜன் என்று அடையாளம் காணப்​பட்​டுள்​ளது. கோயில் திரு​விழா​வின் போது 2 யானைகளை ஊர்வலமாக அழைத்து செல்ல அனுமதி பெற்றுள்ளது விசா​ரணை​யில் தெரிய வந்துள்ளது’’ என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here